யூகித்தல் Cleveland, Tennessee, USA 62-0408 1நன்றி. சகோதரனே, உமக்கு நன்றி. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நாம் சிறிது நேரம் அப்படியே நின்றவாறு நம்முடைய தலைகளை வணங்குவோம். எங்கள் பரலோகப் பிதாவே, இந்தக் காலை வேளையில் மீண்டும் கர்த்தருடைய வீட்டிற்கு வந்து, சந்தோஷத்தால் நிரம்பியுள்ள இந்த ஜனங்களையும், இந்த மேய்ப்பரையும், அவருடைய மனைவியையும், அவருடைய அன்பார்ந்தவர்களையும் சந்திக்கும்படியான சிலாக்கியத்திற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேவனே, இப்பொழுது நாங்கள் கற்றுக்கொள்ள, வார்த்தையைக் கற்றுக்கொள்ள உட்கார்ந்திருக்கையில், நீர் எங்களை சந்தித்து, எங்கள் ஆத்துமாக்களுக்கான ஆகாரத்தை எங்களுக்கு அருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, நாங்கள் இதற்காக வாஞ்சித்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2இக்காலை வேளையில் இந்த வகுப்பிற்காக இங்கே மீண்டும் திரும்பி வந்திருப்பதை நாங்கள் ஒரு சிலாக்கியமாகக் கருதுகிறோம். நான் ஒருவகையாக களைப்படைந்தவனாக இருக்கையில், எதிர்பாராத விதமாக சகோதரன் லிட்டில்ஃபீல்ட் அவர்களுடன் கொஞ்ச நேரம் பேசி, சிறிது ஐக்கியம் கொண்டேன். கடந்த இரவு இங்கே வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, நாங்கள் அவ்வளவு மகத்தான ஒரு தருணத்தைக் கொண்டிருந்தோம். நாங்கள் இங்கிருந்து செல்லும் முன்பதாக, திரும்பி வந்து ஞாயிறு பள்ளி வகுப்பில் பேசும்படி முயற்சிப்பேன் என்று இன்று காலையில் நான் அவரிடம் கூறினேன். எனவே சிறிது தாமதமாகி விட்டது. என்னைக் காண வந்திருந்த சில நண்பர்களை நான் கொண்டிருந்தேன், நான் அங்கே வெளியே அவர்களுடன் பேசினேன். அதன்பிறகு, எனக்கு தருணம் கிடைத்தபோது, இந்த சபை அங்கே எவ்வாறு கட்டப்பட்டது என்பதைக் காணும்படிக்கு, கட்டிடத்தின் அடித்தளத்திற்கு இறங்கிச் சென்றேன், ஏனெனில் நாங்கள் வசிக்கும் ஊரில், நாங்கள் ஒரு கட்டிடத்தைக் கட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான கட்டிடத்தை நாங்கள் மிகவும் விரும்புகிறோம் - இவ்விதமாக கட்டப்பட்டதை. இங்கேயுள்ள சத்தத்தை வெளியேற்றும் (acoustic-bouncer) இதை நான் விரும்புகிறேன், நீங்கள் அதை என்னவாக அழைத்தாலும். அதனால் சத்தத்தை மிகவும் நன்றாக கவனித்துக்கொள்ள இயலும் என்பது போல் காணப்படுகிறது. 3அதன்பிறகு மீண்டும், நான் - நான் நம்புகிறேன், இங்கே அவர்கள் யாருமேயில்லை என்றால் (அவர்கள் இங்கிருந்தால், அது சரிதான்), இங்கேயுள்ள இந்தத் தங்கும் விடுதிக்கு நன்றி கூற விரும்புகிறேன்: சிட்டி வியூ தங்கும் விடுதி, நான் அங்குதான் நேற்றிரவு தங்கினேன். என்னுடைய ஜீவியத்திலேயே மிகக்குறைந்த தடவைகள் தான் நான் இலவசமாக விடுதியில் தங்கியிருக்கிறேன், ஆனால் கடந்த இரவு அவ்வாறுதான் தங்கினேன். அவர்கள் அதற்காக என்னிடம் பணம்கூட வாங்கவில்லை. இப்பொழுது, அது உண்மையிலேயே அருமையானது. என்னுடைய மகனும் கூட லேகி விடுதியில் தங்கியிருந்தான், அவர்கள் அவனுக்கும் அதற்காக கட்டணம் வசூலிக்க கூட இல்லை. கடந்த இரவில் இங்கே கூட்டத்திற்கு அல்லது ஏதோவொன்றிற்கு ஒன்றாகக் கூடி வந்திருந்த ஜனங்கள் - அவர்களுக்கும் விலையைக் குறைத்து மற்றும் காரியங்களைச் செய்தனர் என்பதை அறிகிறேன். நீங்கள் இன்னும் இங்கேயிருப்பீர்களானால், போய் அது சரிதானா என்று பார்த்து, நீங்கள் உண்மையாகவே அந்த ஜனங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருங்கள். சிலசமயங்களில் நாம் இங்கே ஒரு - ஒரு கன்வென்சன் கூட்டத்திற்கு வந்து, அதில் எப்பொழுதாவது பங்குகொள்ள விரும்புகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மனிதர்கள் ஒவ்வொரு இரவும் இங்கிருந்து மூட்டை முடிச்சுகளை சுமந்துகொண்டு வெளியே செல்கிறார்கள் என்று நம்புகிறேன். 'மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்' என்று எழுதப்பட்டுள்ளது என்று உங்களுக்குத் தெரியும். 4இக்காலையில் மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர் இங்கேயிருக்கும் நம்முடைய சகோதரன் லிட்டில்ஃபீல்டு அவர்களைக் குறித்து அருமையான பாராட்டுகளை நல்கினார். அவர், 'நல்லது...' என்றார். நான், 'நான் உம்மிடம் பணத்தைச் செலுத்த விரும்புகிறேன்' என்றேன். அவர், 'வேண்டாம். அது செலுத்தப்பட்டு விட்டது' என்றார். நான், 'சகோதரன் லிட்டில்ஃபீல்ட் அதை செய்தாரென்று சொல்லுகிறீர்களா?' என்று கேட்டேன். அவர், 'இல்லை. நாங்கள் அதை உமக்குக் கொடுக்க விரும்புகிறோம்' என்றார். நான், 'ஓ, என்னே' என்றேன். நான் - நான், 'நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஐயா' என்றேன். 5அவர், 'சரி, சரி. திரு. லிட்டில்ஃபீல்ட் அவர்கள் இங்கே சுற்றிலுமுள்ள ஏழையான ஜனங்கள் மற்றும் காரியங்களைக் குறித்து அக்கறை எடுத்து, ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய முயற்சிக்கும் விதத்துக்காக நாங்கள் அவருக்கு பெரும் மதிப்பு கொடுக்கிறோம். நாங்கள் அதை கனப்படுத்துகிறோம். எனவே அவருக்கு உதவி செய்யும்படி எங்களால் இயன்ற சிறிய காரியத்தை, இவ்விதமாக எங்கள் சார்பாக செய்கிறோம்' என்றார். அது உண்மையிலேயே அருமையானது. தங்கும் விடுதிக்கு ஆகும் பணத்தை எடுத்து அதை அவருக்கு கொடுக்க முயற்சித்தேன். அவர் அதைப் (பெற்றுக்கொள்ள) வில்லை. எனவே அது அருமையானது. தேவன் அதற்காக அம்மனிதர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். பில்லி தான் லேகி விடுதியில் எங்கே தங்கியிருந்தான் என்பதைக் குறித்து அவன் கூறினான், அவன் எப்போதும் சந்தித்ததிலேயே அருமையான சீமாட்டிகளில் ஒருத்தி அங்கே இருந்தார்களாம். பரிசோதனை நேரத்திற்குப் பிறகு அவன் சிறிது நேரம் கூட தங்க வேண்டியிருந்தது. 'அதெல்லாம் சரிதான். கூடுதலான கட்டணமில்லை, எதுவுமேயில்லை. அதற்கு எந்தக் கட்டணமுமில்லை' என்று கூறினான். நான் - நான் அம்மாதிரியான ஜனங்களுடன் ஜீவிக்க விரும்புகிறேன். அது உண்மையிலேயே அருமையானது. அம்மாதிரியான ஒரு ஆவியைக் கொண்ட அவர்களுடன் சேர்ந்து உங்களால் உழைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். மிக மோசமான ஆவியைப் பெற்றிருக்கிறவர்களோடு சேர்ந்து உங்களால் உழைக்க முடியாது என்பதும் உங்களுக்குத் தெரியும். அந்த - அந்த வகையான ஜனங்களைத் தான் நீங்கள் கவனிக்க வேண்டும், நீங்கள் அவர்களிடம் எதுவுமே கூற இயலாது. அவர்கள் இப்பொழுதும் அமர்ந்துள்ளனர், அங்கே பேச வேண்டிய அவசியமேயில்லை. அவர்கள் அப்படியே தங்கள் வழியைப் பெற்றிருக்கின்றனர், அவ்வளவு தான். நல்லது, வழக்கமாக ஞாயிறு பள்ளியானது, எனது சொந்த சபையில் நான்கு அல்லது ஐந்து மணிகள் நீடிக்கும், எனவே... நம்மால் அதைச் செய்ய முடியாது, ஏனெனில் நமக்கு இங்கே ஏறக்குறைய நாற்பத்தைந்து, ஐம்பது நிமிடங்கள் தான் உள்ளன, நாம் இந்தக் காலை வேளையில் வார்த்தையின் பேரில் சிறிது பேச விரும்புகிறோம். 6இப்பொழுது, உங்கள் வேதாகமங்களைக் கொண்டிருக்கிற நீங்கள், எண்ணாகமம் 14-ம் அதிகாரத்திற்கு வேதாகமத்தை என்னுடன் திருப்ப விரும்புகிறேன். எண்ணாகமம் 14ம் அதிகாரத்தின் ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். நாம் ஏறக்குறைய 37ம் வசனத்திலிருந்து தொடங்கலாம். இப்பொழுது, இந்த வாசிப்பைக் கூர்ந்து கவனியுங்கள். (எண்ணாகமம் 14:37-45) சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய ...யோசுவாவும்... (யோசுவா), எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் மாத்திரம் உயிரோடிருந்தார்கள். மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள். அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள். மோசே அவர்களை நோக்கி:... (இப்பொழுது, இதைக் கவனியுங்கள்)... நீங்கள் இப்படிக் கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு... ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார். அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்கு முன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான். ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தர் - கர்த்தருடைய... (மற்றும்)... உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை. அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கி வந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள். இப்பொழுது, இது ஒரு ஞாயிறு பள்ளியாக உள்ளது, எனவே நீங்கள் ஒரு மகத்தான போதகரை, சகோதரனை இங்கே பெற்றிருக்கிறீர்கள், அவர் நம்முடைய விலையேறப்பெற்ற சகோதரரான லிட்டில்ஃபீல்ட் ஆவார். நான் ஞாயிறு பள்ளி வகுப்பை அணுகுவதைக் குறித்து ஒருவகையாக கொஞ்சம் தயக்கமான உணர்வைக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இதன்பேரில் ஒரு சிறு பின்னணியைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். 7இப்பொழுது, நம் அனைவருக்கும் தெரியும், இந்த... பழைய ஏற்பாட்டில் சம்பவித்த எல்லா காரியங்களும் இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கும் காரியங்களுக்கு திருஷ்டாந்தங்களாக உள்ளன. நான் கடந்த இரவில் சொன்னபடியே, நிஜமானது வருவதற்கு முன்பாக ஒரு நெகட்டிவுடைய நிழலாட்டத்தை (shadow) தேவன் அனுப்புகிறார். மேலும் பழைய ஏற்பாடானது புதிய ஏற்பாட்டின் ஒரு நிழலாட்டமாக உள்ளது; சூரியன் உதிக்கிற வரை சூரியனுடைய நிழலை சந்திரன் பிரதிபலிப்பது போன்றது இது. இப்பொழுது, நாம் இரவு நேரத்தில் சந்திரனுடைய நிழலில் நடக்கிறோம். ஆனால் சூரியன் உதிக்கும் போது, நமக்கு உண்மையான சூரிய வெளிச்சம் உண்டு. ஆனால் சந்திரனானது நாம் கொண்டிருக்கிற வெளிச்சத்தை நமக்குக் கொடுக்கும்படி சூரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்க மாத்திரம் செய்கிறது. இப்பொழுது, பழைய ஏற்பாடானது வரப்போகிற புதிய ஏற்பாட்டினுடைய முன்னடையாளமாகவும் நிழலாகவும் இருந்தது. சந்திரன் பிரதிபலித்தது போல, ஜனங்கள் தாங்கள் கொண்டிருந்த வெளிச்சத்தில் நடந்தனர். ஆனால் இப்பொழுது அது... எபிரெயர் 1ல், 'பூர்வகாலங்களில் (பழங்காலங்களில்)... பங்குபங்காகவும் வகைவகையாகவும் (பல வகைகளில்), தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாளில் தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்.' இப்பொழுது, அது மகிமையாக உள்ளது. 8இப்பொழுது, இஸ்ரவேலர் பாவம் செய்திருந்தனர், அவர்கள் முறுமுறுத்துக்கொண்டும், முறையிட்டுக் கொண்டும் இருந்தனர். அவர்கள் காதேஸ் பர்னேயா என்று அழைக்கப்படுகிற ஒரு இடத்திற்கு வந்தார்கள். அது உண்மையாகவே நியாயத்தீர்ப்பின் ஆசனமாக இருந்தது, அங்கிருந்து தான் நியாயத்தீர்ப்பு புறப்பட்டு சென்றது. அங்குதான் இஸ்ரவேலர் நியாயந்தீர்க்கப்பட்டனர்: காதேஸ் பர்னேயாவில். அது யோர்தானுக்கு மறுகரையில் வனாந்தரத்திலிருந்த ஒரு சிறு இடமாக இருந்ததாக நாம் கூறினோம், அங்கே ஒரு சில பேரீச்ச மரங்கள் இருந்தன. அவைகள்... அங்கே ஒரு மகத்தான நீரூற்றும், அநேக சிறு நீரூற்றுகளும் இருந்தன, நாம் இங்கே பெற்றிருக்கக் கூடிய நியாயத்தீர்ப்பின் வீடாகிய தேவனுடைய சிங்காசனம் மற்றும் வரப்போகிற நியாயத்தீர்ப்பின் ஸ்தலங்கள் குறித்த ஒரு அழகான முன்னடையாளமாக அது இருக்கிறது, அது இதைத்தான் அர்த்தப்படுத்துகிறது, ஏனெனில் காதேஸ்பர்னேயா என்பதற்கு நியாயத்தீர்ப்பு என்று அர்த்தமாகும். இஸ்ரவேலர் வாதாடினதினிமித்தமும், அவர்களுடைய கீழ்படியாமையினிமித்தமும், தேவனுடைய திட்டத்தில் குறிக்கிட்டதினிமித்தமும், அவர்கள் அங்குதான் நியாயந்தீர்க்கப்பட்டனர்: இன்றைய நாளுக்குரிய பெரிய முன்னடையாளம். சபை தன்னுடைய வித்தியாச பேதங்களால், தேவனுடைய திட்டத்தில் குறுக்கிடுகிறது. நாம் ஒரே இருதயத்தோடும், ஒரே ஆத்துமாவோடும், ஒரே மனதோடும் கூடிவர வேண்டுமென்று தேவன் விரும்புகிறார், உண்மையாகவே பெந்தெகொஸ்தே மீண்டும் திரும்பி வருதல். 9ஆனால் நீங்கள் பாருங்கள், நாம் அதிகமான வித்தியாச பேதங்களைப் பெற்றிருக்கிறோம், நாம் இந்த விதமாக அதை விரும்புகிறோம், அது இவ்விதமாகவோ, இதுவாகவோ போகவில்லையென்றால், நாம் போகவே மாட்டோம்... ஓ, அது எவ்வாறு இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியும். நாம் அப்படியே... நாம்... அது... தேவன் மீண்டுமாக நம்மை நியாயத்தீர்ப்பின் ஆசனத்திற்குக் கொண்டு வருகிறார் (பாருங்கள்?), நாம் அதை நிச்சயம் நிறுத்தியாக வேண்டும். தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார், நாம் சரியாக அதற்குள் வந்து, (அங்கிருந்து) தொடங்கலாம். இதையும் அதையும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கும்படி காத்திருக்க வேண்டாம். நீங்கள் நீங்களாகவே செயல்படுங்கள். அந்த வழியில் செல்லும்படி தேவனால் நியமிக்கப்பட்டவர்களிடமாக அவர் அதைக் கொண்டு வருவார். புரிகிறதா? நீங்கள் அப்படியே உங்களுக்கு சொந்தமானதை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய - உங்களுடைய அசையாமல் நிலைத்து நிற்கும் தன்மையாக உள்ளது. நீங்கள் நிலைத்து நில்லுங்கள். அடுத்த நபர் அதைச் செய்யவில்லையென்றால், நமக்கு எப்படித் தெரியும், அவன்... அதை எடுத்துக் கொள்ளுவதற்கு அவனுக்கு (அருளப்படாமல்) இருக்கலாம். 'என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கின்றன. பிதா எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.' இப்பொழுது, அது அவ்வாறு இல்லையென்றால், தவறான ஏதோவொன்றைக் கிறிஸ்து சொன்னார். 10இப்பொழுது, நான் 'யூகித்தல்' என்ற பாடத்தின் பேரில் போதிக்கப்போகிறேன். அது வெறுமனே 'யூகித்தல்.' இப்பொழுது, நாம்... 'யூகித்தல்' என்பதற்கு, 'உண்மையாகவே அதிகாரமின்றி துணிந்து செய்தல் அல்லது அது அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளுதல்' என்று வெப்ஸ்டர் அகராதி கூறுகிறது. 'யூகித்தல்' என்ற வார்த்தைக்கு அதுதான் அர்த்தம்: 'அதிகாரமின்றி போ, அல்லது வெறுமனே அது அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளுதல்.' இப்பொழுது, அதைச் செய்கிற அநேக ஜனங்கள் இருக்கிறார்கள்: தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக வெறுமனே எடுத்துக் கொள்ளுதல். 'அது சரிதான். ஓ, அதை செய்வது சரிதான்.' அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக அதை அப்படியே எடுத்துக் கொள்ளுதல்; இப்பொழுது அதுதான் யூகித்தல் என்பது. இப்பொழுது, இஸ்ரவேலர் இதைச் செய்தபோது, அவர்கள் மரணத்திற்கேதுவான ஒரு தவறைச் செய்தனர். இஸ்ரவேலர் மாத்திரமல்ல, மற்ற ஒவ்வொருவரும் அதைச் செய்கின்றனர். நீங்கள் தேவனுடன் நடக்கும்படி அவர் உங்களை அழைக்காதிருக்கும் போது, நீங்கள் தேவனுடன் நடக்க வேண்டுமென்று யூகித்தாலோ அல்லது வேதப்பிரகாரமல்லாத காரியங்களைத் துணிந்து செய்யும்படி நீங்கள் யூகித்து, அது சரியாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, அது மரணத்துக்கேதுவான தவறாக இருக்கும். அது சரியானதல்ல. ஏவாள் யூகித்தாள். அது சரியாக இருக்கும் என்று அவள் யூகித்தாள், ஏனெனில் கவர்ச்சியானதும் அருமையாக தோற்றமளிக்கிறதுமான ஏதோவொன்றை சாத்தான் அவளுக்குக் கொடுத்தான். ஆனால் அவள் அதை யூகித்தாள். அது வார்த்தையாக இல்லாதிருந்தது. நீங்கள் அதைச் செய்ய விரும்ப வேண்டாம். நீங்கள் வார்த்தையோடு தரித்திருக்க வாஞ்சியுங்கள். நீங்கள் அதை விட்டு விலகாதிருங்கள். சரியாக அங்கேயே தரித்திருங்கள். நீங்கள் நின்று,... அது ஒரு பொருட்டல்ல. தேவனுக்காக எதையாவது எப்பொழுதாவது செய்த மனிதர்கள் தேவனோடு தனியாகவே நின்றனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். பாதையில் இரண்டு பேருக்கு மாத்திரமே இடமுண்டு. அது நீங்களும் தேவனும் தான். நீங்கள்... வார்த்தையின்படியுள்ள நம்பிக்கைக்கு உட்பட்டு எப்பொழுதாவது எதையாவது செய்த மனிதர்கள் தனித்தே நின்றனர்: மார்ட்டின் லூத்தர், ஜான் வெஸ்லி, அவர்களைப் போன்றவர்கள், ஃபின்னி, சாங்கி, கால்வின், நாக்ஸ், ஸ்பர்ஜன், மற்றவர்கள். பாருங்கள்? மோசே, எலியா, அவர்கள் அனைவருமே தேவனுடைய வார்த்தையின் பேரில் தனியாக நின்றனர். அந்தவிதமாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும். அது ஒரு தனிப்பட்ட நபருடைய விவகாரமாக உள்ளது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, வார்த்தையின் பேரில் நிற்க வேண்டும். 11இப்பொழுது. இஸ்ரவேலர் இவ்விடத்திற்கு வந்திருப்பதை நாம் கண்டுகொள்கிறோம், அற்புதத்திற்கு மேல் அற்புதம் நடந்த பிறகு, அவ்விடத்தில் தேவன் தம்முடைய கிருபையினாலும் இரக்கத்தினாலும், இஸ்ரவேலருடைய எல்லா கீழ்படியாமையின் பாவங்களையும் மன்னித்திருந்தார். தேவன், 'நான் மகத்தான அடையாளங்களை அவர்கள் மத்தியில் காண்பித்திருக்கிறேன்...' என்றார். முந்தைய வசனங்களில், 'நான் மகத்தான அடையாளங்களைக் காண்பித்திருக்கிறேன், அவர்களோ இந்த எல்லா அடையாளங்களையும் புறக்கணித்து விட்டார்கள்' என்றார். அவர்கள் எப்படியாயினும் அப்படியே அதனூடாக நடந்து சென்றார்கள், அவர்கள் செய்ய விரும்பினதை - தாங்கள் செய்ய வேண்டுமென்று நினைத்ததை அவர்கள் செய்தனர். என்ன செய்ய வேண்டுமென்று தேவன் கூறினதை அல்ல, தாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைத்தார்களோ அதையே அவர்கள் செய்தனர். இப்பொழுது அங்குதான் வித்தியாசம் உள்ளது: நாம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம், தேவனோ வேறு ஏதோவொரு வழியில் அதைச் செய்யச் சொல்லுகிறார். நாம் திரும்பி வந்து, தேவனுடைய வழியில் அதைச் செய்ய வேண்டும் அல்லது அவ்விடத்தை விட்டு ஒருபோதும் கடந்து செல்ல மாட்டோம். அதுதான் காரியம். நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றீர்களோ சரியாக அந்த இடத்திற்கே திரும்பி வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். 12சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் என்னிடம் இதைக் கூறினார்... அவர் உள்ளே அழைக்கப்பட்டதாக கூறினார்; மார்பில் இவ்விதமாக இயந்திரத் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த ஒரு மனிதன் அங்கிருந்தான், அவன் ஒரு இராணுவத் தலைவனாயிருந்தான். மேலும் அவன் மரணத்தருவாயில் படுத்திருந்தான். எனவே இந்தப் பாதிரியார் கூடாரத்தினுள்ளே அவனிடம் அழைக்கப்பட்டார்; அந்த மனிதன் மூச்சு விட முயற்சித்துப் போராடிக் கொண்டிருந்தான். அவர்கள் அவனை யுத்த களத்திற்கு அப்பால் கொண்டு சென்றிருந்தனர். அவர் அவனைப் பார்த்து, 'நீ ஒரு கிறிஸ்தவனா?' என்று கேட்டார். அவன், 'நான் - நான் ஒரு காலத்தில் கிறிஸ்தவனாக இருந்தேன்' என்றான். அவர், 'நல்லது, நீ தாமதம் பண்ணாமலிருப்பது நல்லது. நீ மரித்துக்கொண்டிருக்கிறாய்' என்றார். அவன், 'எனக்கு அது தெரியும்' என்றான். (ஏனெனில் இயந்திரத் துப்பாக்கிக் குண்டுகள் ஏதோவொரு விதத்தில் நுரையீரலைத் துளைத்துச் சென்றிருந்ததாக அவர் என்னிடம் கூறினார். அவன் மரித்துக் கொண்டிருந்ததாகவும், அவனுடைய நுரையீரல்கள் முழுவதும் நிரம்பி, அவனுடைய தொண்டையில் வழிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.) மேலும் அவர், 'நல்லது, இப்பொழுது, நீ ஒருகாலத்தில் அவரை அறிந்திருந்தாயா?' என்று கேட்டார். 'ஆம்' என்றான். 'இப்பொழுது, மிகத் தீவிரமாக யோசித்துப்பார். நீ அவரை எங்கே விட்டாயோ, சரியாக அங்குதான் அவரைக் கண்டுபிடிக்கப் போகிறாய்: நீ அவரை எங்கு விட்டாயோ அந்த இடத்தில்' என்றார். அது சரியே. அது எவ்வளவு உண்மையாக உள்ளது! நீ சரியாக வார்த்தையில் அவரை விட்டு விட்ட இடத்தில், சரியாக அங்குதான் நீ திரும்பி வர வேண்டும். தேவன் கூறுவாரானால்... நீங்கள் - நீங்கள் சபைக்குப் போகிறீர்கள் (அது சரிதான்.), நீங்கள் உங்களுடைய தசமபாகங்களை செலுத்துகிறீர்கள் (அது சரிதான்.), நீங்கள் இந்தச் சபைக்காரியங்களைச் செய்கிறீர்கள் (அது சரிதான்.). ஆனால் அதற்குப்பிறகு, அது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கோ அல்லது அவருடைய வார்த்தையில் உள்ள ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கோ இங்கே திரும்பி வரும்போது, நீங்கள் அதை விட்டு அப்பால் நடந்துச் சென்று, 'எனக்கு - எனக்கு அதைக்குறித்து தெரியாது' என்று கூறுகிறீர்கள், சரியாக அங்குதான் நீங்கள் அவரை விட்டு விடுகிறீர்கள், சரியாக அங்கேயே. நீங்கள் ஒருபோதும் அதற்கு மேல் போக மாட்டீர்கள். நீங்கள் அவரை எப்பொழுதாவது மீண்டும் கண்டுபிடித்தால், சரியாக அங்கு தான் திரும்பி வருவீர்கள். நீங்கள் பெரும்பாதையை விட்டு விலகுகிறீர்கள், நீங்கள் பக்கவழியாகச் செல்கிறீர்கள், நீங்கள் மீண்டும் பெரும்பாதைக்குத் திரும்பி வந்து, அங்கே காத்துக்கொண்டிருக்கும் அவரைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். 13இப்பொழுது, அந்தப் பாதிரியார் (chaplain) அவ்விதமாகத்தான் இருந்தார். அவர், 'நான் அந்த மனிதனிடம் கூறினேன்' என்றார், 'வேகமாக யோசித்துப்பார்' என்றார். அவன், 'நல்லது, என்னால் யோசித்துப்பார்க்க முடியவில்லை' என்றான். அவர், 'நீ சிந்தித்துப்பார்ப்பது நல்லது' என்றார். மேலும் (அப்போது), 'அந்த இராணுவத் தலைவனுடைய முகத்தில் ஒளி பளிச்சிட்டது, 'எனக்கு ஞாபகம் வருகிறது' என்றான்' என்று கூறினார். 'சரியாக அங்கேயிருந்து தொடங்கு' என்றார். அவன், 'இப்பொழுது, நான் நித்திரையடையட்டும். கர்த்தர் என்னுடைய ஆத்துமாவைக் காத்துக் கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன்' என்றான். அவன் அவரை எங்கே விட்டான்? தொட்டிலில், அவனுடைய தாயாருடைய முழங்காலில். அங்கேதான் அவன் அவரை மீண்டும் கண்டு கொண்டான். புரிகிறதா? நீங்கள் அவரை விட்டு விட்ட இடத்திற்கு சரியாகத் திரும்பி வர வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். 14இஸ்ரவேலர் தொடங்கியிருந்தனர், ஆனால் தோல்வியடைந்திருந்தனர். தேவனுடைய இரக்கமும் அவருடையக் கிருபையும் அவர்களைக் காத்துக் கொண்டும், அவர்களைப் பற்றிப்பிடித்துக் கொண்டுமிருந்தது. அதற்குப்பிறகு அவன் காதேஸ்பர்னேயாவுக்கு வருகிறான். மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டு, தேசத்தை வேவுபார்க்க பன்னிரெண்டு பேர்களை அனுப்பினான். அவர்கள் அங்கு போனபோது, ஓ, அவர்கள் மத்தியில் என்னவொரு கொந்தளிப்பு (கலக்கம்) இருந்தது! ஓ, என்னே. இங்கே அவர்கள் திரும்பி வந்து, 'ஏன், அங்கே... ஏன், நாம் அவர்களை ஜெயிக்க முடியாது. ஏன், அமலேக்கியரும், கானானியரும், பெரிசியரும், அந்த எல்லா வகையினரும் அங்குள்ளனர், மதில்சுவரால் கட்டப்பட்டுள்ள அவர்களுடைய பெரிய பட்டணங்களும் உள்ளது, அந்த ஜனங்களுடையப் பார்வைக்கு நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போலிருக்கும் அளவுக்கு அவர்களில் சிலர் மிகப்பெரிய (இராட்சதர்களாக) இருக்கிறார்கள்' என்றார்கள். ஓ, அவர்கள் பயமடைந்தார்கள். நாம்... இப்பொழுது, அது இன்றுள்ள சபைக்கு அப்படியே ஒரு முன்னடையாளமாயில்லையா? 'நாங்கள் - நாங்கள் அதைச் செய்ய முடியவில்லை. நாங்கள்... ஏன், அது - அது இயலாத காரியம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது, நாம் இவ்வாறு ஆகியிருக்கிறோம், நாம் கொஞ்சம் இவ்விதமாக இருக்க வேண்டும்...' இனிமேலும் தெருக்கூட்டங்கள் எங்கேயிருக்கும்? (ஒரு சகோதரன், 'இல்லை, சகோதரனே, அங்கே அதிகமான தெருக்கூட்டங்கள் இல்லை' என்று பதிலளிக்கிறார் - ஆசிரியர்.) வாலிபனே, அது உண்மை. இனிமேல் அங்கே மிக அதிகமான தெருக்கூட்டங்கள் இருக்காது. நாம் வழக்கமாகக் கொண்டிருக்கும் முழு இரவு ஜெபக்கூட்டங்கள் எங்கே? அதற்கு என்ன சம்பவித்தது? தேவனோடுள்ள அந்த ஆழ்ந்த உத்தமமும், பலவந்தம் பண்ணுதலும் எங்கே? என்ன காரியம்? நாம் அதிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறோம் (cut away). நாம் கொஞ்சம் கொஞ்சமாக அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டோம்... பாவம் மிக மிக மயக்கியிழுக்கக்கூடியது. ஓ, அது கவர்ச்சிகரமானது. உண்மையாகவே பாவமானது பசியை தீர்க்கும்விதமாக கேட்டுக் கொண்டேயிருக்கும். அது மிகவும் அப்பாவித்தனமானது. ஏன், அது அவ்வாறு தான் தோற்றமளிக்கிறது... அது மிகவும் கபடற்ற விதமாகத் தோற்றமளிக்கிறது. நீங்கள் அதற்குக் கவனம் செலுத்த வேண்டாம். 15சிறிது கழிந்து, யோசுவா அந்த தேசத்தைப் பிடித்தபோது, தேவன் அவனிடம், 'அங்கேயிருக்கும் எல்லாவற்றையும் முழுவதுமாக அழித்துவிடு. எதையும் விட்டுவைக்காதே' என்று கூறினார். ஏன், அந்த இஸ்ரவேல் பெண்களில் சிலர் ஒரு சிறு குழந்தையை எடுத்து வைத்துக்கொள்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? 'ஓ, அது அழகானதாக இல்லையா? அதனுடைய... யைப் பாருங்கள். அதற்கு இன்னும் பல்கூட முளைக்கவில்லை.' யோசுவா, 'அதைக் கொன்று போடுங்கள்' என்றான். அந்தத் தாய், 'ஓ, நான் ஒரு தாயாக இருக்கிறேன். என்னால் அந்தக் குழந்தையைக் கொல்ல முடியாது' என்கிறாள். 'நீ அதைக் கட்டாயமாக கொன்று போடத்தான் வேண்டும். அதை இங்கே என்னுடைய கரங்களில் கொடுத்துவிடு.' ஏன்? அது இப்பொழுது அழகாகக் காணப்படலாம், ஆனால் அது வளர்ந்து அதனுடைய தகப்பனைப்போல இருக்கும். குழந்தையை பாவம் செய்ய வைக்க உங்களால் முடியாது. அது நடத்தப்பட வேண்டும் - கையுறைகளை அணிந்து கொண்டு அதை நடத்த வேண்டாம், ஆனால் வெறும் கையினால் அதை நடத்த வேண்டும். நாம் அருமையானவர்களாக இருக்க விரும்புகிறோம். ஒவ்வொருவரும் அவ்வாறு இருக்க வாஞ்சிக்கிறோம். நாம் விரும்புகிறோம்... ஆனால் அருமையானது என்பது என்ன? நாம் தாழ்மையாக இருக்க விரும்புகிறோம். ஆனால் தாழ்மை என்பது என்ன? நாம் இரக்கத்தால் நிறைந்திருக்க விரும்புகிறோம். ஆனால் இரக்கம் என்பது என்ன? இயேசு இரக்கத்தால் நிறைந்த ஒரு மனிதர், அவர் தலைவீங்கியிருக்கும் நீர்ம வியாதி கொண்ட குழந்தைகள் (water-head babies), ஊனமுற்றவர்கள், குருடர்கள், சப்பாணிகள், சூம்பின உறுப்புகளை உடையவர்களாகிய இரண்டாயிரம் மூவாயிரம் ஜனங்களைக் கடந்து சென்று விட்டார். அவர் இரக்கமுடையவராயிருந்தார். அவர் என்ன செய்தார்? பிதா அவருக்குக் காண்பித்த இடத்திற்கு அவர் நடந்து சென்றார், ஒருவேளை புரோஸ்டேட் சுரப்பியில் கோளாறு அல்லது ஏதோவொரு வியாதியையுடைய ஒரு மனிதனை சுகப்படுத்தி விட்டு, மற்றவர்களை விட்டு விட்டு தூரமாக நடந்து சென்று விட்டார்: இரக்கத்தால் நிறைந்த ஒரு மனிதர். 16இப்பொழுது இன்றைய ஜனங்கள்... நம்முடைய ஆங்கில வார்த்தைகள் ஜனங்களைத் திசைதிருப்பி விடுகின்றன. பாருங்கள்? அது மனிதனுடைய அனுதாபமாக (sympathy) உள்ளது; அது இரக்கமல்ல (compassion). அனுதாபத்திற்கும் இரக்கத்திற்கும் இடையே பெரிய வித்தியாசமுண்டு. அவைகள் முற்றிலுமாக இரண்டு வித்தியாசமான வார்த்தைகளாக உள்ளன. நாம் அவைகளை ஒரேவிதமாக பயன்படுத்துகிறோம். இப்பொழுது, வார்த்தையானது எந்த இரக்கத்தையும் பயன்படுத்துவதில்லை; அது கீழ்படிந்திருக்க வேண்டும். அந்த வார்த்தையோடு தரித்திருங்கள், அது எவ்வளவு மோசமான விதமாக வெட்டினாலும் பரவாயில்லை. குழந்தைகளையும், அப்பாவி ஸ்திரீகளையும், அதைப்போன்ற காரியங்களையும், அவ்வாறு அழைக்கப்படுபவைகளையும் அழித்துப் போட்டனர் என்று எவ்வாறு கருதுவீர்கள்? கொஞ்சம் புளித்த மா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்கும். அங்கே முற்காலத்து ஏவாளிடமும் அதே காரியம்தான் தொடங்கியது. அது பயங்கரமான விதத்தில் தந்திரமாகக் காணப்பட்டது. 'ஏன், நீ ஞானியாக இருப்பாய். நிச்சயமாக நீ சாவதில்லை. அவர் மிகவும் நல்லவர். அவர் உன்னைக் கொல்ல மாட்டார். ஆனால் நிச்சயமாக நீ சாவதில்லை.' ஆனால் நீ சாவாய் என்று தேவன் கூறினார். அது முழு காரியத்தையும் சரியாக அங்கேயே தொடங்கியது. புரிகிறதா? என்ன நடந்தாலும் அதைப்பொருட்படுத்தாமல், நீங்கள் அந்த வார்த்தையோடு தரித்திருக்க வேண்டும். 17யூகிக்க வேண்டாம்; விசுவாசியுங்கள். தர்க்கம் செய்ய வேண்டாம். அறிவு தர்க்கம் செய்கிறது. விசுவாசம் தர்க்கம் செய்வதில்லை. விசுவாசம் அப்படியே அதைப் பற்றிக்கொள்கிறது. ஆபிரகாம் தர்க்கித்திருந்தால் என்னவாகியிருக்கும்? யோசித்துப்பாருங்கள். ஆபிரகாம் தர்க்கம் செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவன் நூறு வயதுடையவனாய் இருந்தான், அவனுடைய மனைவிக்கு (அவள் அவனுக்கு பாதி சகோதரியாயிருந்தாள்) ஏறக்குறைய 17 வயதாக இருந்தது முதற்கொண்டே அவளோடு வாழ்ந்து வந்தான். அவர்கள் விவாகம் செய்தனர். ஏன், அவனுடைய எல்லா வாலிப ஆண்மைத்துவமும் பெண்மைத்துவமும் ஒன்றாக இணைவதை இயற்கை காண்பித்தது, அவர்கள் கணவனும் மனைவியுமாக வாழ்ந்தும், அவர்களுக்கு பிள்ளையில்லாதிருந்தது. அவன் மலட்டுத்தன்மையுடையவனாயிருந்தான், அவளும் மலடியாயிருந்தாள் - ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நின்றுபோய் நாற்பது வருடங்கள் ஆகியிருந்தது, அது முற்றிலும் கூடாத காரியமாக இருந்தது. ஏன், அவனால் அதைச் செய்ய முடியாதிருந்தது என்பதை உங்களுடைய யோசனை காண்பிக்கிறது. ஆனால் வார்த்தையிலுள்ள விசுவாசமோ அதைப் பற்றிக்கொள்கிறது. பாருங்கள்? விசுவாசம் தர்க்கம் செய்வதில்லை. விசுவாசமானது வார்த்தையைப் பற்றிக்கொள்கிறது. யாரோ ஒருவர், 'நான் - நான் விசுவாசிக்கிறேன்...' என்று கூறுகிறார். 'சகோதரன் பிரன்ஹாமே, நீர் கூறிக் கொண்டிருப்பது சத்தியமென்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால் நான் அதைச் செய்தால், நான் என்ன செய்ய வேண்டியிருக்கும் என்று உமக்குத் தெரியுமா? நான் பிச்சையெடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் என்னை சபையை விட்டு உதைத்து வெளியே தள்ளி விடுவார்கள்' என்று கூறுகிற அநேக ஊழியக்காரர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் என்னை அப்படியே உதைத்து தள்ள வேண்டியிருந்தது. 'யாருமே என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.' அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். நீங்கள் இங்கே என்றென்றுமாக ஜீவிக்க முடியாது; நீங்கள் அங்கே போயாக வேண்டும். புரிகிறதா? விசுவாசமானது எந்த தர்க்கத்தையும் அறியாது; அது வெறுமனே விசுவாசிக்கிறது, அது ஒவ்வொரு - ஒவ்வொரு கட்டிலிருந்தும் உங்களை பிரித்து விடுகிறது - அங்கே ஒன்றுமேயில்லை. நீங்கள் சரியாக விசுவாசத்தோடு தரித்திருங்கள். தர்க்கங்கள் படிப்படியாக விலகிப் போய்விடும். 18இஸ்ரவேலர், 'இப்பொழுது, யோசனை அதைக் காண்பிக்கிறது, ஏன், நாம் அங்கு போனால், ஏன், அவர்கள்... அம்மனிதர்களில் ஒருவன் நம்மில் பத்து பேரை அடித்து துரத்த முடியும், நாம் ஒரு இராணுவ தேசமல்ல. நாம் இராணுவ ஜனங்களுமல்ல. நம்மிடம் கொஞ்சம் தடிகளும், ஈட்டிகளும், மற்றும் காரியங்களும் இருக்கின்றன. நாம் அவைகளை உபயோகப்படுத்தியிருக்கிறோம், நாம் அழிந்து விடுவோம். நம்மில் (யுத்தத்திற்கு) பயிற்சி பெற்ற மனிதர் யாருமேயில்லை. நாம் என்ன செய்யலாம்?' என்றனர். அது மனதின் யோசனை தான்(reasoning). ஆனால் விசுவாசத்தைக் கொண்ட மனிதர்களும், உத்தமமான மனிதர்களுமாகிய யோசுவாவும் காலேபும் (ஆமென். அங்கேதான் உங்கள் காரியம் இருக்கிறது.), எகிப்தில் இருந்தபோது, தேவன், 'நான் அந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்' என்று கூறியிருந்ததை அறிந்திருந்த மனிதர்களாயிருந்தனர். அது நன்கு போதுமானதாயிருந்தது. அவர்கள் ஜனங்களிடம் ஓடிச் சென்றனர். தேவன் அத்தேசத்தை அவர்களுக்குக் கொடுத்திருப்பதாக வாக்களித்திருக்கும் போது, ஜனங்கள் புலம்பிக்கொண்டே, 'இப்பொழுது, எங்களுடைய பிள்ளைகள் வனாந்தரத்தில் மரித்து விடுவார்கள். எங்களுடைய ஸ்திரீகள் கற்பழிக்கப்படுவார்கள், மேலும் நாங்கள் இங்கேயிருக்கிறோம். நாங்கள் இங்கே வனாந்தரத்தில் அழிக்கப்பட்டு விடுவோம்' என்று கூறி அழுதுகொண்டிருந்தனர். இப்பொழுது, அவர் அத்தேசத்தை அவர்களுக்குக் கொடுத்து விட்டார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; ஆனால் அவர்கள் ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் சண்டை போட வேண்டியிருந்தது. தேவன் யோசுவாவை நோக்கி, 'உன் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உனக்குக் கொடுத்திருக்கிறேன்' என்று சொன்னார். காலடி என்பது சுதந்தரத்தைக் (possession) குறிக்கிறது. 19இப்பொழுது, ஜனங்களாகிய உங்களுக்கு ஜெபிக்கப்பட்டது, நீங்களெல்லாரும் கடந்த இரவு இங்கேயிருந்தீர்கள், (கரங்கள்) வைக்கப்பட்டது - யாரோ ஒருவர் உங்கள்மேல் கரங்களை வைத்தார், நாம் ஜெபித்தோம். கர்த்தருடைய பிரசன்னம் இறங்கி வந்து, அவர் உண்மையாகவே இங்கேயிருக்கிறார் என்பதைக் காண்பிக்கும்படியாக, அவர் சரியாக வார்த்தையுடன் தம்மைத்தாமே வெளிப்படுத்தினார். அங்கே முட்டாள்தனம் எதுவுமில்லை; அங்கே தவறொன்றுமில்லை. அது அங்கே உள்ளது. அது தான் சத்தியமாயிருக்கிறது. நாம் வேறு எதையும் யூகிக்க வேண்டாம். நாம் மனதின் யோசனைகளைப் புறம்பே தள்ளிவிடுவோம். நாம் அவைகளைத் தூக்கி எறிந்து விட்டு வார்த்தையை எடுத்துக்கொள்வோம். வார்த்தையை எடுத்துக்கொண்டு தொடர்ந்து செல்லுங்கள். வார்த்தை அவ்வாறு கூறியுள்ளது. இப்பொழுது, நீங்கள், 'அப்படியானால் வாக்குத்தத்தம் என்னுடையது' என்று கூறலாம். நிச்சயமாக. ஆனால் நீங்கள் சுகமடைகிற வரையில், அதன் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராட வேண்டும். நீங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொள்வீர்கள் - அதன் ஒவ்வொரு அடி நிலத்தையும் நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். அது ஒரு யுத்தமாக உள்ளது. வாக்குத்தத்தம் உங்களுடையது. அது ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசமாக இருந்தது; அதன் ஒவ்வொரு அடி நிலத்தையும் பெற்றுக்கொள்ள அவர்கள் சண்டை போட வேண்டியிருந்தது. மேலும் வாக்குத்தத்தம் உங்களுடையது, ஆனால் அதன் ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் நீங்கள் சண்டை செய்ய வேண்டும். 20நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படியாக முப்பத்தொன்று வருடங்களுக்கு முன்பு தேவனால் அழைக்கப்பட்டேன். நான் அதுமுதற்கொண்டு எப்போதுமே போராடி வருகிறேன். நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் தேவனுடைய பட்டயத்தை எடுத்துக் கொண்டு சண்டையிட்டு வருகிறேன், வாக்குத்தத்தத்தை எடுத்துக்கொண்டு, வெட்டி வீழ்த்துகிறேன். யாரோ ஒருவர் வந்து, 'இப்பொழுது, நாங்கள் பாப்டிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர்கள். நல்லது, உங்களால் அதை விசுவாசிக்க முடியாது. அது எங்களுக்காக அல்ல' என்று கூறலாம். நீங்கள் செய்ய வேண்டியது என்ன? பட்டயத்தை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து வெட்டித் தள்ளி, தொடர்ந்து அணிவகுத்துச் செல்லுங்கள். நான் பெந்தெகோஸ்தேயினருடன் போவதால், 'நீ இந்தக் குழுவினருடன் போகிறாய், உன்னோடு எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது' என்று கூறினார்கள். மற்றொரு குழுவினர், 'நீ அவர்களுடன் போனால், உன்னோடு எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது' என்று கூறினார்கள். வெட்டித்தள்ளி விட்டு, அப்படியே தொடர்ந்து அணிவகுத்துச் செல்லுங்கள். ஆம். அப்படியே தொடர்ந்து... அதன் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் சண்டையிட வேண்டியுள்ளது. 21ஆனால் அது என்ன? அது ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது. தேவன் வாக்குப்பண்ணினார். நாம் அதனோடு தரித்திருப்போம். தேவன் அதை வாக்களித்தார். பொருட்டல்ல... நீங்கள் ஒரு யுத்தம் செய்தாக வேண்டும். ஒவ்வொன்றும் சோம்பல்தனமாக இருந்தால், ஏன், நீங்கள்... நீங்கள் எதைக் கொண்டு ஜெயங்கொள்ளுகிறீர்கள்? அவர்கள் தேவனுடைய வார்த்தையினாலும், தங்களுடைய சாட்சியினாலும், கிறிஸ்துவின் இரத்தத்தினாலும் ஜெயங்கொள்கிறார்கள். நீங்கள் ஏதோவொன்றை ஜெயங்கொண்டாக வேண்டும், நீங்கள் சில தடைகளைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. வித்தியாச பேதமுள்ள ஜனங்கள் உங்களைத் தொந்தரவு செய்து, நீங்கள் பரிசுத்த உருளையர்கள் மற்றும் காரியங்களை உங்களிடம் சொல்லுவார்கள். நீங்கள் - அது உங்களுக்கு முன்பாக வைக்கப்படும், அது ஒரு சோதனையாக இருக்கிறது. நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவில்லையென்றால், நீங்கள் யுத்தத்தில் கூட இல்லை. நீங்கள் எதற்காக சபையில் சேர்ந்துள்ளீர்கள்... நீங்கள் எதற்காக இராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றீர்கள்? நீங்கள் சோம்பேறித்தனமாக நேரத்தைக் கழித்துக் கொண்டு, தெருவில் கர்வத்துடன் மேலும் கீழும் நடந்து சென்று, உங்களைக் காண்பிக்கவா? அவ்விதமாகத்தான் சில கிறிஸ்தவர்கள் நடந்து கொள்கிறார்கள். (மற்றவர்கள்) நம்மைப் பார்க்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். அவர்கள் உங்களைக் கவனிக்கப் போவதில்லை. நீங்கள் அவமதிக்கப்படப்போகிறீர்கள். 'கிறிஸ்து இயேசுவுக்குள் தெய்வபக்தியாய் நடக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.' பட்டயத்தை கையிலெடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் (தடைகளையெல்லாம்) உன்னை விட்டு வெட்டி விடுவித்துக்கொண்டு, தொடர்ந்து போய்க் கொண்டேயிரு. 22யோசுவாவும் காலேபும் ஜனங்களை அமைதிப்படுத்தினர். அவர்கள், 'நாம் அதைப் பிடிக்க முடியாது, நம்மால் அதைச் செய்ய முடியாது. அவ்வளவுதான்' என்றனர். பாருங்கள், அவர்கள் அமலேக்கியர்களை நோக்கிப்பார்த்துக் கொண்டிருந்தனர். யோசுவாவும் காலேபும் வாக்குத்தத்தத்தை நோக்கிப்பார்த்துக் கொண்டிருந்தனர். அதுதான் வித்தியாசம். அது நீங்கள் எதை நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. யோசுவா, 'அதை நம்மால் எளிதில் பிடிக்க முடியும். நம்மால் அதை எளிதாக ஜெயித்துக் கொள்ள முடியும். ஏன், அவர்கள் நமக்கு அப்பமாக மாத்திரமே இருக்கிறார்கள். ஏன், அவர்கள் பெரியவர்களாகத் காணப்படுகிறார்கள். அவர்கள் பெரியவர்கள் தான். ஆனால் நாமோ பெரிய அப்பத்தைக் கொண்டிருக்கப் போகிறோம். தேவன் நமக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்திருக்கிறார், நம்மைக் குறித்த பயம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இருப்பினும் நம்முடன் வேறுபாடு கொண்டுள்ளனர்; இன்னும் அவர்கள் நம்மைக்குறித்து பயந்து கொண்டு தான் இருக்கின்றனர்' என்றான். நிச்சயமாக. 'கர்த்தரைக் குறித்துள்ள பயம் - பயம் அவர்கள் யாவருக்கும் உள்ளது. அவர்கள் நம்மைக் குறித்து மரண பீதியில் உள்ளனர். நாம் போய் அதைப் பிடித்துக் கொள்வோம். தேவன் நமக்கு அதைக் கொடுக்கிறார், எனவே அது நம்முடையது. நாம் தொடர்ந்து போய் அதைப் பிடித்துக் கொள்வோம்' என்றான். 23ஓ, பெந்தெகொஸ்தே குழுவை என்னால் ஒன்றாக சேர்க்கக் கூடுமானால். அந்த விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியன் அங்கே வெளியே நின்றுகொண்டு, 'நாம் இவை அனைத்தையும், அவை எல்லாவற்றையும் பெற்றிருக்க வேண்டும்' என்று கூறுகிறான். முட்டாள்தனம். 'அவர்களோடு ஐக்கியம் கொள்ள வேண்டுமானால் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் (World Council of Churches) நாம் ஒருவிதத்தில் சேர்ந்தாக வேண்டும்.' நம்முடைய ஐக்கியம் தேவனிடத்தில் இருக்கிறது, மனிதர்களுடைய சங்கங்களிலோ, மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளோடோ நம்முடைய ஐக்கியம் இல்லை. நாம் - நாம் தேவனிடமிருந்து ஐக்கியத்தை எதிர்பார்க்கும் தேவ ஜனங்களாயிருக்கிறோம். அங்கேதான் நம்முடைய உரிமைகள் இருக்கிறது, அது தேவனுடன் இருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையில் ஐக்கியம் கொள்ளாமல், தேவனோடு எவ்வாறு ஐக்கியம் கொள்ள முடியும்? ஏனெனில் வார்த்தையே தேவனாக உள்ளது. மேலும் அது நீங்களாக ஆகும்போது, வார்த்தை மாம்சமாகிறது. 'நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்.' அங்கேதான் உங்கள் காரியம் இருக்கிறது. பாருங்கள்? ஆனால் வார்த்தையானது இங்கே உள்ளே நிலைத்திருக்க வேண்டியுள்ளது. அது அவ்வாறு நிலைத்திருக்கவில்லை என்றால், மழையானது பொழிகிறது, மேலும், ஏன், அது உற்பத்தி செய்ய முடியாது, ஏனெனில் நீங்கள் அதை விசுவாசிப்பதில்லை. அதை விசுவாசிக்கிறேன் என்று நீங்கள் எவ்வளவுதான் உரிமை கொண்டாடினாலும் அது ஒரு பொருட்டல்ல, நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். சரி. 24எனவே இஸ்ரவேலர்... தேவன் மோசேயை வெளியே அழைத்து, 'நான் முழு தேசத்தையும் அழிக்கப்போகிறேன். வழியை விட்டு சற்று விலகிக்கொள்' என்றார். மோசே பரிந்து பேசி, தானே இடைவெளியில் நின்றான். அது மோசேயில் இருந்த கிறிஸ்துவாகும். நீங்கள் பாருங்கள்? தேவன் பாவத்தின் காரணமாக ஒருசமயம் முழு உலகத்தாரையும் கொன்றிருப்பார், ஆனால் கிறிஸ்து தாமே முழு மனுக்குலத்திற்காகவும் இடைவெளியில் நின்றார். மோசே இஸ்ரவேலருக்காக தானே இடைவெளியில் நின்றான். அவன், 'தேவனே, நீர் ஒரு வாக்குத்தத்தம் செய்துள்ளீர். நீர் அவர்களை அந்த தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போவதாக ஒரு வாக்குத்தத்தம் செய்துள்ளீர்' என்றான். அது சரியே. மோசே தேவனிடம் என்ன சொன்னான்? தேவன் முரண்பாடான ஏதோவொன்றை செய்யப்போவதைப் போன்று தோன்றினபோது, அவன் வார்த்தையைத் அவருடைய வழியில் வைத்தான். ஆமென். ஓ, எனக்கு அது பிடிக்கும். இப்பொழுது, அதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் போதே, சத்தமிட வேண்டும் போல உணருகிறேன். வார்த்தையை வழியில் வையுங்கள். தேவனால் தம்முடைய சொந்த வார்த்தையைத் தாண்டிச் செல்ல முடியாது. 'நீர் அதைச் செய்யப்போவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளீர். பாலும் தேனும் ஓடுகிற ஒரு நல்ல தேசத்திற்கு அவர்களை அழைத்துக்கொண்டு போவதாக நீர் கூறினீர். நீர் சொன்ன காரியத்தை நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன், நாங்கள் இங்கேயிருக்கிறோம். நாங்கள் உம் கரங்களில் இருக்கிறோம்' என்றான். தேவன், 'அந்த முரட்டாட்டமான கூட்டத்தை அழித்து, அவர்களை இந்த வனாந்தரத்தில் அழுகிப்போகும்படி விடப்போகிறேன். ஆனால் எங்குமே போகமாட்டார்கள் என்று தாங்கள் சொன்ன அவர்களின் பிள்ளைகளை நான் அழைத்துக்கொண்டு போவேன், அவர்களோ வனாந்தரத்தில் அழிந்து போவார்கள், அவர்களை (பிள்ளைகளை) நான் அங்கு அழைத்துச் செல்வேன்' என்றார். அது சரியே. 25பாருங்கள், பாவம் பயங்கரமானது. பாவம் என்பது என்ன? புகை பிடித்தலா? இல்லை. மது அருந்துதலா? இல்லை. பொய் பேசுவதா? இல்லை. விபசாரம் செய்தலா? இல்லை. அவை பாவமல்ல. அவை பாவமேயல்ல. பாருங்கள்? இல்லை. ஒரு பொய் பேசுதல் பாவமல்ல. தேவனுடைய நாமத்தைக் கொண்டு சாபமிடுதல் பாவமல்ல. உ—ஊ. அவிசுவாசம் தான் பாவமாயிருக்கிறது. ஆம். நீங்கள் அதை ஏன் செய்கிறீர்கள்? நீங்கள் விசுவாசிக்காத காரணத்தினால் தான். அதுதான் காரியம். அது... அதற்கான காரணத்திற்குத் திரும்பி வாருங்கள். பாருங்கள், புரிகிறதா? நீங்கள் பொய் பேசுகிறீர்கள், திருடுகிறீர்கள், விபசாரம் செய்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் விசுவாசிப்பதில்லை. அது மிகவும் சரியே. 'ஆனால் விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.' அவன் தொடங்குவதற்கு கூட முன்பாகவே ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று, ஏனெனில் அவன் விசுவாசிப்பதில்லை. சரி. இப்பொழுது, நீங்கள் ஒரு அவிசுவாசியாக இருக்கும் காரணத்தால் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்து விட்டு, உங்களை ஒரு விசுவாசி என்று சொல்வீர்களானால், நீங்கள் ஒரு விசுவாசியல்ல. உங்களுடைய சொந்த சாட்சியே, உங்களுடைய கனிகளே நீங்கள் விசுவாசியல்ல என்று நிரூபிக்கிறது. பாருங்கள்? நீங்கள் சரியாக ஒரு விசுவாசியாக இருப்பதற்கு முன்பாகவே நீங்கள் அதை விட்டு விட்டிருக்க வேண்டும். புரிகிறதா? இப்பொழுது. பாவம் தான் அவிசுவாசம், இன்னும் சரியாகச் சொன்னால், அவிசுவாசம் தான் பாவமாகும். எனவே, நீங்கள் பாருங்கள், அதுதான் பிரச்சனையாக உள்ளது. 26அதன்பிறகு அவர்கள், 'நல்லது, இப்பொழுது, என்னவென்று நான் உங்களிடம் கூறுகிறேன். இந்த அநேக காரியங்களை நாம் செய்துள்ளோம், எனவே நாம் சற்று மனந்திரும்பி விடுவோம். நாம் இங்கே மேலே சென்று, சில நாட்கள் துக்கம் கொண்டாடி, கொஞ்சம் அழுதுபுலம்புவோம். மேலும் - மேலும் - மேலும் தேவன் அதற்காக நம்மை மன்னிப்பார், நாம் தொடர்ந்து போவோம்' என்றனர். மோசே, 'நீங்கள் ஏன் தேவனுடைய கட்டளைகளை மீறுகிறீர்கள்? நான் தேவனுடைய தீர்க்கதரிசியாக, நீங்கள் முடிந்து விட்டீர்கள் என்று கர்த்தருடைய நாமத்தில் உங்களிடம் சொல்லியிருக்கிறேன்' என்றான். ஆமென். இப்பொழுது, அது யோவான் 3:16ஐப் போன்றுள்ள அதே கட்டளையாகும். 'தேவன் உங்களை விட்டுப் போய் விட்டார். நீங்கள் ஏன் திரும்பவும் எழும்ப முயற்சிக்கிறீர்கள்?' எனக்குப் பின்னால் வந்த ஒரு நபரிடம் ஸ்தாபனங்களைத் தாக்குவதைக் குறித்து நான் பேசிக்கொண்டிருந்ததைப் போன்று. ஸ்தாபனங்களிலுள்ள ஜனங்களுக்கு விரோதமாக எனக்கு எதுவும் இல்லை. அது நான் தாக்கிக் கொண்டிருக்கிற அந்த (ஸ்தாபன) முறைமையாயுள்ளது. நீங்கள் ஒரு சிறிய பழைய படகில் இருந்தவாறு, இதோ ஆற்றில் நீர்வீழ்ச்சியை நோக்கி மிதந்து போய்க் கொண்டிருப்பதை நான் கண்டு, அந்தப் படகு அந்த நீர்வீழ்ச்சியை கடந்து செல்லப் போவதில்லை என்பதை நான் அறிந்தால், நான் உங்களைப் பார்த்து கூக்குரலிடாமல் இருப்பேனா? அது நான் உங்களை விரும்பாததால் அல்ல; நான் உங்களை நேசிக்கிறேன். அந்தப் படகு உங்களோடு கூட சின்னாபின்னமாகப் போகிறது. ஆம், ஐயா. 27அந்தக் கோட்பாடுகளும் ஸ்தாபனமும் அங்கே அழியப்போகின்றன, ஏனெனில் அவைகள் வார்த்தைக்கு முரண்பாடாக உள்ளன. புரிகிறதா? அது சரியே. அது முரண்பாடாக உள்ளது. வார்த்தையோடு தரித்திருங்கள். அவைகள் சரியாயிருப்பதாக யூகிக்க வேண்டாம். அவைகள் சரியாயில்லை. அவைகள் தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடாக உள்ளன. எனவே வார்த்தையோடு தரித்திருங்கள். பாருங்கள்? இப்பொழுது. இன்று சபையானது அவ்விதமாக செய்திருப்பதை நாம் காணும்போது, முடிவுகள் என்னவாக இருந்து வருகிறது? இந்த நபர் என்னிடம், 'ஆனால், சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்' என்றார். நான், 'அது தவறென்று நிரூபியுங்கள். ஜான் வெஸ்லியைக் காட்டிலும் ஒரு மகத்தான மனிதர் யார்?' என்று கேட்டேன். 'நீங்கள் ஜான் வெஸ்லியைப் போல மகத்தான மனிதராக இருப்பதாக சொல்லிக் கொள்கிறீர்களா?' நான், 'நான் அவருடைய காலணிகளை சுமக்கவும் முடியாது' என்றேன். ஆனால் நான், 'நான் உம்மிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். ஜான் வெஸ்லி சபையை விட்டுப் போகும்போது, இருந்த அதே நிலையில் அந்த சபையானது தரித்திருந்தால்... ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் அங்கே உள்ளே ஒருகூட்டம் ரிக்கிகளையும் எல்விஸ்களையும் பெற்றுக் கொண்டீர்கள், நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர் எதற்காகப் பிரசங்கம் பண்ணினாரோ, எதற்காக நின்றாரோ அதே காரியத்தை நீங்கள் தாறுமாறாக்கி விட்டீர்கள். தேவன் உங்களை விட்டுப் போய் விட்டார்' என்றேன். அவர், 'நான் இந்தச் சபையைக் குறித்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறேன்' என்றார். நான், 'நீங்கள் எவ்வளவு ஆய்வுக்கட்டுரைகளை எழுதுகிறீர்கள் என்பது எனக்குக் கவலையில்லை. தேவன் உங்களைப் புறக்கணித்து விட்டார். தேவன் ஒவ்வொரு அமைப்பையும், ஒவ்வொரு ஸ்தாபனத்தையும் புறக்கணித்து விட்டார்' என்றேன். உங்களுடைய பெந்தெகோஸ்தே (ஸ்தாபனங்களையும்) அவர் புறக்கணித்து விட்டார். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? மெதொடிஸ்டுகள் எங்கேயிருக்கிறார்கள்? பாப்டிஸ்டுகள் எங்கேயிருக்கிறார்கள்? பிரஸ்பிடேரியன்கள் எங்கேயிருக்கிறார்கள்? கத்தோலிக்கர்கள் எங்கேயிருக்கிறார்கள்? லூத்தரன்கள் எங்கேயிருக்கிறார்கள்? அவர்கள் அதைச் செய்கிற ஒவ்வொரு முறையும், தேவன் அவர்களை அலமாரியின் மேல் வைத்து விடுகிறார். 28நான் எந்த வரலாற்றாசிரியரையும் கேட்டுப்பார்க்கிறேன் - நான் வருடக்கணக்காக வரலாற்றைப் படித்திருக்கிறேன் - ஒரு அமைப்பாக மாறும் எந்த சபையையும் தேவன் சரியாக அங்கேயே மரித்துப்போகும்படி அனுமதிக்கவில்லையா என்று நீங்கள் எந்த நேரமும் எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன், அது மீண்டும் ஒருபோதும் எழும்பினதே கிடையாது. அந்த இடத்தை நீங்கள் எனக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது சரியாக அங்கேயே மரித்து விட்டது, காரணம் என்னவென்றால் ஆளுகை செய்பவரான அவரை அது புறக்கணித்து விட்டது. இஸ்ரவேலர் மற்ற தேசத்தாரைப் போன்று காணப்பட வேண்டுமென்று விரும்பிய போது, அவர்கள் சரியாக அதைத்தான் செய்தனர். அவர்கள் ஒரு இராஜாவை விரும்பினார்கள். தீர்க்கதரிசியாகிய வயதான சாமுவேலிடம் கர்த்தருடைய வார்த்தை வந்தது, அவன் அங்கே நின்று கொண்டு, அவர்களை ஒன்றாக அழைத்து, 'நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்' என்றான். அவர்கள் மற்ற தேசத்தாரைப் போன்று காணப்பட விரும்பினார்கள். அவன், 'நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். நான் உங்களிடம் சத்தியத்தைத்தவிர (வேறு) எதையாவது கர்த்தருடைய நாமத்தில் எப்பொழுதாவது கூறினதுண்டா?' என்று கேட்டான். அங்கேதான் உங்கள் காரியம் இருக்கிறது. அவர்கள், 'இல்லை. நீர் கூறினதெல்லாம் சம்பவித்தன' என்றார்கள். ஓ, அங்கேதான் உங்கள் காரியமே இருக்கிறது. அவன், 'என்னுடைய ஜீவனத்துக்காக நான் எப்பொழுதாவது உங்களுடைய பணத்தை பிச்சையெடுத்திருக்கிறேனா?' என்று கேட்டான். 'இல்லை, சாமுவேல். உமக்காக நீர் ஒருபோதும் காணிக்கை எடுத்ததாக நான் நினைக்கவில்லை.' பாருங்கள்? 'நல்லது, அப்படியானால் நீங்கள் தரித்திருந்து அவர் இராஜாவாயிருக்க அனுமதிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.' 'ஓ, இவை அனைத்தும் உண்மையென்று எங்களுக்குத் தெரியும். நீர் எங்களுக்குச் சத்தியத்தையே சொல்லுகிறீர். ஆனால் சாமுவேலே, நாங்கள் - நாங்கள் பாப்டிஸ்டுகளைப் போலவே இருக்க விரும்புகிறோம்.' பாருங்கள்? 'அப்படியே தொடர்ந்து செல்லுங்கள்' என்றான். சரியாக அங்கேயே அவர்கள் தங்களுடைய ஐக்கியத்தை இழந்து விட்டனர். சரியாக அங்கேயே சபையானது அதனுடைய ஐக்கியத்தை இழந்து விட்டது. 29நீங்கள் உங்களுடைய கோட்பாடுகளையும், உங்களுடைய திட்டங்களையும், உங்களுடைய உபதேசங்களையும், உங்களுடைய வேதாகம உபதேசங்களையும், எடுத்துக்கொண்டு, அது ஒரு காற்புள்ளியோடு (,) (comma) முடிவடைந்து விடுமானால், 'நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், அதோடு கூட நாங்கள் கொண்டிருக்கும்படியாக தேவன் எவ்வளவு கூடுமோ அவ்வளவு அதிகமாக எங்களுக்கு, அனுமதித்து , எங்களுக்கு காண்பிக்கட்டும்' என்று கூறுவார்களானால், அது சரிதான். ஆனால், 'நாங்கள் இதை விசுவாசிக்கிறோம், வேறு எதையும் விசுவாசிப்பதில்லை' என்ற கூறி, ஒரு முற்றுப்புள்ளியோடு (.) (period) அதை எடுத்துக்கொள்கிறீர்கள். மேலும் நீங்கள் ஒரு முற்றுப்புள்ளியை இடும்போது, அது சரியாக தேவனைத் தடை செய்கிறது. அது சரியே. சபைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே அங்கே அவர் இருந்தார். பாருங்கள்? எனவே அவர்களால் அதற்கு மேலும் போக முடியவில்லை. இஸ்ரவேலர்களால் அதற்கு மேல் போக முடியவேயில்லை. எனவே அவர்கள், 'நல்லது, நாம் மேலே சென்று மனஸ்தாபப்பட்டு, நாம் மீண்டும் முயற்சிப்போம். தேவன் இளகின மனம்படைத்தவர் என்பதை நாம் அறிவோம், எனவே அவர் நம்மை மன்னிப்பார்' என்றனர். அவன் மேலே போகிறான், மோசே, 'நீங்கள் வரம்பு மீறிப்போகிறீர்கள் - நீங்கள் தேவனுடைய கற்பனைகளை மீறுகிறீர்கள். தேவன் உங்களை விட்டுப் போய் விட்டதாக அவர் கூறியிருக்கிறார், அது அதை முடிக்கிறது. மேலும் அதைக்குறித்து மேலானதைச் செய்யுங்கள். சரியாக இங்கேயே தரித்திருங்கள், ஏனெனில் உங்களுடைய சொந்த - உங்களுடைய சொந்த இடத்திலேயே, சரியாக இங்கேயே நீங்கள் அழுகிப்போகப் போகிறீர்கள். நீங்கள் உங்களையே இதற்குள் கொண்டு வந்திருக்கிறீர்கள்; நீங்கள் உங்களையே இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்; எனவே இங்கேயே நீங்கள் தரித்திருக்க வேண்டும்' என்று கூறினான். இப்பொழுது, அது தான்... இதோ அது இருக்கிறது. நான் இப்பொழுதுதான் அதை வாசித்தேன். நீங்கள் உங்களையே இந்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்; நீங்கள் இங்கேயே மரித்து விட்டீர்கள்; நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்து விட்டீர்கள்; எனவே நீங்கள் இங்கேயே தொடர்ந்து இருப்பீர்கள். இங்குதான் நீங்கள் தங்கியிருக்கப் போகிறீர்கள். 'நல்லது, நாம் எப்படியாயினும் அதை முயற்சிப்போம்.' எனவே மேலே சென்று, 'கர்த்தாவே, எங்களை மன்னியும். நாங்கள் இதைச் செய்திருக்க வேண்டும் என்று நான் உம்மிடம் கூறுவேன், கர்த்தாவே' என்றனர். மேலும் அழுது கூப்பாடு போட்டனர். அடுத்த நாள் அவர்கள், 'சரி, எல்லா மனிதர்களே, இப்பொழுது வாருங்கள், நாம் போவோம்' என்றனர். ஆனால் அவர்கள் உடன்படிக்கை பெட்டியாகிய வார்த்தையை தங்களுடன் எடுத்துக்கொண்டு செல்ல முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தீர்க்கதரிசியும் அவர்களோடு போகவில்லை. தேவன் அவனிடம் எங்கு தங்கிருக்க வேண்டுமென்று கூறினாரோ அதே இடத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தான். அவர்கள் கூடுதலாக பத்து இலட்சம் பேர் முன்னேறிச் சென்றனர், ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். அந்த அமலேக்கியர்களும் அவர்களும் முற்றிலுமாக அவர்களை அந்த தேசத்தை விட்டு விரட்டியடித்தனர். அவர்கள் ஓடிப்போயினர், ஏனெனில் தேவன் அவர்களோடு இருப்பதாக அவர்கள் யூகித்துக்கொண்டனர். இப்பொழுது, நான் - நான்... செய்யப் போகிறேன். அதிக நேரம் இல்லை. நாம் ஒரு விடுமுறையை எதிர்நோக்கியிருக்கிறோம், ஈஸ்டர் என்று அழைக்கப்படும் விடுமுறையை. தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் இந்த அமெரிக்க ஜனங்கள்... 30எல்லாம் அறிந்தவனைப் போன்று நான் நடந்து கொள்ளவில்லை என்று நம்புகிறேன். நான் அவ்வாறு நடந்து கொண்டால், நீங்கள் - நீங்கள் என்னை மன்னியுங்கள், மன்னிப்பீர்களா? ஆனால் எப்படியாக இந்த உலகத்தில் நான்... நீங்கள் அந்தக் கூடாரத்தில் ஒரு ஆணியை அடித்து, அதை பாதியளவு தளர்வாக விட்டுவிடுவீர்களானால், நீங்கள் ஒருக்கால் அதை நன்றாக அங்கே அடித்து வைக்காமல் இருக்கலாம். முதலாவது... இந்த எல்லா ஆணிகளும் அவ்விதமாக அடிக்கப்படுமானால், நான் அதற்குக் கீழே நிற்கவே பயப்படுவேன். நீங்கள் சுத்தியலால் அழுத்தமாக அடித்து அதை நன்கு அடித்து மடக்கி இறுக்கமாக வைக்க வேண்டும். நாம் கர்த்தருடைய வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த ஆணியை எல்லாவிதத்திலும் வலிமையாக அடித்து உள்ளே இறக்குவோம். அதன் நிரூபணத்தின் மூலமாக மறுபக்கத்தில் அதை இறுக்குவோம். 'இந்தப் பாறையின் மேல் என் சபையைக் கட்டுவேன்' (பாருங்கள்?), ஆவிக்குரியபிரகாரமாக வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சத்தியம். 'இந்தப் பாறையின் மேல் என் சபையைக் கட்டுவேன்.' ஓ, அவள் என்றென்றுமாக நிலைத்து நிற்பாள், ஏனெனில் அது நீங்கள் அடித்துக்கொண்டிருக்கிற சுவிசேஷ ஆணிகளாயிருக்கிறது. என்ன செய்யப்படும் என்று சொல்லப்பட்டதோ அதை நிரூபிப்பதற்கு, தேவன் மறுபக்கத்தில் வார்த்தையை உறுதிபடுத்துவதன் மூலமாக அதை இறுக்கி உள்ளே பதிக்கிறார் (clinches). ஆமென். அப்போது தான் நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள். வார்த்தை அவ்வாறு கூறுகிறது, தேவன் சரியாக இங்கே உங்களுக்கு முன்பாக நின்று, அது அவ்விதமாக இருப்பதை நிரூபிக்கிறார். அப்படியானால் நீங்கள் அங்கிருந்து எங்கே போகப் போகிறீர்கள்? 31இப்பொழுது, கவனியுங்கள். இப்பொழுது, ஈஸ்டர் காலையன்று எல்லாமே நடக்கும், அப்படியே காயீன் செய்தது போல, ஈஸ்டர் மலர்களைப் பீடத்தின் மேல் வைப்பதற்கு, ஆயிரக்கணக்கான, மில்லியன் கணக்கான டாலர்கள் பணம் செலவழிக்கப்படும். பாருங்கள்? பீடமானது மலர்களுக்காக உண்டாக்கப்பட்டிருக்கவில்லை. காயீன் அதை முயற்சி செய்தான். அது கிரியை செய்யவில்லை. பீடமானது மனுஷ ஆத்துமாக்களுக்காக உண்டாக்கப்பட்டிருக்கிறது. தேவன் உங்களுடைய மலர்களை விரும்பவில்லை; நீங்கள் பீடத்தின் மேல் இருக்கவே அவர் விரும்புகிறார். நீங்கள் ஒரு பதிலீடை உண்டாக்க முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தான் அவ்விடத்தைச் சேர்ந்த நபராயிருக்கிறீர்கள். நானும் நீங்களும், நாம் தான் பீடத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கிறோம். ஆனால் அதெல்லாம் சரிதான் என்று நாம் யூகிக்கிறோம். தேவன் அதை ஏற்றுக்கொள்ளுகிறார், அது சரிதான் என்று நாம் கூறுகிறோம். நாம் அப்படியே அதைச் செய்து, நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான் என்று யூகிக்கிறோம். இப்பொழுது, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் அதைக்கூட செய்ய மாட்டார்கள் என்பதை நாம் கவனிக்கிறோம். அவர்கள் வெளியே சென்று மது அருந்துகிறார்கள். அவர்கள் அறிவார்கள், தாங்கள்... அதுதான் ஈஸ்டர் என்றும் அதுவே ஈஸ்டரைக் குறிக்கிறது என்றும் அவர்கள் அறிகிறார்கள். எனவே அவர்கள் அநேக பிரச்சனைகளைப் பெற்றிருக்கிறார்கள், மேலும் அவர்களுக்குப் பின்னால் பாவம் உள்ளது, எனவே அவர்கள் மது அருந்தினால், அவைகளையெல்லாம் மறந்து விடலாம் என்று எண்ணுகின்றனர், அதைத்தான் - அதைத்தான் அவர்கள் செய்ய வேண்டியுள்ளது என்று எண்ணிக்கொள்ளுகிறார்கள். அதுதான் அமெரிக்கா. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதுதான் என்று எண்ணிக்கொள்ளுகிறார்கள். 32நான் வெள்ளிக்கிழமையன்று, என்னுடைய பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வர போனபோது, நீண்ட காலமாகக் கண்டதிலேயே வினோதமான காட்சியை நான் கண்டேன். அந்தக் கூட்டத்தின் மத்தியிலிருந்த ஒரு ஸ்திரீ புகைபிடித்துக்கொண்டிருப்பதை நான் கண்டேன். நான் திரும்பிச் சென்று என் மனைவியிடம் சொன்னேன். 'நான் ஒரு அற்புதத்தைக் கண்டேன்' என்றேன். அந்த ஸ்திரீகள் ஒவ்வொருவரும் வெளியே வந்து, 'ஹலோ, லிட்டி' என்று கூறி, (சிகரெட்டுகளைப்) பற்ற வைத்தனர். 'பாருங்கள், நானும்... (சகோதரன் பிரன்ஹாம் ஊதுவது போன்ற ஒரு சத்தமெழுப்புகிறார் - ஆசிரியர்.)' என்றனர். ஓ, என்னே. பாடகர் குழுக்களில் பாடுகிறார்கள், சபையைச் சேர்ந்திருக்கிறார்கள். அதெல்லாம் சரிதான் என்று அவர்கள் யூகிக்கிறார்கள். பாதையின் முடிவில் நீங்கள் வித்தியாசமானதைக் காணப் போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று பாருங்கள். ஆனால் அவர்கள், 'நல்லது, நாம் என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் கூறுகிறேன். நாம் - நாம்...' என்று எண்ணுகின்றனர். அவர்களில் சிலர் தொண்டு நிறுவனங்களுக்கு கொஞ்சம் பணத்தை நன்கொடையாக கொடுக்கும் அளவுக்கு போதுமான நல்ல மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். 'நான் என்னுடைய பாகத்தைச் செய்தேன்.' அதுவல்ல... அதுவல்ல... அது ஈஸ்டரல்ல. அது ஈஸ்டரல்ல. அது ஒரு நல்ல காரியம்தான், அதற்கு விரோதமாக எனக்கு எதுவும் கிடையாது, தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளிப்பதற்கு நான் விரோதமானவன் அல்ல. அதெல்லாம் சரிதான். ஆனால் தேவனிடத்தில் உங்களுடைய கடமை அதுவல்ல. அது உங்களுடைய சக மனிதனோடுள்ள உங்களுடைய கடமையாகும். தேவனிடமுள்ள உங்களுடைய கடமை என்னவெனில் உங்களுடைய ஜீவியத்தை அவருக்குக் கொடுப்பதே. உங்களுடைய பணத்தை உங்களுடைய சக மனிதனிடம் கொடுங்கள். புரிகிறதா? நாம் அதை எவ்வாறு பெற்றிருக்கிறோம் என்று புரிகிறதா? ஆனால் அதெல்லாம் சரிதான் என்று அவர்கள் யூகிக்கின்றனர். 'ஓ, ஆமாம். அது - அதெல்லாம் சரிதான்.' 33ஓ. அவர்களில் சிலர் ஈஸ்டர் முட்டைகளையும், முயல்களையும் உயிர்த்தெழுதலுக்குப் (பதிலாக) எடுத்துக் கொள்கின்றனர். உலகத்திலுள்ள முயல்களுக்கு உயிர்த்தெழுதலோடு என்ன சம்பந்தம் இருக்கிறது? ஈஸ்டர் முட்டைகளுக்கும், புது தொப்பிகளுக்கும் ஈஸ்டரோடு என்ன வேண்டியிருக்கிறது? ஒரு பிரசங்கியார் என்னிடம், 'சகோதரன் பிரன்ஹாமே, நான்...' என்றார். அது ஒரு காம்ப்பல்லைட் (Campbellite) பிரசங்கியார் ஆவார், அவர் ஒரு கிறிஸ்தவர், (Campbellite) - கிறிஸ்தவர் என்று அழைக்கப்படும் ஒரு ஸ்தாபனத்தின் அங்கத்தினர் - மொழிபெயர்ப்பாளர்.) அவர், 'அந்த பெண்மணிகள் அணிந்திருந்த வேடிக்கையாகத் தோற்றமளிக்கிற சில தொப்பிகளை பார்த்து என் முகத்தை மறைத்துக் கொண்டு நகைக்க வேண்டியிருந்தது' என்றார். நான், 'நீங்கள் உங்கள் பாடப்பொருளை எங்கிருந்து எடுக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அது எங்கு அவசியமாயிருக்கிறதோ அங்கிருந்து அதை எடுங்கள். குழந்தைக்குச் செல்லம் கொடுப்பது போன்று, அதை செல்லமாக கொஞ்சி சீராட்டிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் பாவத்தோடு கொஞ்சி குலாவ முடியாது; நீங்கள் அதைக் கடிந்து கொள்ள வேண்டும். அது உண்மை. அந்தக் காரியத்தைக் கடிந்து கொள்ளுங்கள். அது தவறாயுள்ளது. அதை விட்டு வெளியே வாருங்கள். 34நிச்சயமாகவே, அவர் அதை செய்த காரணத்தினால், நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னனவெனில், டீக்கன் வாரியம் தலைமையகத்துக்குக் கடிதம் எழுதினது. அவர் அந்த ஸ்தாபனத்தை விட்டு புறம்பே தள்ளப்பட வேண்டியிருந்தது. ஆனால் எனக்கோ, நான் சற்றே... அப்படியானால் அவர் ஞாயிற்றுக் கிழமையில் பொரித்த கோழிக்கறியைக் கொண்டிருக்க மாட்டார். ஓ, அவர் தான் மனிதன். பாருங்கள், புரிகிறதா? இரவு உணவு புசிக்கும் போது அணியும் மேலங்கியை (tuxedo) பிரசங்க பீடத்தில் அணிய முடியவில்லை. வேறு யாருமே அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. அந்த ஸ்தாபனம்... அவர் ஒன்றை விட்டு வெளியே உதைத்து தள்ளப்படுவாரானால், அவர்களைச் சேர்ந்த மற்றவர்களால் இவர் தவறானதைச் செய்தவர் என்று முத்திரை குத்தி விடப்பட்டு விடுவார். பாருங்கள்? எனவே அவர் அங்கே மேலேயிருக்கிற அந்தப் பெரிய குழுவில் இருக்கிறார். ஆனால் நான் உங்களிடம் கூறுகிறேன், சரியாகச் சொன்னால், இங்கேயிருக்கும் இந்தப் பெரிய குழுவில் என்னுடைய பெயர் இருப்பதைக் காட்டிலும் மேலேயுள்ள அந்தப் பெரிய புத்தகத்தில் என்னுடைய பெயர் இருக்க வேண்டும். ஆம். புரிகிறதா? தேவன் உங்களை ஏற்றுக் கொள்வார். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. அவர்கள் அதைக் குறித்து பயப்படுகின்றனர். அதெல்லாம் சரிதான் என்று யூகிக்கிறார்கள், தேவன் அதைப் புரிந்து கொள்வார். அவர் புரிந்து கொள்கிறார். நீங்கள் சரியானதைச் செய்ய வேண்டும் என்பதை அவர் புரிந்து கொள்கிறார். சரி. ஜனங்கள் மதுவைக் குடித்து, தங்கள் கடந்த காலத்தை விட்டு விட்டு, அதைக் குறித்து மறக்க முயற்சிக்கிறார்கள். உங்களால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. 35இன்றைய பிரசங்கிமார்கள் தங்கள் உபதேசத்தையும், தங்கள் வித்தியாச பேதங்களையும், மற்றும் யாவற்றையும் பிரசங்கம் பண்ணுகிறார்கள், அது சரியென்று யூகிக்கிறார்கள். தலைமை அலுவலகம் அவ்வாறு கூறினது. அதுதான் அவர்களுக்கு வேதாகமக் கல்லூரியில் போதிக்கப்பட்டது. அதெல்லாம் சரிதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள், அதெல்லாம் சரிதான் என்று வெறுமனே யூகிக்கிறார்கள். இஸ்ரவேலரும் கூட யூகித்தார்கள், அவர்கள் எந்த இடத்திற்கும் சென்றடைவில்லை. புரிகிறதா? யூகிக்க வேண்டாம். நீங்கள் சரியாயிருக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். புரிகிறதா? சரி. அவர்கள், 'நல்லது, அது சரிதான். புறப்பட்டு முன்னே செல்லுங்கள். அது நல்லது, நான் இந்தக் குறிப்பிட்ட காரியத்தைச் சேர்ந்தவன், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம். எங்களுடைய - எங்களுடைய மாவட்ட கண்காணிகள் இதைப் போதிக்கிறார்கள். எங்களுடைய - எங்களுடைய - எங்களுடைய - எங்களுடைய - எங்களுடைய (அவர்கள் எழுதுகிற அந்த சிறு புத்தகங்களை நீங்கள் என்னவென்று அழைக்கிறீர்கள், உங்களுக்குத் தெரியுமா?), எங்களுடைய மதக் கோட்பாடுகளும், எங்களுடைய - எங்களுடைய உபதேசங்களும் இதை விசுவாசிக்கிறது' என்று கூறுகிறார்கள். அது வார்த்தைக்கு முரணாய் இருக்குமானால், அந்தக் காரியத்தைக் குப்பைத் தொட்டியில் வீசி எறியுங்கள், வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரமாணம் தான் உண்டு: அதுதான் அன்பு; ஒரு புத்தகம் தான் உண்டு: அதுதான் வேதாகமம்; ஒரு கோட்பாடு தான் உண்டு: அதுதான் கிறிஸ்து, அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருங்கள். புரிகிறதா? அது சரியே. அதைச் செய்ய வேண்டிய வழி அதுதான். புரிகிறதா? ஜனங்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் வந்து அந்தக் காரியங்களைச் சேர்ந்து கொள்கிறார்கள். நான் உங்களிடம் சத்தமிடுவதாக கருதவில்லை என்று நம்புகிறேன். ஆனால் நீங்கள் அதை நன்கு ஏற்றுக் கொள்ளும்படி நான் - நான் செய்ய வேண்டியுள்ளது. அது ஆழமாகப் பதியும் வரையில் நீங்கள் - நீங்கள் அங்கே ஏதோவொரு கட்டத்துக்கு வந்து அதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். உ—ஊ. அது உண்மை. 36நான் முதலாவது குத்துச்சண்டை செய்வதற்காக பயிற்சி செய்ய ஆரம்பித்தபோது, நான் தொழில் ரீதியாக குத்துச்சண்டை செய்ய போவதற்கு முன்பு, அங்கே வழக்கமாக 'ஆறு வினாடி ஸ்மித்' என்று அழைக்கப்படும் ஒரு பயிற்சியாளர் இருப்பார். தொழில் ரீதியாக அவர் சண்டை போட்ட முதலாவது குத்துச்சண்டையில், அவர் அம்மனிதனை ஆறே வினாடிகளில் அடித்து வீழ்த்தி விட்டார் (whipped). நான் பயிற்சி செய்ய ஆரம்பித்த போது, அம்மனிதன் என்னைக் கொன்று போட்டதாக உணர்ந்தார். அவர் என்னை துல்லியமாக குத்தி அந்தக் குத்துச்சண்டை அரங்கை விட்டு வெளியே தள்ளினார், மேலும் மற்ற யாவற்றையும் செய்தார். நான் கயிறுகளில் தாவிக் கொண்டும், தினமும் ஏழு எட்டு மைல்கள் ஓடிக் கொண்டும், மற்றும் எல்லா பயிற்சிகளையும் செய்து கொண்டிருந்தேன். நான், 'ஆறு (Six) அவர்களே, நீர் ஏன் என்னை அவ்விதமாக செய்ய வைக்கிறீர்?' என்று கேட்டேன். பாருங்கள்? நான், 'நீர் அப்படியே என்னுடைய மூச்சை என்னை விட்டு வேகமாக வெளியேற்றி விடுகிறீரே. மனிதரே, நான் நான்கு கயிறுகளின் மேலேறிச் சென்று, அங்கிருந்து வெளியே வந்து, அந்த நாற்காலிகளின் இடையில் சென்று, அவைகளின் மேல் என்னுடைய முதுகை உடைத்துப் போடுவது போல் உணர்ந்தேன்' என்றேன். அவர் நகைத்து விட்டு, 'அது தான் உனக்கு நன்மை செய்யும்' என்றார். நான், 'அது எனக்கு நன்மை செய்யுமா? அது எனக்கு எப்படி நன்மை செய்ய முடியும்? நீர் ஏறக்குறைய என்னைக் கொன்று போட ஆயத்தமாயிருக்கிறீரே' என்றேன். அவர், 'இதோ பார், பில்லி. நீ சரீரபிரகாரமாக எவ்வளவு தகுதியுள்ளவன் என்பது எனக்குக் கவலையில்லை; உன்னுடைய சரீரம் அதைத் தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும், அது துரிதமாக பழைய நிலைக்கு திரும்பி வர வேண்டும். நீ ஒரு கடினமான முஷ்டிக் குத்தை பெற்று, வழக்கமாக உன்னுடைய சரீரம் பழைய நிலைக்கு திரும்பாமல் இருக்குமானால், நீ அங்கேயே கிடந்து, (எண்ணும் போது) அந்த எண்ணிக்கையை பெற்றுக் கொள்வாய். ஆனால் உன்னுடைய - உன்னுடைய சரீரம் வழக்கமாக அதைத் தாங்கிக் கொள்ளுமானால், நீ திரும்ப எழுந்து விடுவாய்...' என்றார். நீ குத்து விடுகிற ஒவ்வொரு தடவையும், அது இரத்தத்தை அதிர்ச்சியூட்டி, இரத்தம் திரும்ப இருதயத்தை நோக்கிப் பாய்கிறது. அவர், 'நீ அதைச் செய்வாயானால், உன்னுடைய சரீரம் துரிதமாக பழைய நிலைக்கு திரும்பி வருவது பழக்கமாகி விடும். நீ அடித்து கீழே வீழ்த்தப்படும் போது, (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய விரல்களைச் சொடுக்குகிறார் - ஆசிரியர்.) நீ மீண்டும் எழுந்து விடுவாய்' என்றார். புரிகிறதா? 'நீ அடித்து கீழே வீழ்த்தப்படும் போது அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்துவதில்லை - நீ மீண்டும் உன்னுடைய காலூன்றி துரிதமாக எழுந்து விடுவாய். இப்பொழுது நீ என்னை வெறுக்கிறாய். ஆனால் நீ அங்கே வெளியே அந்தக் குத்துச்சண்டை அரங்கத்திற்குள் போகும் போது, நீ என்னைப் பாராட்டுவாய்' என்றார். அது சரியாக இருந்தது. 37சகோதரனே, சில நேரம் அதைக் கொண்டிராதவர்களை நான் தாக்க வேண்டியதாயுள்ளது. ஆனால் நான் ஒரு காரியத்தை கண்டு கொண்டேன். ஒரு குழந்தைக்கு செல்லம் கொடுப்பது போல அவர்களுக்கு செல்லம் கொடுக்க வேண்டாம்; அதிதீவிரமாக காரியத்தை நடப்பியுங்கள். நீங்கள் கல்வாரிக்கு வரும் போது, என்னை மெச்சுவீர்கள். புரிகிறதா? நீங்கள் பாதையின் முடிவுக்கு வரும்போது, நீங்கள், 'தேவனுக்கு ஸ்தோத்திரம். நான் அந்தப் பழைய கரடுமுரடான பாதையை ஏற்றுக் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இதோ நான் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் கழுவப்பட்டவனாய் நிற்கிறேன்' என்று கூறுவீர்கள். புரிகிறதா? அங்கேயுள்ள அந்தப் பழைய மதக்கோட்பாடுகள் மற்றும் காரியங்களைக் குறித்து வீண்விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அதைச் செய்வதை நிறுத்தி விட்டு, இந்த வழியில் வந்து விடுங்கள். தேவனிடம் ஒரு வழியும், ஒரு திட்டமும் உண்டு. அது சரியாக இதோ இந்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. நாம் அதனோடு தரித்திருப்போமாக. ஆனால் ஜனங்கள் வந்து எதைச் சேர்ந்து கொள்கின்றனர்? அவர்கள் சரியானதையே செய்து கொண்டிருப்பதாக யூகிக்கின்றனர். அதன்பிறகு அவர்கள், 'தேவன் எங்கே? பழைய ஏற்பாட்டின் தேவன் எங்கே? தீர்க்கதரிசிகளை எழும்பப்பண்ணின தேவன் எங்கே? இந்த எல்லா காரியங்களையும் வாக்குப்பண்ணியுள்ள தேவன் எங்கே?' என்று கேட்கின்றனர். ஏன், நிச்சயமாக அவர் அங்கே கிரியை செய்யப் போவதில்லை. அவரால் முடியாது. கிரியை செய்ய அவருக்கு அங்கே எதுவுமேயில்லை. 38என்னுடைய வயதான தெற்கத்திய தாயார் வழக்கமாக என்னிடம், 'சிவப்பு முள்ளங்கியிலிருந்து நீ எவ்வாறு இரத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதில் இரத்தம் எதுவுமேயில்லையே' என்று கூறுவார்கள். அது உண்மை. முழுவதும் உறைந்து போயிருக்கிற ஒரு மரித்துப் போன ஸ்தாபன சபை பிணவறையில், நீங்கள் எவ்வாறு ஆவிக்குரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தில் ஆவியைப் பெற்றிருக்க வேண்டும்; அதுதான் அவருடைய வார்த்தை. 'என்னுடைய வசனங்கள் ஆவியாயுள்ளன' (யோவான் 6:63) என்று இயேசு கூறினார். அவைகள் ஆவியாயுள்ளன. இப்பொழுது, ஜனங்கள் சேர்ந்து கொள்கிறார்கள். அதெல்லாம் சரிதான் என்று அவர்கள் எண்ணுகிறார்கள் (அது உண்மை), அதெல்லாம் சரிதான் என்று அவர்கள் யூகிக்கிறார்கள். பிரசங்கிமார்கள் தொடர்ந்து அம்மாதிரியான ஒரு கோட்பாட்டை பிரசங்கம் பண்ணுகிறார்கள். வேதாகமம் வேறொரு காரியத்தைக் கூறுகிறது என்பதை அறிந்திருந்தும், எப்படியும் அவர்கள் அதைப் பிரசங்கம் பண்ணுவார்கள், அவர்கள் சரியாக இருப்பதாக யூகித்துக் கொள்ளுகிறார்கள். அது என்ன? 'மனிதர்களுடைய பாரம்பரியத்தை எடுத்துக் கொண்டு, தேவனுடைய கற்பனைகளை அவமாக்குகிறார்கள் (மத்தேயு 15:6).' அவர்களிடம் - அவர்களிடம் சுவிசேஷத்தின் ஒரு பாகம் இருக்கிறது. அவர்கள் அதில் ஒரு பாகத்தைப் பிரசங்கம் பண்ணுகிறார்கள், நிச்சயமாக அதில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தேவன் ஏவாளிடம் கூறின சுவிசேஷத்தில் சற்றேறக்குறைய 99 சதவீதத்தை சாத்தான் எடுத்துக் கொண்டு, அது சத்தியம் தான் என்று ஒப்புக் கொண்டான். ஆனால் அது இந்த ஒரு சிறிய காரியத்தினிடத்தில் வரும் போது, அவன், 'இப்பொழுது, அது சத்தியம் அல்லவென்று நான் கூறவில்லை. ஆனால் நிச்சயமாகவே, அந்நாட்கள் கடந்து போய் விட்டன என்று உனக்குத் தெரியும். நீ - நீ இவ்விதமாகத் தான் இருப்பாய்' என்று கூறினான். பாருங்கள்? 39அதனோடு எதையும் கூட்டவோ, அதை விட்டு எதையும் எடுத்துப் போடவோ செய்யாதீர்கள். (உபா. 4:2) அது இருக்கிற விதமாகவே அதை அப்படியே வைத்திருங்கள். எதையும் யூகிக்க வேண்டாம். அப்படியே வார்த்தையில் விசுவாசம் வைத்திருங்கள். அந்த பெந்தெகோஸ்தே சபையானது அதனோடு தரித்திருந்திருக்குமானால், எடுத்துக் கொள்ளப்படுதல் நடந்து முடிந்திருக்கும். ஓ, நீங்கள், 'சகோதரனே, ஒரு நிமிடம் பொறுங்கள். இப்பொழுது ஏதோ தவறான ஒரு காரியத்தை நீர் கூறினீர்' என்று கூறலாம். இல்லை, நான் ஒருபோதும் தவறான காரியத்தைக் கூறவில்லை. இல்லவே இல்லை. நான் கூறினது இன்னதென்பதை அறிவேன். நோவாவின் நாட்களில்... வேதாகமம், 'நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும் (மத்தேயு 24:37, லூக்கா 17:26)' என்று கூறுகிறது. நோவாவின் நாட்களில், தேவன் நீடிய பொறுமையோடிருந்தார், (பாருங்கள்?) ஒருவரும் கெட்டுப் போகாதிருக்க வேண்டுமென்று விரும்பி - அவ்வாறு விரும்பி, நாட்களை அந்தவிதமாகக் கடத்திக் கொண்டு வந்தார், பாருங்கள். அவர் தொடர்ந்து, தொடர்ந்து, தொடர்ந்து நீடிய பொறுமையோடிருந்தார். இன்றும் அதே காரியம் தான் சம்பவிக்கிறது, அந்நாளில் இருந்தது போலவே, முடிவிலும் தமது சபையானது வந்து அவருடைய வார்த்தையை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று தமது சபைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர்கள் அப்படியே தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். தேவன் யாராவது ஒருவரை அனுப்பி, உரத்த சத்தமிடும் ஒவ்வொரு தடவையும், அவன் காட்சியை விட்டு எடுக்கப்பட்டுப் போன உடனே, ஒரு கூட்டம் ரிக்கிகள் மற்றும் எல்விஸ்கள், வேதத்தில் தாங்கள் பெற்ற பெரிய டாக்டர் பட்டங்களோடு (DD's) ஒன்றுசேர்ந்து விடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் அதனோடு இதையும், அதனோடு அதையும் கூட்டிக் கொள்வார்கள், நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவென்றால், அதெல்லாமே அப்படியே மரித்துப் போய் விட்டது. 40நம்முடைய பெந்தெகோஸ்தே (சபை)களும் அதேவிதமாகவே இருக்கின்றன: அவைகளில் பெரும் பாகத்தினர் தெய்வீக சுகமளித்தலையும் மற்ற யாவற்றையும் மறுதலிக்கின்றனர். பாருங்கள்? தெய்வீக சுகமளித்தலின் பேரில் என்னை எப்பொழுதாவது மோசமாக நடத்தியவர்கள் பெந்தெகோஸ்தே ஊழியக்காரர்கள் தான். ஏன், நான் - நான் ஒரு குறிப்பிட்ட பட்டணத்திலிருந்த ஒரு ஆயுத சாலையை (armory) வாடகைக்கு எடுத்தேன், ஜனங்களை உட்கார வைக்க என்னிடம் போதுமான இருக்கைகள் இல்லாதிருந்தது. அந்த ஏழை ஜனங்கள் ஆர்கன்ஸôஸின் மலைப்பாகங்களிலிருந்தும், எல்லாவிடங்களிலிருந்தும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். நான் பெந்தெகோஸ்தே இயக்கத்தின் ஒரு மிகப்பெரிய ஸ்தாபனங்களில் ஒன்றிற்குச் சென்றேன். அது... ஏன், அங்கு ஆவிக்குரிய உஷ்ணமானி பூஜ்ஜியத்துக்குக் கீழே தொண்ணுறாக இருந்தது. ஏன், நீங்கள் அதைக் கண்டிருக்க வேண்டும். அந்த மனிதரிடம் ஏறக்குறைய 300 பெஞ்சு இருக்கைகள் இருந்தன. அவர்கள் ஒரு அருமையான பெரிய சபையைக் கட்டியிருந்தனர். நிச்சயமாக. செழிப்பு என்பது ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் ஒரு அடையாளம் என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். அது சரியாக அதற்கு முரணாயுள்ளது. நான் அவரிடம் இவ்வாறு கேட்டேன்; நான், 'எனக்கு இந்த இருக்கைகளைத் தர முடியுமா? நான் அவைகளுக்காக அதிக பணத்தை செலுத்தி விடுகிறேன்' என்றேன். அவர், 'தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிற எவரையும் என்னுடைய இருக்கைகளில் உட்கார விட மாட்டேன்' என்று கூறிவிட்டார். அதுதான் பெந்தெகோஸ்தே. 41கடந்த வருடம், ஜமைக்காவிலுள்ள கிங்ஸ்டனில், அந்த பந்தய களத்தில் கர்த்தர் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார், அவர்கள் அங்கே ஒரு பெந்தெகோஸ்தே ஊழியக்காரரைக் கொண்டிருந்தனர். நான் கிறிஸ்தவ வியாபார புருஷர்களோடு இருந்தேன். நான், 'நாங்கள் கியூபாவிலிருந்தும், ஹெய்டியிலிருந்தும் (Haiti), சுற்றியுள்ள தீவுகளிலிருந்தும் வந்திருந்த வியாபாரிகளைக் கொண்டிருந்தோம், அவர்கள் கடந்த இரவில் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தனர். மனிதர்களாகிய நீங்கள் என்ன செய்தீர்கள்...? நான் உங்களைக் குறித்து வெட்கப்படுகிறேன். நீங்கள் எதைக் குறித்து பேசினீர்கள்? காடிலாக் கார்கள் (Cadillacs) எல்லாவற்றையும் குறித்து தான்' என்று கூறினேன். 'நான் அந்த மூலையில் சிறிய அளவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! கர்த்தர் இதை எனக்குக் கொடுத்தார், கர்த்தர் இதை ஆசீர்வதித்தார், கர்த்தர் அதை ஆசீர்வதித்தார்.' நான், 'அந்த மனிதர்கள் உட்கார்ந்து ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்தனர். அவர்களுடைய இருதயங்களை எனக்குத் தெரியும் என்று நீங்கள் அறியும் அளவுக்கு நான் உங்களோடு போதுமான நீண்ட காலம் இருந்து வந்துள்ளேன். நான் அதை அறியும்படி கர்த்தர் செய்தார். அவர்கள் எதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நான் கண்டேன். நீங்கள் அவர்களிடம் என்ன கூறிக் கொண்டிருக்கிறீர்கள்? அவர்கள் இந்தப் பெரிய சடங்காசாரமான பிணவறைகளைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறார்கள், அவர்கள் செழிப்பாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருக்கிறார்கள்' என்றேன். 'உங்களிடம் எவ்வளவு வித்தியாசம் உள்ளது? நீங்கள் எப்போதுமே உங்களிடம் இருப்பவைகளைக் குறித்தும், இவ்வளவு அதிக காலத்தில் எவ்வளவு பேரை ஒன்று திரட்டிருக்கிறீர்கள் என்பதைக் குறித்தும் தான் தற்பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அசலான பெந்தெகோஸ்தேயிலிருந்து அது எவ்வளவு வித்தியாசமாக உள்ளது. அவர்களிடமிருந்த யாவற்றையும் அவர்கள் விற்று, அதை ஏழைகளுக்குக் கொடுத்து விட்டனர். நீங்களோ அதற்கு மாறாக செய்கிறீர்கள். ஐசுவரியமாய் இருப்பதென்பது எதைப் பொருட்படுத்திக் கூறுகிறது என்பதைக் குறித்தெல்லாம் அந்த ஜனங்கள் அறிந்திருக்கிறார்கள். திருப்தியளிக்கிற ஏதோவொன்றை அவர்கள் கண்டுபிடிக்க விரும்பி, அதில் கொஞ்சம் ஜீவனைப் பெற்றனர்' என்றேன். 42அந்த இரவில் நான் இந்த அடிப்படையில் பேசிக் கொண்டிருந்த அந்த இடத்திலிருந்த மனிதர்கள், நான் அங்கே அவர்களிடம் சென்று, அதைக் குறித்து அவர்களிடம் பேசின பிற்பாடு, ஒரு சிறிய மனிதர் என்னிடம் மேலே நடந்து வந்து, அவர், 'நீர் எவ்வளவு தவறாய் இருக்கிறீர்' என்றார். நான், 'தவறா?' என்று கேட்டேன். அவர், 'ஆம், ஐயா, அங்கே ஆதிகாலத்து பெந்தெகோஸ்தேயினரைக் குறித்தும், அந்த ஜனங்கள் தாங்கள் பெற்றிருந்த சகலத்தையும் எவ்விதம் விற்றுப் போட்டனர் என்பதைக் குறித்த அந்த விவரத்தைக் கூறின போது தான் நீர் தவறானதைக் கூறினீர். அவர்கள் எப்பொழுதும் செய்ததிலேயே மோசமான காரியம் அதுதான்' என்று கூறினார். நான், 'உங்களால் எவ்வளவு உலகப்பிரகாரமாக ஆக முடியும்' என்று நினைத்துக் கொண்டேன்! பாருங்கள்? அவர், 'அதுதான் மோசமான காரியமாக இருக்கிறது...' என்றார். நான், 'அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் தவறு செய்தார் என்று என்னிடம் கூற விரும்புகிறீரா? அவர் தவறு செய்பவராய் இருப்பாரானால், எம்மாதிரியான ஒரு தேவனை நீர் சேவித்துக் கொண்டிருக்கிறீர்? அவர் முடிவற்றவராகவும், சர்வவல்லமையுள்ளவராகவும், கசலத்தையும் அறிந்தவராகவும் இருக்கிறாரோ' என்றேன். ஆமென். நிச்சயமாக. அவரால் எப்படி தவறு செய்ய முடியும்? அவர், 'அவர்கள் தவறாய் இருந்தார்கள் என்று நான் உமக்கு நிரூபித்துக் காட்டுகிறேன். அது பரிசுத்த ஆவியல்ல' என்றார். நான், 'வேதத்தில் உள்ள பரிசுத்த ஆவியானவரின் நடபடி பரிசுத்த ஆவியாக இல்லையா?' என்று கேட்டேன். அவர், 'கவனியும்' என்றார். 43நான், 'சரி. நீர்-நீர் உம்மைத்தானே இங்கே வெளியே கொண்டு வந்து விட்டீர். இப்பொழுது உமது சொந்த கை கால்களே வெளியே இருப்பதை அப்படியே கண்டு விட்டீர்' என்று நினைத்தேன். இது அப்படியே ஒரு குழியினுள் அடைபட்டிருக்கிற ஒரு குழிமுயலைப் போன்று உள்ளது: ஒவ்வொரு இடமும் எங்கேயுள்ளது என்று நீங்கள் அறிந்து, ஒவ்வொரு துவாரத்தையும் நீங்கள் அடைத்து விடுவீர்களானால், அந்த முயல் இங்கே தான் வெளியே திரும்பி வந்தாக வேண்டும், அப்படியே சரியாக இங்கேயே காத்திருங்கள். அது அதற்கு மீண்டும் வந்தாக வேண்டும். அது ஒவ்வொரு துவாரத்திலும் தனது தலையை கொண்டு முட்டிப் பார்க்கும், ஆனால் அது ஒருபோதும் அதன் வழியாக வெளியே போகாது. அதை அப்படியே அதற்குள் அடைத்து வைத்திருந்து, சரியாக இங்கேயே காத்திருங்கள். அவர்களில் ஒருவரோடும் அந்தவிதமாகத்தான் உள்ளது. நிற்காமல் தொடர்ந்து வார்த்தையோடு சென்று கொண்டிருங்கள். வார்த்தையை உங்கள் முன்னால் வைத்துக் கொண்டு, தொடர்ந்து சென்று கொண்டிருங்கள். நீங்கள் எப்படியும் அங்கேயுள்ள ஒவ்வொரு துவாரத்தையும் அடைத்து விட்டீர்கள். புரிகிறதா? அப்படியே தொடர்ந்து சென்று கொண்டிருங்கள். முன்னோக்கி சென்று கொண்டிருங்கள். நான், 'அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் தவறு செய்தாரா?' என்று கேட்டேன். அவர், 'நல்லது, அந்த ஜனங்கள் தான் தவறு செய்தனர்' என்றார். நான், 'அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்' என்றேன். அவர், 'கவனியுங்கள், பிரசங்கியாரே. உபத்திரவம் வந்து, அவர்கள் மத்தியில் குழப்பம் உண்டான போது, அது பரிசுத்த ஆவியாக இருக்கவில்லை' என்றார். நான், 'இல்லை, ஐயா. ஆனால் அந்த முதலாவது அசைவில் பரிசுத்த ஆவியானவர் இருந்தார்' என்றேன். அவர், 'உபத்திரவம் வந்த போது, அந்த ஜனங்களுக்கு போக ஒரு வீடு கூட இருக்கவில்லை' என்றார். நான், 'அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று தான் சரியாக தேவன் விரும்பினார். ஆகையால் தான் அவர்கள் எல்லாவிடங்களுக்கும் சென்று வார்த்தையைப் பிரசங்கம் பண்ணினார்கள். அவர்களுக்கு ஒரு வீடு இருந்திருந்தால், அவர்கள் அதற்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். ஆனால் தேவனோ செய்தியைப் பரவச் செய்து கொண்டிருந்தார். (ஆமென்.) அவர்கள் பரலோகத்தில் ஒரு வீட்டைப் பெற்றனர்' என்றேன். பாருங்கள்? ஆனால் அதுதான் வித்தியாசம். அவர்கள் என்ன செய்தனர்? செய்ய வேண்டிய காரியம் அதுவே என்று அவர்கள் யூகிக்கின்றனர். செய்ய வேண்டிய காரியம் அதுவல்ல. நிச்சயமாக அதுவல்ல. 44இப்பொழுது. ஊழியக்காரர்கள் அதைப் பிரசங்கித்து, அதெல்லாம் சரிதான் என்று யூகிக்கின்றனர். அது சரியாக இருக்காது. அவர்கள் தங்கள் சபையோரை அனுமதிக்கின்றனர் - அவர்களுடைய ஸ்திரீகளை குட்டை ஆடைகளை உடுத்தவும், புகைபிடிக்கவும் அனுமதிக்கின்றனர்; அவர்களுடைய ஆண்கள் கொஞ்சம் நட்புரீதியான சீட்டு விருந்துகளையும், சட்டத்திற்குப் புறம்பான சூதாட்டத்தையும், சபையில் பங்கோ விளையாட்டு விளையாடுதலையும், மேய்ப்பருக்கு சம்பளம் கொடுக்க சூப் விருந்துகளையும், உலகப்பிரகாரமான மற்ற யாவற்றையும் நடத்த அவர்கள் அனுமதிக்கின்றனர். ஜனங்கள் சேர்ந்து கொண்டு, அதெல்லாம் சரிதான் என்று நினைக்கின்றனர். ஏன், நான் பிரஸ்பிடேரியன் சபைக்கு அருகில் வசிக்கிறேன். அன்றொரு நாள் நடு இரவு நேரத்தில், அங்கே கட்டிடத்தின் அடித்தளத்தில் அதிகமாக பூகி - வூகி (boogie-woogie) இசை நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது, அது... வரைக்குமாக அது நடந்து கொண்டிருந்தது. அது-அது ஒரு அவமானமாக இருந்தது. அல்லது முறுக்கி இசைக்கிற இந்த புதிய இசைக்கருவி (winder) என்ன இசைக்கருவி? அவர்கள் அதை என்னவென்று அழைக்கின்றனர்? அவர்கள் -அவர்கள் - அந்த ஸ்திரீகள் அதைச் செய்து கொண்டு, தங்கள் கால்களையும் மற்றும் காரியங்களையும் உடைத்து போடுகின்றனரே, அதுதான்? அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இசைக்கம்பியை ஒன்றுடன் ஒன்று திருகுதல். அவர்களுக்கு ஒரு திருகுதல் அவசியமாயிருக்கிறது. அவர்களுடைய அதை நேராக்குவதற்கு அவர்களுக்கு ஒரு -அவர்களுக்கு ஒரு சுவிசேஷ ஆதாரம் (plank) தான் அவசியமாயுள்ளது - அதுதான் அவசியமாயுள்ளது. அவர்களுக்கு அதுதான் அவசியமாயுள்ளது: நல்ல பழமையான சுவிசேஷம், பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்ட எழுப்புதல் தான் தேவையாயுள்ளது. சுவிசேஷ கம்பியைக் கொண்டு கழுத்தைச் சுற்றிலும் அவர்களுக்கு ஒரு திருகுதல் (twisting) அவசியம், அது சரிதான். ஆனால் அவர்கள், 'ஓ, அவர் ஒரு நல்ல தேவன்' என்று கூறுகின்றனர். அவர் ஒரு நல்ல தேவன் தான். ஆனால் அதன் பேரிலே நீங்கள் யூகிக்க வேண்டாம். அவர் நீதியின் தேவனாகவும் கூட இருக்கிறார். அவர் ஒரு நல்ல தேவன். சமீபத்தில் ஒரு சிறு டீன்ஏஜ் பையன் கூறினது போல. அவன், 'தேவன் நான் செய்கிறதை சற்றும் கவனிக்காத மிகவும் நல்ல தேவனாயிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும்' என்று கூறினான். முட்டாள்தனம். நீங்கள் செய்கிறதை அவர் கவனிக்கிறார். 45ஆமாம், நீங்கள், 'தேவன் ஒரு நல்ல தேவன்' என்று கூறலாம். தேவன் ஒரு நல்ல தேவன் தான், ஆனால் நாம் இன்று அதைக் குறித்து அதிகமாகக் கேள்விப்படுகிறோம். தேவன் கடுங்கோபத்தின் தேவனாகவும் இருக்கிறார். அவர் நியாயத்தீர்ப்பின் தேவன். அவர் அங்கு சென்று இஸ்ரவேலரை மரணத்தின் வாயிலிருந்து வெளியே கொண்டு வர போதுமான நல்லவராக அவர் இருந்தார்; அவர்கள் வனாந்தரத்தில் கலகம் செய்து, அவரைப் பின்பற்றாத காரணத்தினால், அவர்களை அழுகிப்போகும்படி விட்டுவிட்டார் (யூதா 1:5). அந்த ஸ்தாபனங்களை விட்டு பெந்தெகோஸ்தேயினராகிய உங்களை இழுத்துக் கொண்டுவருவதற்கு தேவன் நல்ல தேவனாகவே இருந்தார். ஆனால் நீங்களோ அதைப் புறக்கணித்து, வந்த வழியாகவே திரும்பிச் சென்று, உங்களுடைய தாயைப் போன்று நடந்து கொண்டீர்கள். ஆகையால் நீங்கள் அதில் அழுகிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். (இங்கே ஒரு ஒலிப்பதிவு செய்யும் கருவி இயங்கிக் கொண்டிருக்கிறது. இது உலகமெங்கும் போகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது நான் இங்கே அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கவில்லை). ஆனால் நீங்கள் சரியாக அதில் அழுகிப் போய் விட்டீர்கள். அதன்பிறகு, வந்து உங்களிடம் சத்தியத்தைக் கூறினால், நீங்கள் அதை விசுவாசிப்பதில்லை. இதோ அது சரியாக இங்கே வார்த்தையில் எழுதப்பட்டுள்ளது. ஆம், ஐயா. 46ஓ, ஆமாம், அவர் ஒரு நல்ல தேவன் தான் என்று அவர்கள் யூகிக்கின்றனர். ஆம், ஐயா. பாருங்கள், அவர் நியாயத்தீர்ப்பின் தேவனாகவும் கூட இருக்கிறார் என்பதை அவர்கள் - அவர்கள் - அவர்கள் நினைவில் கொள்வதில்லை. அங்கே தான் இஸ்ரவேல் தனது தவற்றைச் செய்தாள். அவர் மிகவும் நல்லவர் என்று அவர்கள் நினைத்தனர். அவர் அவர்களுக்காக அநேக காரியங்களைச் செய்திருந்தார். நிச்சயமாக, அவர் அவர்களை எகிப்தை விட்டு வெளியே கொண்டு வந்தார். நிச்சயமாக அவர் அதைச் செய்தார். அவர் அற்புதங்களை நடப்பித்தார். அவர் ஒரு கோட்டை வரைந்து, அக்கினிஸ்தம்பத்தை அவர்களுக்கும் சத்துருக்களுக்கும் இடையில் வைத்தார். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நிச்சயமாகவே அவர் ஒரு நல்ல தேவன் தான். நிச்சயமாக. அவர்கள் சவக்கடலை - செங்கடலைக் கடந்து செல்ல அனுமதித்தார், மேலும் அவர்கள் வனாந்தரத்தையும் மற்றவைகளையும் கடந்து போக அனுமதித்தார். அவர் ஒரு நல்ல தேவனே. எந்த எகிப்தியனாவது அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல துவங்கின போது, ஏன், அந்த மரண வேளையில் அவர்களைப் பாதுகாத்து, எகிப்தியர்களை கொன்று போட்டார் (யாத். 14:19,20,22,28). நிச்சயமாக. அவர் ஒரு நல்ல தேவன் தான். ஆனால் அவருடைய பொறுமை போய் விட்டது. அதன்பிறகு அவர் அந்த கடைசி வார்த்தையைப் பேசின போது, அதுதான் அதுவாக இருந்தது. மோசே, 'நீங்கள் தேவனுடைய கட்டளைகளை மீறுகிறது என்ன? தேவன் உங்களை விட்டுப் போய் விட்டதாக அவர் கூறியுள்ளாரே' என்றான். சகோதரனே, அதிக காலம் யூகித்துக் கொண்டிருக்க வேண்டாம். அது உண்மை. நீங்கள் அந்தக் கோட்டை நிச்சயமாகக் கடந்தாக வேண்டும். அங்கிருந்து திரும்பி வரவே முடியாது. அங்கே ஒரு கோடு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அங்கே முற்காலத்தில் இஸ்ரவேலில் இருந்த எல்லைக் கோட்டு விசுவாசிகளை ஞாபகம் கொள்ளுங்கள் - அவர்கள் வெறுமனே எல்லைக்கோட்டு விசுவாசிகள் தான். எபிரெயர் 6ம் அதிகாரம் இவ்வாறு கூறுகிறது, 'ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், பரமஈவை ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். அவர்களைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் கிரியைகளை நிந்தித்தவன்' என்று கூறுகிறது (எபிரெயர் 6:4,6) (எபிரெயர் 10:29). அது சரியே. தேவன் ஒரு எரிச்சலின் தேவனாயிருக்கிறார். அவர் நீதியின் தேவனாய் இருக்கிறார். 47நீங்கள் ஒரு தகப்பனும் தாயுமாய் இருக்கிறீர்கள், நீங்கள் உங்களுடைய பிள்ளைகளிடம், 'நீ அங்கே போனால், நான் உனக்கு சவுக்கடி கொடுப்பேன்' என்று கூறுகிறீர்கள். நீங்கள் அந்தப் பிள்ளையை நேசித்து, அவன் உங்கள் கட்டளைகளை மீறினால், நீங்கள் உங்கள் வார்த்தையைக் காத்துக் கொள்வீர்கள். அது உண்மை. ஆனால் நீங்கள் அவனைத் தொடர்ந்து போக அனுமதித்து, 'நல்லது, அதெல்லாம் சரிதான்' என்று கூறுவீர்களானால். அவன் அதை மீண்டும் செய்வான், பாருங்கள்? அதுதான் இங்கே சுற்றிலுமுள்ள இந்த எல்லா சிறு மெலின்டாக்களையும் (Melindas), ரிக்கிகளையும் மற்றவைகளையும் உருவாக்கி விடுகிறது. அதுதான் இளம்குற்றவாளிகளை உருவாக்கி விடுகிறது. அவர்களில் சிலர் டென்னஸி மற்றும் கென்டக்கியின் மலைப்பிரதேசங்களில் உள்ள ஜனங்களின் அறியாமையைக் குறித்து பேசுகிறார்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அங்கே வெளிப்புறத்திலுள்ள அந்த பழங்காலத்து தாய்மார்களாகிய அவர்களில் சிலர் இந்த நவீன காலத்து யேசபேல்களில் சிலரிடம் ஒரு வாலிப பிள்ளையை எப்படி வளர்ப்பது என்று இவர்களுக்கு கற்பித்துக் கொடுக்கலாம். அது சரியே. அவர்களுடைய வாலிப பிள்ளைகளில் ஒன்று - அவர்களுடைய பெண்ணோ, வாலிப பெண்ணோ இரவில், தங்களுடைய வஸ்திரங்கள் எல்லாம் உருக்குலைந்து போய், எங்கோ ஓரிடத்தில் வெளியே இரவு முழுவதும் ரிக்கியோடு இருந்து கொண்டு, ஒரு காரில் இருந்து அதிதீவிரமாய் காதலித்துக் கொண்டு வந்தால், 'அன்பே, ஒரு நல்ல நேரத்தை அனுபவித்தாயா?' என்றா கூறுவாள்? அவள் அந்த மரங்களில் ஒன்றில் இருந்து ஒரு இக்கரி கொப்பை (hickory limb) ஒடித்து எடுத்துக் கொள்வாள், அவள் இன்னொரு வருடம் வீட்டை விட்டு வெளியே போகவே மாட்டாள். நிச்சயமாக. அது அறியாமை என்று அவர்கள் கூறுகிறார்கள்... அதைக் காட்டிலும் அவர்கள் அதைக் குறித்து அதிகமாக அறிவார்கள்... ஓ, நான் அங்கேயே வாயை மூடி விடுவது நல்லது. சரி. தொடர்ந்து போகலாம். 48இப்பொழுது, இஸ்ரவேலர் யூகித்துக் கொண்டிருந்தனர், உ-ஊ. நாம் இன்றைக்கு எதை குஞ்சு பொரித்துக் கொண்டிருக்கிறோம் என்று புரிகிறதா? யூகித்தல். கூடு முழுவதும் பருந்து முட்டைகள் தான். அது மிகவும் சரியே. அங்கே கழுகுகளே இல்லை. உன்னத ஸ்தலங்களைக் குறித்தும், அங்கே எவ்வாறு பறந்து செல்வது என்பதைக் குறித்தும் எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. அவைகளின் சிறகுகள் மிகவும் தளர்ந்ததாக இருக்கிறது; அவைகள் ஆகாயத்தில் போகத் துவங்கும் போது, அவைகள் தங்களைத் தாங்களே நிர்வாணமாய் உரிந்து போட்டு விடுகின்றன. அது சரியே. அந்த உயரத்தில் சிறகுகள் உதிர்ந்து விடுகின்றன. அங்கே மேலே பறந்து செல்லும் போது, ஈடு கொடுத்து தாங்கும் ஆற்றலை பெற்றிருப்பது கழுகுகள் மாத்திரமே. அதன் சிறகுகள் வளர்ந்து, பின்னிப்பிணைந்து, உறுதியாய் உள்ளன. ஆமென்! அதனால் அவ்வளவு உயரத்துக்கு பறந்து செல்ல முடியும், பருந்தோ, அல்லது காகமோ, அல்லது கூரிய பார்வையுடைய பருந்தோ (chicken hawk) கழுகைப் பின்தொடர்ந்து செல்ல முயற்சித்தால், மரித்தே போய் விடும். தேவன் ஒரு கழுகாயிருப்பதாக அவர் கூறினார். 'நான் யேகோவா கழுகு, என்னுடைய பிள்ளைகள் எல்லாரும் கழுகுக் குஞ்சுகளாயிருக்கிறார்கள்.' அங்கே உன்னதத்தில் எவ்வாறு பறந்து செல்வது என்பது அவர்களுக்குத் தெரியும், அங்கே அவன் அப்படியே - அங்கே மேலே அவன் ஆகாய மார்க்கமாக பறந்து செல்கிறான். ஆமென். ஓ, நான் அவைகளைக் கவனிக்க விரும்புகிறேன். ஆம், ஐயா. ஆமாம், யூகித்தல்... 49அவன், 'ஓ, நல்லது, தேவன் அநேக தடவைகள் எங்களை மன்னித்திருக்கிறார், அவர் மீண்டும் எங்களை மன்னிப்பார்' என்று கூறினான். எனவே அவர்கள் மேலேறிச் சென்றனர். ஆனால் மோசேயோ, 'அவர் உங்களை விட்டுப் போய் விட்டார். நீங்கள் இதைச் செய்த போது, நீங்கள் அந்தக் கோட்டைக் கடந்து சென்று விட்டீர்கள்' என்றான். நாம் திரும்பிப் பார்த்து, நாம் அந்தக் கோட்டை தாண்டி விட்டோமா இல்லையா என்று பார்ப்போம். அவர் அந்தக் கோட்டை லூத்தரன்கள் மேல் எங்கே வரைந்தார்? அவர் அந்தக் கோட்டை மெதோடிஸ்டுகள் மேல் எங்கே வரைந்து வைத்தார்? அவர் பாப்டிஸ்டுகள் மேலும், காம்பலைட்டுகள் மேலும், நசரீன்கள் மேலும், யாத்திரீக பரிசுத்தர் மேலும், பட்டி ராபின்சனின் குழுவின் மேலும், அந்த எல்லாவற்றின் மேலும் அந்தக் கோட்டை எங்கே வரைந்து வைத்தார்? அவர் அந்தக் கோட்டை எங்கே வரைந்து வைத்தார்? அவர் அந்தக் கோட்டை பெந்தெகோஸ்தேயினர் மேலும் அதே இடத்தில் தான் வரைந்து வைத்தார். அங்கேயே அழுகிப் போய் விட்டது. தேவனிடம் இரக்கம் உண்டு! அதைக் கூறும் போது, அது கிட்டத்தட்ட என்னை கொன்று போடுகிறது. ஆனால் சத்தியத்தைக் கூறுவதற்கு இந்த வார்த்தையோடு கடமைப்பட்டுள்ளேன். ஆனால் அது சத்தியமாயுள்ளது. நீங்கள் சரியாக அங்கேயே அழுகிப் போய் விடுவீர்கள். அவள் மீண்டும் ஒருபோதும் எழும்பி வர மாட்டாள். அதுதான் கர்த்தருடைய வார்த்தையாகும். 50ஓ, நீங்கள் யூகித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு முறை சிம்சோனும் கூட யூகித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அதெல்லாம் சரிதான் என்று சிம்சோன் யூகித்தான். தேவன் ஒரு நல்ல தேவனாக இருந்தார். அவனால் பெண்களோடு கூட சுற்றித் திரிய முடிந்தது, அவன் செய்ய விரும்பின எதையும் அவனால் செய்ய முடிந்தது, அது சரியாகவே இருந்தது. தேவன் தம்முடைய இரகசியங்களை அவனுக்கு வெளிப்படுத்த முடிந்தது, அது சரியாகவே இருந்தது. அது என்னவாக இருந்தது என்பது புரிகிறதா? அது ஒரு ஸ்திரீயாக, சபையாக இருந்தது. வேதத்தில் ஸ்திரீ சபையை பிரதிநிதித்துவப்படுத்துகிறாள். தெலீலாள் அந்நாளின் பழங்கால யேசபேலாக இருந்தாள். அது சரியே. எனவே நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவெனில், அவன் தன்னைத்தானே அவளைச் சுற்றி மூடிக் கொண்டான், அவளும் அவனை விரலைச் சுற்றிலும் வேலி போட்டு அடைத்து வைத்திருந்தாள், அவள் சரியாக அப்படியே செய்தாள்... அவன் தன்னுடைய பலமெல்லாம் போய் விட்டதைக் கண்டு கொண்டான். அதுதான் சரியாக இன்று சபைக்கு சம்பவித்துள்ளது: இந்தக் கோட்பாடுகளையும், மனிதனால் உண்டாக்கப்பட்ட காரியங்களையும், அமைப்புகளையும், ஸ்தாபனங்களையும் சுற்றி தன்னைத்தானே வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறது. அவர்கள் சடங்காசாரங்களினால் தேவனுடைய வார்த்தையை விட்டு அகன்று தூரமாக சென்று கொண்டிருக்கிறார்கள். சபையானது மற்ற உலகத்தாரைப் போன்று காணப்படுகிறது, அது மற்ற உலகத்தாரைப் போன்று நடந்து கொள்கிறது. நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், பரிசுத்த ஆவி போய் விட்டதைக் கண்டுகொள்கிறீர்கள். சுவிசேஷத்தின் வல்லமை உங்களை விட்டு அகன்று போய் விட்டது. என்ன காரியம்? நான் உங்களைப் புண்படுத்தவில்லை என்று நம்புகிறேன், ஆனால் நான் உங்களைத் தீயிலிட்டு வாட்டுகிறேன் என்று நம்புகிறேன், ஆகவே நீங்கள்... இன்னும் சரியாகச் சென்னால், நான் எந்த நேரமும் சுட்டெரிப்பதைக் காட்டிலும் தீயிலிட்டு வாட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். எனவே-எனவே கவனியுங்கள்! வார்த்தையோடு தரித்திருங்கள். 51சிம்சோன் அதெல்லாம் சரிதான் என்று யூகித்தான். தேவன் அப்பொழுதும் அங்கேயிருந்தார். அவர்கள் இங்கே வந்த போது, சபையானது அவ்வாறு தான் எண்ணினது. 'நல்லது, தேவன் இன்னும் அங்கே இருக்கிறார். அவர் ஒரு நல்ல தேவன் தான். அவருக்கு கவலையில்லை.' இங்கேயிருக்கும் பழங்காலத்தவராகிய உங்களிடம் தான், அங்கே முற்காலத்தில் ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்பு, உங்களுடைய அம்மாவும் அப்பாவும் தேவனோடு சுயாதீனமாயிருந்து, தேவனை ஆராதிக்கவும், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றவும் அந்த ஸ்தாபனங்கள் மற்றும் காரியங்களை விட்டு வெளியே வந்த போது, அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்தனர், ஏன், நீங்கள் அவர்களிடம் பேசி, அவர்கள் திரும்பிச் சென்று, எகிப்தியர்கள், உலகத்தார் செய்த அதே காரியத்தையே செய்திருக்கிறார்கள் என்று கூறுவீர்களானால், அவர்கள் உங்களுடைய முகத்துக்கு முன்பாக நகைக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதைத்தான் செய்தனர். அவர்கள் அதையே செய்து விட்டனர். 'ஓ, அதெல்லாம் சரியாகவே இருக்கும் என்று நாம் யூகிக்கிறோம்.' நீங்கள் யூகிக்கக் கூடாது. வார்த்தையோடு தரித்திருங்கள். நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. நீங்கள் எதை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிருந்தது? உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திலும் கூட இருக்கும்படி உங்களுடைய மகத்தான சுவிசேஷ உபதேசத்தை விட்டுக்கொடுத்து விட்டீர்கள். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அப்படியே அவர்கள் செய்வது போன்றே நடந்து கொள்கிறீர்கள். சபைகள் என்ன செய்கின்றன, அவர்கள் செய்வது போன்றே அவைகளும் நடந்து கொள்கின்றன. அவர்களுடைய பள்ளிகள் என்ன செய்கின்றன, அதே காரியம் தான். நம்முடைய பரிசுத்த பள்ளிகளும் கூட மிக மோசமாக ஆகிக் கொண்டிருக்கின்றன, மேலும் அவ்விதமான காரியங்களைச் செய்கின்றன - தாறுமாறாக்குதலும் மற்ற யாவுமே அவர்கள் மத்தியில் இருக்கின்றன. நமக்கு என்ன தேவையென்றால், அங்கே பாவத்தைப் பார்த்து உரத்த கூச்சலிடும் தேவனுடைய வல்லமை தான். சரியாக இதோ அது ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது, 'இங்கே தான் உங்கள் காரியம் இருக்கிறது' என்று கூறப்படுகிறது. அதுதான் சபையில் அனுப்பப்பட்டுள்ள வரங்களாக இருக்கிறது. 52ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தும் அளவுக்கு வேதசாஸ்திரத்தையும், விஞ்ஞானத்தையும், மற்றும் காரியங்களையும் அதிகமாக போதிக்கிறார்கள். அந்த காரணத்தினால் தான் நம்முடைய... காலத்திற்கு முன்பே தாய்மை அடையும் சிறு பெண்களும் (“pre-mothered” girls) ம் மற்ற காரியங்களும் நடக்கின்றன. ஆகையால் தான் அதிகமான பாவம் நம் மத்தியில் உள்ளன. ஆகையால் தான் உங்களால் ஜனங்களிடம் கூற முடிவதில்லை. அவர்கள் உலக காரியங்களினாலும், உலகக் கவலைகளினாலும், மற்றும்... காரியங்களினாலும் மிகவும் திக்குமுக்காடுகிறார்கள். 'ஆகையால் தான் நாங்கள் சபையோடு நல்ல விதமாக அசைக்கப்படாமல் நிற்கிறோம், ஆகையால் தான் நாங்கள் பிரஸ்பிடேரியன் சபையின் மூப்பர்களோடு நல்ல விதமாக தாங்கிக் கொண்டு நிற்கிறோம், எனவே தான் இங்கே நன்றாக அசைக்கப்படாமல் நிலை நிற்கிறோம்.' அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது? தேவனோடு நல்லவிதமாக அசைக்கப்படாமல் நிற்போம். மற்றவர்கள் போகட்டும். அவர்கள் பின்பற்ற விரும்பினால், அவர்கள் பின்பற்றட்டும். பின்பற்ற அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், அவர்கள் இருக்கிற இடத்திலேயே தரித்திருக்கட்டும். நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறீர்கள். தேவன் யோசுவாவிடம் கூறினது போன்று (புதிதாக வெளியே புறப்பட்டு வருகிறவர்களைக் குறித்துள்ள ஒரு முன்னடையாளம்), அவர், 'நீங்கள் இந்த மலைநாட்டில் நாற்பது வருடங்களாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறீர்கள்' என்றார். அவர்கள் அந்த நாற்பது வருடங்களாக அங்கே வெளியில் என்ன செய்தனர்? தேவன் அவர்களை சபித்தாரா? இல்லை, அவர் அவர்களை ஆசீர்வதித்தார். ஓ, அவர்கள் மனைவிகளை விவாகம் செய்து, நல்ல பயிர்களை வளர்த்து, குழந்தைகளை வளர்த்தனர், மேலும்... ஓ, அவர்கள் - அவர்கள் ஒரு அற்புதமான நேரத்தைக் கொண்டிருந்தனர். தேவன் அவர்களோடு இருந்தார். ஆனால் அது அப்பொழுதும் வாக்குத்தத்தமாக இருக்கவில்லை. 53கவனியுங்கள், நான் இப்பொழுது ஒரு காரியத்தைக் கூறப் போகிறேன். அது நிச்சயமாக உங்களை தீயில் போட்டு வாட்டும், ஆனால் கவனியுங்கள். பெந்தெகோஸ்தேயினரும் சரியாக அதைத் தான் செய்திருக்கிறார்கள். அவள் உலகத்தைப் போன்று ஸ்தாபித்துக் கொண்டாள், ஆனால் அவளோ ஒருபோதும் முழுமையான வாக்குத்தத்தத்திற்கு வந்து சேரவில்லை. அவள் எகிப்தை விட்டு வெளியே வந்தாள். அவள்... தேவன் அவளைக் குறித்துப் பொறுப்பெடுத்துக் கொண்டு, அற்புதங்களையும் அடையாளங்களையும் அதிசயங்களையும் அவளுக்குக் காண்பித்தார்; ஆனாலும் அவள் ஒருபோதுமே முழுமையாகவில்லை. அது சத்தியம் என்று உங்களுக்குத் தெரியும். பழங்கால யுத்தவீரர்கள் மரித்துப் போய் விட்டனர். அது மிகவும் சரியே. இப்பொழுது நாமும் அங்கே தான் மீண்டும் வந்திருக்கிறோம். நாம் எவ்வளவு காலமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்? ஏறக்குறைய நாற்பது வருடங்களாக. 'தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் ஒரு ஒருத்துவக்காரன். அல்லேலூயா!' 'தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் அசெம்பிளி சபையைச் சேர்ந்தவன்.' 'தேவனுக்கு மகிமை, நான் சர்ச் ஆப் காட் சபையைச் சேர்ந்தவன்.' 'நாங்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.' 'நாங்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள்.' நீங்கள் ஒன்றுமே இல்லை. நீங்கள் அவ்வாறு நினைக்கிற காலம் வரை, நீங்கள் ஒன்றுமேயில்லை. ஒரு மனிதன் தன்னைத்தானே ஏதோவோன்றாக நினைக்கும் போது, அவன் ஒன்றுமேயில்லை என்று வேதம் கூறுகிறது (1 கொரி. 8:2). அவன்-அவன் இருக்கவேண்டிய பிரகாரமாக இருக்கவில்லை. அது முற்றிலும் சரியே. நீங்கள் ஒன்றுமேயில்லை என்று எண்ணிக் கொள்ளுங்கள். தாழ்மையோடு வாருங்கள், அப்போதுதான் தேவனால்... முடியும். உங்களை நீங்களே வெறுமையாக்கிக் கொள்ளுங்கள். நீங்களாகவே உங்களை நிரப்பிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெறுமையாகத்தான் இருக்கிறீர்கள். தங்களை வெறுமையாக்குவது தான், சபை மற்றும் தனிப்பட்ட நபருக்கான மிகப்பெரிய வேலையாகும். அது கடினமாக உள்ளது. ஆனால் அது நல்லதே. 54அம்மா... செய்கிற நேரத்தை அது அப்படியே எனக்கு நினைவூட்டுகிறது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது, மிகவும் ஏழைகளாக வளர்க்கப்பட்டோம். ஆகையால் எங்களுக்குப் புசிக்க அதிகமாக இல்லாதிருந்தது. அம்மா வழக்கமாக... பாப் வழக்கமாக அங்கேயிருந்த பேக்கரியிலிருந்து கொஞ்சம் இறைச்சி தோல்களை வாங்கிக் கொண்டு வருவான், அங்கே அவர்கள் அந்த பன்றி இறைச்சியையும் மற்றும் காரியங்களையும் வேக வைத்து சுடுவார்கள். அவர்கள்... ஒரு வயதான ஜெர்மானிய பெண்மணியாகிய திருமதி. குட்மன் அவர்கள், அவள்... அவர்கள் வழக்கமாக பன்றி இறைச்சியை வேக வைத்து சுடுவதுண்டு. அவர்கள் அந்தப் பன்றிகளிலிருந்து இந்தத் தோல்களை வெட்டி எடுப்பார்கள், அப்பா அங்கு சென்று அவைகளை வாங்கிக்கொண்டு வருவார். அம்மா அவைகளை ரொட்டி சுடும் வாணலியில் போடுவார்கள். ஓ, அவர்கள் மேலே என்னுடைய தேசத்தில், ரொட்டி சுடும் வாணலியை நெடுங்காலத்திற்கு முன்பே மறந்து விட்டார்கள். நிச்சயமாக தெற்கத்திய தேசத்தை சேர்ந்தவர்களாகிய நீங்கள் அதை மறக்கவில்லை. அவர்கள் அந்த இறைச்சி தோல்களை அங்கே உள்ளே போட்டு, திரும்ப அடுப்பில் வைத்து, அவைகளை அந்தவிதமாக வறட்டி எடுப்பார்கள், அது உங்களுக்குத் தெரியும்; சோள ரொட்டியில் தடவிக் கொள்ளும்படியாக அந்தக் கொழுப்பை அதை விட்டு வெளியே எடுத்து விடுவார்கள். நாங்கள் காலை உணவுக்காக சோள கேக்குகளை (corn cakes) செய்தோம். எங்களிடம் சோள தேன்பாகும், சோள கேக்குகளும் இருந்தன. நாங்கள் அவைகளைக் கொண்டு தான் ஜீவித்தோம். உணவு புசிக்கும் வேளையில், நாங்கள் ஒருவகை மரத்தின் சமைக்கப்பட்ட இலைகளைக் (poke-greens) கொண்டிருந்தோம், அது இன்னும் அங்கே மேலே இருக்குமானால், கறுப்பு கலந்த பயிறு, அல்லது அதைப் போன்ற ஏதோவொன்று. நாங்கள் அவ்வளவு ஏழைகளாக புசித்துக் கொண்டிருந்தோம், மற்றும் காரியங்களை செய்தோம். 55அம்மா... ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும்... பள்ளியில்... அவர்கள் எங்கள் எல்லாரையும் குளிப்பாட்டுவார்கள், எல்லாரையும் ஒரே தொட்டியில் வைத்து, அதே தண்ணீரில் குளிப்பாட்டுவார்கள். வெறுமனே கொஞ்சம் கூடுதலாக தண்ணீரையே சேர்த்துக் கொள்வார்கள், அது உங்களுக்குத் தெரியும். அதிலிருந்து அப்படியே குறைந்து கொண்டே வரும்... முதலாவது சிறியவனைக் குளிப்பாட்டுவார்கள், கடைசி பையன் குளிக்கும் போது, அவைகள் முழுவதும் அழுக்காயிருக்கும், ஆனால் நாங்கள் அதைத்தான் செய்தோம். நாங்கள் அதைச் செய்தோம். சுத்தம் என்பது அதிகமாக நீங்கள் வெளிப்புறத்தை கழுவுவது அல்ல; ஆனால் உட்புறத்தைக் குறித்து என்ன? வெள்ளை அடிக்கப்பட்ட சுவர்களா? கல்லறைகளின் வெளிப்புறத்தை பளபளப்பாக்குகிறீர்கள், ஆனால் உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளாக இருக்கின்றன (மத்தேயு 23:27). உங்களுடைய கரங்களை சுத்தமாக்கும் அருமையான சோப்பு இருப்பதாக, இன்று உங்களுக்கு மிக அருகில் இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மற்றும் காரியங்கள் எல்லாமும் கூறுகின்றன. அதெல்லாம் ஒரு பொய்யான காரியம் தான். 56நான் அன்றொரு நாள் வீட்டிற்கு வந்தேன். அப்போது தொலைக்காட்சியில் ஏதோவொன்றை - அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி அல்லது வேறு ஏதோவொன்றைக் கண்டேன், அப்போது நான் மோட்டார் வாகன சர்வீஸ் ஸ்டேசனில் நின்று கொண்டிருந்தேன். இந்த மனிதன், 'ஓ, நீங்கள் இனிமேல் பாத்திரங்களை கழுவக்கூட வேண்டியதில்லை. வெறுமனே அதை அங்கே வைத்து விடுங்கள். அது யாவற்றையும் சரியாகக் சுத்தம் செய்து விடும். அதை அப்படியே அதில் வைத்து விடுங்கள்' என்றான். நான், 'மேடா, நான் உனக்காக பாத்திரங்களைக் கழுவுவேன்' என்றேன். நான் விரும்பினேன்... நான் சென்று ஒரு பாட்டில் அந்த காரியத்தை எனக்கு வாங்கி விட்டு, 'நான் பாத்திரங்களைக் கழுவி விடுகிறேன்' என்றேன். நான் அதை அங்கே உள்ளே கொட்டினேன், ஏறக்குறைய இதைப் போன்று நுரை பொங்கியது. நான் பாத்திரங்களை அதில் வைத்து, அரை மணி நேரம் அவைகளை அங்கேயே வைத்து விட்டு, வெளியே எடுத்தேன்... முட்டைகள் அப்பொழுதும் அதன் மேலேயே இருந்தன. முட்டாள்தனம்! அவர்கள் இவை எல்லாவற்றையும் தான் பெற்றிருக்கிறார்கள்... நீங்கள் இந்த பெரிய விளம்பரங்கள் எல்லாவற்றையும் கேட்கும் போது, ஏதாவது அதிகம் விளம்பரம் பண்ணப்பட்டால், அங்கே அதில் எதுவுமேயில்லை. ஏதாவது நல்ல தயாரிப்பு இருக்குமானால், அது தானாகவே விற்கப்பட்டு விடும். பழங்கால மார்க்கமும் அந்தவிதமாகத்தான் இருக்கிறது. நீங்கள் வெளியே மகத்தான பெரிய காரியங்களையும், பெரிய ஸ்தாபனங்களையும் கொண்டிருக்க வேண்டியதில்லை. அது தனக்குள் தேவனுடைய வல்லமையைப் பெற்றிருக்குமானால், அது தானாகவே விற்பனையாகும். உங்களை அகற்றி வெளியேற்றுகிற அநேக பாவங்களை நீங்கள் பெற்றிருந்து, நீங்கள், 'இதை சேர்ந்து கொள்ளுங்கள்,' என்றும், 'நாங்கள் இந்த பரிசுத்தமாகவும், அந்த பரிசுத்தமாகவும் இருக்கிறோம்' என்றும் கூவி அழைப்பீர்களானால், அதில் பரிசுத்தம் எதுவுமே கிடையாது. அது உண்மை. பாவத்தைப் போக்கக் கூடியவர் தேவன் மாத்திரமே: இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தான் அதைச் செய்யும். நீங்கள் அவருடைய கழுவும் பாத்திரத்தில் (wash-pan) விழும் போது, அவர் அதைச் செய்கிறார். அது சரியே. அதைச் செய்யக் கூடியவர் அவர் மாத்திரமே. 57ஆயினும், எல்லாமே சரியாக இருந்ததாக சிம்சோன் யூகித்தான். (நியாயாதிபதிகள் 16:20). தேவன் அப்பொழுது தான் அவனுக்காக அநேக காரியங்களைச் செய்திருந்தார். அவ்வாறு தான் நாமும் நினைத்தோம்: தேவன் அநேக காரியங்களைச் செய்திருந்தார். இஸ்ரவேலரும் அதே காரியத்தையே சிந்தித்தனர். 'நல்லது, தேவன் அதை முன்னரே செய்திருக்கிறார். நாங்கள் செய்வோமானால் - நாங்கள் இதைச் செய்கிறோம். எங்களுக்குக் கவலையில்லை. தேவன் எங்களோடு இருக்கிறார்' என்று அவர்கள் நினைத்தனர். அவர்கள் சரியாக இருந்ததாக அவர்கள் யூகித்தனர். ஆனால் யுத்தம் வேறு விதமாய் போனதை அவர்கள் கண்டு கொண்டனர். இப்பொழுது, நாங்கள் அத்தேசத்தைச் சுதந்தரிக்க மேலே போகும் போது, நாங்கள் அதே நிலையில் தான் இருக்கிறோம் என்பதை நாம் காண்கிறோம். அது சரியே. ஆகானும் அதே காரியத்தையே எண்ணினான் என்பதை நீங்கள் அறிவீர்கள். சபிக்கப்பட்ட அந்தப் பட்டணத்திலிருந்து (யோசுவா 6:17) எதையும் எடுக்கக் கூடாது என்று அவன் தேவனிடமிருந்து கட்டளை பெற்றிருந்தான். (எனக்கு இன்னும் ஏறக்குறைய வெறும் 12 நிமிடங்களே உள்ளன. நான் அந்த தங்கும் உணவு விடுதிக்கு (motel) போயாக வேண்டும். நான் இந்த ஒன்றை சிறிது அழுத்தமாக எடுத்துக் கொண்டு வர விரும்புகிறேன், பாருங்கள்?) இங்கே கவனியுங்கள். நாமும் சரியாக அதைத்தான் செய்தோம், பாருங்கள்? ஒரு அருமையான பாபிலோனிய சால்வையையும், ஒரு (பொன்)பாளத்தையும் ஆகான் எடுத்துக் கொண்டான். (யோசுவா 7:21). அவன் நினைத்தான்... அந்தப் பட்டணம் சபிக்கப்பட்டதாயிருந்தது, அதிலுள்ள யாவுமே சபிக்கப்பட்டது. ஸ்தாபனங்கள் சபிக்கப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அது பயங்கரமாக தொனிக்கலாம். ஆனால் அது தான் சத்தியம். 58சற்று முன்பு, நான் என்னுடைய அம்மாவைக் குறித்து கூறினேன், அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் எங்களுக்கு... செய்து கொடுப்பார்கள். ஏனென்றால் நாங்கள் அந்த ஏழ்மையான ஆகாரத்தை தான் புசித்துக் கொண்டிருந்தோம், அவர்கள் எங்களுக்கு அதிக அளவு ஆமணக்கு எண்ணையைக் குடிக்கக் செய்வார்கள். ஒவ்வொரு... அந்த ஆமணக்கு எண்ணையின் நாற்றத்தை என்னால் பொறுக்கவே முடியாது. உங்களால் அதை இந்த அறைக்குள் கொண்டு வர முடியுமானால், நான் வாந்தி பண்ணி விடுவேன். என்னால் அதை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாது, அதில் நிறைய - நான் அதைக் குடிக்கும் போது, என்னுடைய மூக்கைப் பிடித்துக் கொள்வேன். நான் அருகில் சென்று, 'அம்மா, என்னால் அந்தக் காரியத்தை அப்படியே குடிக்கவே முடியவில்லை. அது அப்படியே என்னை வாந்தியெடுக்கச் செய்து விடுகிறது' என்றேன். அவர்கள், 'அது உனக்கு குமட்டலை உண்டாக்கி, சரியாக நல்ல விதமாகவும் சுகவீனமாகவும் ஆக்கவில்லை என்றால், அது உனக்கு எந்த நன்மையும் செய்யாது' என்றார்கள். வார்த்தையைப் பிரசங்கிப்பதும் அந்தவிதமாகத்தான் இருக்கிறது. அது உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தி, உங்களைக் கலக்கி, நீங்கள் அறிந்து கொள்ளாவிட்டால்... அந்தப் பழமையான கோட்பாடுகளை விட்டு வெளியே வந்து, வார்த்தைக்கு உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். அவைகள் சரியா என்று ஆராய்ந்து கண்டு கொள்ளுங்கள். சரி. அது (கோட்பாடுகள்) உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது. இதுவோ சுவையானவைகளை விரும்பி புசிக்கிற உங்களுடைய ஆவிக்குரிய வாஞ்சையை தூண்டி விடும். ஆம், ஐயா. அது உங்களை சரியாக துவங்கச் செய்கிறது. அதைக் கூறுவது கரடுமுரடாகவும், கடினமாகவும் இருக்கும். ஆனால் நான் கொண்டிருக்கிற ஒரே வழி அதுதான். நான் தானே நாகரீகமற்றவனாக இருக்கிறேன், எனக்கு எந்த படிப்பும் கிடையாது. நான் அப்படியே... அதைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது... எல்லாமே... யோவானைப் போன்று அதைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அந்த வனாந்தரத்தில் அவனுக்குத் தெரிந்த ஒரே காரியம் என்னவென்றால், பாம்புகளும், கோடாரிகளும், மற்றும் காரியங்களும் தான். எனக்குத் தெரிந்த ஒரே காரியம் என்னவெனில், வெறுமனே எனக்குத் தெரிந்தவை மட்டும் தான். எனக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவு தான். எனவே, நான் - நான் அதைக் காண்கிறவிதமாகவும், அது என்னிடம் வருகிற விதமாகவும் அப்படியே அதைக் கூறியாக வேண்டியுள்ளது. அதை இன்னும் அதிக தூய்மையாகவும், அதைக் காட்டிலும் அருமையாகவும் கூற முடியும். ஆனால் நான் எதைக் குறித்துக் கூறிக் கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஒரே காரியம் தான். புரிகிறதா? நான் என்ன கூற விரும்புகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, அதுதான் காரியம். நீங்கள் வார்த்தைக்குத் திரும்பி வந்தாக வேண்டும்; நீங்கள் எப்படியும் இந்த எல்லா பழைய காரியங்களையும் விட்டு விலக வேண்டும். சரி. 59இப்பொழுது, அதெல்லாம் சரிதான் என்று ஆகான் நினைத்தான். 'நான் இந்த அருமையான சிறிய (பொன்) பாளத்தை எடுத்துக் கொள்வேன், இது ஒரு அருமையான சிறு வஸ்திரமாக இருக்கும். இங்கே என்னிடம் இந்த அருமையான சிறு காரியம் இருக்கும், நான் ஆயராகவும் மற்றவையாகவும் இருப்பேன். நான் - நான்... அதெல்லாம் சரிதான்.' ஆனால் அது சபிக்கப்பட்டதாக இருந்தது. அந்த விழுந்து போன இடத்திலிருந்த யாவுமே சபிக்கப்பட்டதாய் இருந்தது. மேலும் அதுதான் இன்றும் உள்ளது. நாம் எந்த ஆகானையும் விரும்பவில்லை; நாம் எந்த... யையும் விரும்பவில்லை. அந்தக் காரியத்தை அழித்துப் போடும் வரையில், அவர்களால் ஒருபோதும் தொடர்ந்து போய், ஒரு யுத்தத்திலும் ஜெயமெடுக்க முடியவில்லை. அது சரியே. ஆம், ஐயா. 60அதெல்லாம் சரியாக இருக்கும் என்று அந்த எகிப்தியர்கள் யூகித்தனர். இஸ்ரவேலர்கள் சவக்கடலை (Dead Sea) உருவக் கடந்து சென்றனர். ஏன் அவர்களால் முடியவில்லை? அவர்கள் விருத்தசேதனம் இல்லாதவர்கள். உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அது சரியாக இருந்ததாக அவர்கள் யூகித்தனர். ஆனால் அவர்கள் அமிழ்ந்து போனதை அவர்கள் கண்டு கொண்டனர்.... உங்களால் இந்த... வழியாகப் போகவே முடியாது. உலகத்தால் உண்டாக்கப்பட்ட உபதேசங்களைக் கொண்டு வருவதன் மூலமாக உங்களால் தேவனோடுள்ள ஐக்கியத்திற்குள் வரவே முடியாது. நீங்கள் மூழ்கிப் போய், அவைகளோடு அழிந்து போவீர்கள். நீங்கள் தேவனுடைய வழியில் வந்தாக வேண்டும், அல்லது எந்த வழியுமே இல்லை. நீங்கள் வார்த்தையோடு வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும், அல்லது நீங்கள் வெளியே தான் இருக்கிறீர்கள். நீங்கள் அங்கேயே மரித்துப் போவீர்கள். இப்படியிருக்க... ஆனால் எகிப்தியர்கள், 'நல்லது, அவர்கள் அதன் வழியாகப் போனார்களே. நானும் அப்படியே... அவர்களைக் காட்டிலும் நாங்கள் சிறந்த மனிதர்கள். நாங்கள் ஆரோக்கியமுள்ளவர்களாகவும், பலசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருக்கிறோம். நல்லது, அந்தப் பேர்வழிகளால் தங்கள் பெயரைக் கூட எழுத முடியவில்லை. நாங்கள் தான் கைதேர்ந்தவர்கள்' என்று நினைத்தனர். ஆனால் அந்த திறமைசாலிகள் அதிக தூரம் போகவில்லை. தேவன் அந்த விதமாக ஜனங்களிடம் இருக்கிற திறமையைக் கணக்கிடுவதில்லை. அது உண்மை. 61நோவாவின் நாட்களில், அவர்கள், 'இப்பொழுது, அது வருமானால்... ஏன், இப்பொழுது, ஒரு பெரிய மழை வருமானால். அங்கே ஒருபோதுமே மழையே இருந்ததில்லையே, ஆனால் மழை வருமானால், ஏன், எங்களிடம் கப்பல்களும் படகுகளும் உள்ளனவே' என்று நினைத்தனர். நீங்கள், 'அவர்களிடம் அவைகள் கிடையாது' என்று கூறலாம். அவைகள் அவர்களிடம் இருந்தன. இயேசு, 'நோவாவின் நாட்களில் நடந்தது போல...' என்றார். அதே விதமாக... அவர்கள் இப்பொழுது பட்டணங்களையும் மற்றும் காரியங்களையும் தோண்டி கண்டுபிடிக்கிறார்கள். அவைகள் அமிழ்ந்து போயிருந்தன, சரியாக இங்கே மெக்சிகோவில், ஒரு சில வருடங்களுக்கு முன்பு, எல்லா நவீன தண்ணீர் விநியோகிக்கும் நிறுவனங்களோடு (ஒத்த) காரியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன - எல்லா காரியங்களுமே. நிச்சயமாக. சூரியனுக்குக் கீழே புதிதான எதுவும் கிடையாது. 'நாங்கள் அப்படியே எங்களுக்குச் சொந்தமான கப்பல்களில் ஏறிச் சென்று விடுவோம்.' தாங்கள் சரியாக இருப்பதாக அவர்கள் யூகித்தனர். ஆனால் மிதக்கப்போகிற ஒரு கப்பல் தேவனிடம் இருந்தது, மற்றவர்களோ மூழ்கடிக்கப்படப் போவதாக இருந்தனர். ஆனால் அவர்களுடைய கப்பல் எந்தவிதத்திலும் தொடர்ந்து மிதக்கும் என்று அவர்கள் யூகித்தனர், இந்த காரியமானது - அது வேதபிரகாரமாகச் செய்யப்பட்டதா அல்லது இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல என்று யூகித்தனர். (சகோதரன் பிரன்ஹாம் ஒரு சத்தம் எழுப்புகிறார் -ஆசிரியர்.) என்னால் ஒரு காரியத்தை இங்கே கூற முடியும். கவனியுங்கள். இன்றும் அந்தவிதமாகத்தான் உள்ளது. அந்த காரியம் மிதக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்; அது வேதப்பிரகாரமாக இருந்தாலும், இல்லாமற்போனாலும் அதெல்லாம் சரியாகவே இருக்கும் என்று நினைக்கிறீர்கள். அது கண்டிப்பாக வேதப்பிரகாமாக இருந்தாக வேண்டும். 62சீத்திம் மரத்தினால் (shittim wood) ஒரு பேழையைக் கட்டும்படி தேவன் நோவாவிடம் கூறினார், அந்த மரமானது பிசின் மரத்தைக் காட்டிலும் லேசானதாக இருக்கிறது. அங்கே அதில் எதுவுமே இல்லை, வெறுமனே ஒரு மிகப்பெரிய வெறுமையான உறிஞ்சம் இயல்புள்ள பஞ்சு போன்ற போருள் தான் அதில் இருக்கிறது. ஏன், என்னால் இங்கிருந்து வெளியே அங்கு வரை அதனுடைய ஒரு அடிக்கட்டையை (sill) பொதிந்து கட்டிக் கொண்டு போக முடியும், அங்கே பின்புற சுவரின் கடைசி பகுதிக்கு, அது ஆறடி பருமன் இருக்கிறது. நான் அதை என்னுடைய தோள்களின் மேல் வைத்து, அதனோடு நடந்து போக முடியும். ஏன், அது வெறுமனே ஒரு பஞ்சு போன்ற பொருள் தானேயொழிய வேறொன்றுமில்லை. அங்கே அதற்குள் எதுவுமே கிடையாது - அதுதான் சீத்திம் மரம். அதற்குப் பிறகு அவன் என்ன செய்தான்? அது உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினது. நீங்கள் உங்களை விட்டு எல்லாவற்றையும் வெளியேற்றியாக வேண்டும் - உங்களுடைய எல்லா கோட்பாடுகளையும், உபதேசங்களையும் தூர எறிந்து விட வேண்டும். அதன்பிறகு அவர் என்ன செய்தார்? அவர், 'அதை உள்ளும் புறம்புமாக கீல் பூசு (ஆதி. 6:14)' என்றார். அதற்கு எப்படி கீல் பூசப்பட்டது? அவர்கள் ஒரு மரத்தை வெட்டி, அதை அடித்தார்கள். அதிலிருந்து ஜீவனை, அதிலிருந்து பிசினை அடித்தெடுத்தார்கள். அதன்பிறகு அந்த சூடான பிசினை எடுத்து, அதை அங்கே உள்ளே ஊற்றினார்கள், வெறுமையாக இருந்த அந்த இடங்கள் எல்லாம் ஈரத்தை உறிஞ்சின. அதன்பிறகு அது அங்கிருக்கிற எந்த உருக்கு இரும்பைக் காட்டிலும் அதிக கடினமாக ஆகிவிடுகிறது. உங்களால் அதை பின்னுக்கு இழுக்கவே (அசைக்கவே) முடியாது. ஆகையால் தான் அது நியாயத்தீர்ப்புகளில் அசையாமல் தாங்கி நின்றது. 63அடிக்கப்பட வேண்டிய ஒருவர் அங்கேயிருந்தார்: அவர் தான் நீதிபரராகிய கிறிஸ்து. நாம் நம்மையே வெறுமையாக்கி விட்டு, பரிசுத்த ஆவியானவரை உள்ளே வர அனுமதிப்போம், தேவனுடைய வார்த்தையை உள்ளே வர அனுமதிப்போம். அது உங்களை நிலைநிறுத்துகிறது. நியாயத்தீர்ப்புகள்... 'அந்த இரத்தத்தை நான் காணும்போது, உங்களைக் கடந்து போவேன். (யாத்திராகமம் 12:13)' அவ்வாறு செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஓ, ஆமாம். ஆனால் அது அப்படியே அதே காரியம் தான் என்று அவர்கள் நினைத்தார்கள். உங்களுக்குப் புரிகிறதா? அதெல்லாம் சரியாக இருந்தது. அதெல்லாமே சரியாக இருக்கும் என்று அவர்கள் யூகித்தனர். இன்றும் அதேவிதமாகத்தான் இருக்கிறது. அவர்கள், 'நமது ஸ்தாபனம்... அதெல்லாம் சரிதான் என்று நான் யூகிக்கிறேன்' என்று கூறுகிறார்கள். 'ஓ, நீங்கள் என்னிடம் கூற வேண்டாம். நான்... அற்புதங்களின் நாட்கள் - இதைப் போன்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. இப்பொழுது, அது சரியாகத்தான் இருக்கும். நாங்கள் ஒரு சபை அல்லவா?' தொடர்ந்து அதை செய்யுங்கள். சரியாக நியாயத்தீர்ப்பிற்குள் விழுந்து போவீர்கள். அது சரிதான். அது ஒரு குழப்பத்திற்குக் காரணமாகும் அளவுக்கு அநேக வித்தியாசமான ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அதெல்லாம் சரிதான் என்று வெறுமனே யூகித்துக் கொண்டிருக்கும் ஜனங்களே, தொடர்ந்து செல்லுங்கள். எது சரியென்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்படியானால், எது சரி? அவைகளை வார்த்தையால் பரிசோதித்துப் பாருங்கள். அது சரியா அல்லது தவறா என்று கூறுவது அது ஒன்று தான், நாம் பார்க்கலாம். உங்களுக்குத் தெரியும், உபாகமம் 22:18ல், 'உங்களுக்குள்ளே ஒருவன் ஆவிக்குரியவனாகவோ, அல்லது தீர்க்கதரிசியாகவோ இருந்தால், கர்த்தராகிய நான் அவனோடே பேசுவேன். அப்போது அவன் வேதவாக்கியத்தை உடையவனாய் இருந்தால், அவன் கூறுவது அப்படியே சம்பவிக்கும். அது சரியாகவே இருக்கும், (எண்ணாகமம் 12:6)' என்றார். புரிகிறதா? மாற்கு 16, 'விசுவாசிக்கிறவர்களை இந்த அûடாயளங்கள் பின்தொடரும்' என்று கூறுகிறது. யோவான் 14:12ல், இயேசு, 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்' என்றார். அங்கே தான் நம்முடைய காரியம் இருக்கிறது. இப்பொழுது, நாம் சரியாக இருக்கிறோம். 64யோவான் அறிமுகப்படுத்த வந்த போது, எது சரியான வழியாக இருந்தது... பரிசேயர்கள் தங்களுடைய வழியைக் கொண்டிருந்தனர்; சதுசேயர்களும் தங்களுடைய வழியைக் கொண்டிருந்தனர்; ஆயக்காரர்களும் தங்கள் வழியைக் கொண்டிருந்தனர்; வெவ்வேறானவர்கள் தங்களுடைய வழியைக் கொண்டிருந்தனர்: தங்கள் ஸ்தாபனங்களையும், தங்கள் அமைப்புகளையும் கொண்டிருந்தனர். யோவான் அவர்களுடைய எந்தப் பள்ளிகளுக்கும் போகவேயில்லை. அவன் வெளியில் வனாந்தரத்திற்குச் சென்று காத்திருந்தான். அவன் வார்த்தையை ஆய்ந்து படித்தான். நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவென்றால், தேவன் எப்போதுமே செய்தது போன்று (கடந்த இரவைக் குறித்து நாம் பேசினது போன்று) மேசியாவை ஒரு அடையாளம் பின்தொடரும் என்று அங்கே வெளியே வனாந்திரத்திலிருந்த அவனிடம் தேவன் கூறினார். எனவே யோவான் காத்திருந்தான். அவன் அவர்களின் எதுவோடும் சேர்ந்து கொள்ளவில்லை. அவன் நிச்சயமாயிருக்கும் வரையில் (உறுதிகொள்ளும் வரையில்), அவன் வெறுமனே காத்திருந்தான். அவன் எதையும் யூகித்துக் கொண்டிருக்கவில்லை. அவன், 'இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். அங்கே பரிசேயர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல ஜனங்கள், அவர்கள் பரிசுத்த ஜனங்கள். ஏன், நிச்சயமாக, அவர்கள் சரியாகத்தான் உள்ளனர்' என்று அவன் கூறினானா. நான்... அவன், 'அவர்கள் சரியாகத்தான் இருக்கின்றனர் என்று யூகிக்கிறேன்' என்று கூறவில்லை. அவர்கள் சரியாக இல்லை. தேவன்... யோவான் அந்த அடையாளத்திற்காக காத்திருந்தான். யோவான் தான் உறுதிகொள்ளும் வரை காத்திருந்தான், பார்த்தீர்களா? நிச்சயமாகவே அவன் காத்திருந்தான். அவன் யூகித்துக் கொண்டிருக்கவில்லை. அவன் மேசியாவின் உண்மையான அடையாளத்தைக் காணும் வரையில் காத்திருந்தான். 65நாத்தான், அவன் எவ்வளவு கூடுமோ அவ்வளவு எளிதில் கோபம் கொள்கிறவனாயிருந்தான். அவன், 'இப்பொழுது, நான் அதை விசுவாசிக்க மாட்டேன். நான் அதைக் காண வேண்டும்' என்றான். அவன் அங்கே மேலே சென்று, அவர் மேசியா தான் என்று கண்டுகொண்ட போது, அவன் திருப்தியடைந்து விட்டான். அவன் யூகித்துக் கொண்டிருக்கவில்லை. அவன் அதைக் காணும் மட்டுமாக அவன் அப்படியே காத்திருந்தான். சேபாவின் ராஜஸ்திரீ, அவள் அதைக் காணும் மட்டுமாகக் காத்திருந்தாள். அவள், 'இப்பொழுது, இது நீண்ட தூரமாய் உள்ளதே...' என்றாள். அவள் ஒரு அஞ்ஞானியாக இருந்தாள் என்பது உங்களுக்குத் தெரியும். அவள், 'நான் அங்கே போனால், இந்த எல்லா காரியங்களையும் வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்?' என்றாள். மேலும் அதைப் போன்ற அவ்விதமான காரியங்களைக் கூறினாள். அங்கே ஒரு - 'அவர்களுடைய இராஜாவாகிய சாலமோன் என்று அழைக்கப்படும் ஒரு மனிதரிடத்தில் அவர்களுடைய தேவன் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியும். அவர்கள் அவரை மிகவுமாக நேசித்து, அவரை இராஜாவாக ஏற்படுத்தியுள்ளனர். நான்... அவர் தேவனாக இருந்தால்... நான்-நான் இந்த வார்த்தைகளை வாசித்தால். அந்த அடையாளம் அம்மனிதரிடத்தில் இருக்குமானால், அந்த மனிதன் தேவனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். நான் போய் அதைப் பார்ப்பேன்' என்றாள். எனவே அவள் தன்னுடைய ஒட்டகங்களுக்கு சேணம் பூட்டி, வனாந்தரத்தினூடாக அவைகளை கொண்டு சென்றாள். அவள் அங்கே சென்று, அங்கே அவள் கூடாரம் போட்டு, காத்திருந்தாள் என்பது உங்களுக்குத் தெரியும். அவள் காத்திருந்தாள். ஒருக்கால் முதலாவது நாள், அவள் சபையின் பின்புறத்தில் பின்னால் வழியில் உட்கார்ந்து இருந்திருப்பாள். மேய்ப்பராகிய சாலமோன் ஆலயத்திற்குள் வருவதை அவள் கண்டாள், அவனுடைய ககல மனிதரும் அவனைச் சுற்றிலும் இருந்தனர். ஓ, அவர்கள் அங்கே ஒரு மகத்தான காரியத்தைக் கொண்டிருந்தனர். இப்பொழுது, அது சரிதான் என்று அவள் உறுதிகொள்ள விரும்பினாள். எனவே பிறகு, நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், பகுத்தறிதல் அப்படியே பரிபூரணமாய் இருப்பதை அவள் கவனித்தாள். முடிவில் அவளுடைய ஜெப அட்டை அழைக்கப்பட்டது, அவள் மேடையின் மேல் ஏறிச் சென்றாள். அவளைக் குறித்து சாலமோன் அறியாத காரியம் ஒன்றுமில்லை என்று வேதாகமம் கூறுகிறது (1 இராஜாக்கள் 10:3, 2 நாளாகமம் 9:2). அது உண்மை. அவள் அதற்கு மேலும் யூகித்துக் கொண்டிருக்கவில்லை. அவள், 'நான் கேள்விப்பட்டதெல்லாம் சத்தியமாய் உள்ளது, அதற்கு மேலும் இன்னும் அதிகமாகவே உள்ளது. என்னிடம் கூறினதைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இங்கே உம்மோடு இருந்து, அனுதினமும் இந்த காரியங்கள் சம்பவிப்பதைக் காணக்கூடிய மனிதர்கள் பாக்கியவான்கள். நான் இங்கிருந்து, இங்கே பின்னாலிருந்து சிறிது மண்ணை எடுத்துக் கொண்டு போக எனக்கு அனுமதி கொடும், எனவே நான் திரும்பிப் போகும் போது, நான் அதன் மேல் முழங்காலிட முடியும். உம்முடைய தேவன் என்னுடைய தேவனாய் இருப்பாராக' என்றாள். அவள் எதையும் யூகித்துக் கொண்டிருக்கவில்லை. அவள் தேவனுடைய உண்மையான அடையாளத்தைக் காணும் மட்டுமாக விழிப்போடு காத்திருந்தாள். 66கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீ, ஒரு மேசியா வருகிறார் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவர் என்ன செய்வார் என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தது. எனவே, அவர்கள் என்ன செய்தாலும் அது பொருட்டல்ல... அவள் யூகித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவள் அதைக் கண்டவுடனே, அவள் உற்றுப் பார்த்து, 'ஒரு நிமிடம் பொறுங்கள். நீர் நிச்சயமாகவே ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் (யோவான் 4:19)' என்றாள். (அவர் வெறுமனே ஒரு சாதாரண மனிதரைப் போலவே தோற்றமளித்தார்). அவள், 'ஒருவர் வருகிறார் என்பதை நாங்கள் அறிவோம்; மேசியா இன்ன இன்ன காரியங்களைச் செய்வார் (யோவான் 4:25)' என்றாள். அவர், 'நானே அவர்' என்று கூறினார். அப்போது அவள் எதையும் யூகித்துக் கொண்டிருக்காமல், தூரமாயிருக்கும் ஊருக்குள் சென்றாள். 'மனிதர்களே, வெளியே வந்து, உங்களுடைய - உங்களுடைய எல்லா உபதேசங்களையும், உங்களுடைய எல்லா கோட்பாடு புஸ்தகங்களையும், மற்றவைகளையும் கொண்டு வாருங்கள், இது மேசியா தானா என்று நாம் பார்ப்போம். நாம்... அது-அது ஒருக்கால் அதுவாக இருக்கக் கூடுமாயின்.' அவள் எதையும் யூகிக்கவில்லை. அவள், 'நான் கண்டவரை வந்து பாருங்கள்' என்றாள். ஆமென்! சரி. 'வந்து பாருங்கள். நாங்கள் அதைக் கண்டுபிடித்தோம்!' அங்கே அதைக் குறித்து எந்த தவறுமேயில்லை. அவள் எதையும் யூகித்துக் கொண்டிருக்கவில்லை. அவள் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் சரியாக இருப்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. 67சீஷர்கள் - பெந்தெகோஸ்தேயில் சீஷர்கள், அவர்கள், 'இப்பொழுது, பொறுங்கள். நாம் பார்ப்போம். அது ஒரு... நாம் பார்ப்போம். இயேசு நமக்கு ஒரு கட்டளை கொடுத்திருக்கிறார். எனவே நாம் இங்கே வர வேண்டுமென்று அவர் நம்மிடம் கூறியிருக்கிறார். நம்முடைய கர்த்தரால் பொய் சொல்ல முடியாது என்பது நமக்குத் தெரியும். (பாவம் எவ்வளவு அப்பாவித்தனமாகவும், எவ்வளவு இரகசியமாய் செய்யப்படுகிறதாயும் இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்!) இப்பொழுது, நாம் இங்கே மேலே வரும் போது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வோம் என்று அவர் நம்மிடம் கூறியுள்ளார். 'நான்... போய்க் கொண்டிருக்கிறேன். மருத்துவரே, இதைக் கவனியும். ஓ, உங்களுக்குத் தெரியும்... அந்திரேயா, ஒரு நிமிடம் இங்கே வா'' என்று கூறியிருந்தால் என்னவாகும். 'ஆமாம், ஆமாம், ஐயா.' 'மத்தேயுவே, நீ என்ன நினைக்கிறாய்?' 'ஓ, யோவானே, இங்கே வா. இப்பொழுது, நம்முடைய கர்த்தரால் பொய் சொல்ல முடியாது என்பது உனக்குத் தெரியும்.' 'அது உண்மை தான்.' 'பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை நாம் பெற்றுக்கொள்ளும் வரையில், நாம் இங்கே மேலே காத்திருக்க வேண்டும் என்று அவர் நம்மிடம் கூறியுள்ளார், நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம். அவர் நம்மேல் தமது கரத்தை உயர்த்தி, நம்மேல் ஊதி, 'பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினது உனக்கு ஞாபகம் உள்ளதா?' 'ஆமாம். உ-ஊ' 'நல்லது, சகோதரர்களே, நான் உங்களுக்குக் கூறுகிறேன். நாம் அதைப் பெற்று விட்டோம் என்று நம்புகிறேன். நாம் அதைப் பெற்றிருக்கிறோம் என்று யூகிக்கிறேன்.' ஓ, நீ பரிதாபகரமான மாய்மாலக்காரன்! புரிகிறதா? 'நான் அதைப் பெற்று விட்டேன் என்று நம்புகிறேன். நாம் அதை விசுவாசத்தின் மூலமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.' பாப்டிஸ்டுகளே! 'நாங்கள் அதை விசுவாசத்தின் மூலமாக ஏற்றுக் கொள்ளுகிறோம்.' விசுவாசத்தின் மூலமா, அது கிடையாது! அது ஒரு அனுபவமாயுள்ளது. 68இயேசுவோடு வாழ்ந்து, பயிற்சி பெற்று, அங்கே மேலே நின்று கொண்டிருந்த மனிதனாகிய பேதுருவை என்னால் காணமுடிகிறது. அவன், 'ஒரு நிமிடம் பொறுங்கள். அதுவல்ல வேதவாக்கியம்' என்றான். 'நல்லது, நாம் அதைக் கொண்டிருக்கிறோம் என்று யூகிக்கிறேன்.' 'முட்டாள்தனம்.' 'நாம் நம்முடைய ஊழியத்தைத் தொடங்க வேண்டும். நல்லது, நாம் இங்கே ஒன்பது நாட்களாக இருந்து வருகிறோம். நாம் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்?' 'அவர், 'அது வரைக்கும்' என்று அவர் கூறினார் அல்லவா? அது வரைக்கும். ஒன்பது நாட்களாகவோ, பத்து நாட்களாகவோ, அல்லது ஐம்பது நாட்களாகவோ, அல்லது நூறு நாட்களாகவோ காத்திருங்கள் என்றல்ல, அவர், '... அது வரைக்கும் காத்திருங்கள்' என்றாரே.' 69அங்கே தான் நாம் தவறு செய்கிறோம். (ஆம், ஐயா.), அதெல்லாம் சரிதான் என்று யூகிக்கிறோம். நம்மில் அநேகர் யூகிக்கிறோம், காரணம் என்னவென்றால் நாம் அந்நிய பாஷைகளில் பேசுதலைப் பெற்றிருக்கிறோம், நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவு தான் என்று யூகித்துக் கொண்டோம். அது உண்மை. நாம் அங்கேயே தரித்திருந்து அந்நிய பாஷைகளில் பேசினோம். யாரோ ஒருவர் நம்மை ஊக்குவித்தார், நாம் அந்நிய பாஷைகளில் பேசினோம். அதெல்லாம் சரிதான் என்று நாம் யூகித்துக் கொண்டு தொடர்ந்து சென்று பின்வாங்கிப் போனோம். ஆகையால் தான் ஸ்திரீகளாகிய நீங்கள் இன்னும் உங்கள் தலைமயிரை கத்தரித்து, அழகுசாதனங்களை (make-up) உபயோகித்து, குட்டை உடைகளை உடுத்துகிறீர்கள். ஆகையால் தான் மனிதர்களாகிய நீங்கள் இன்னுமாக உங்களுடைய காரியங்களைக் கொண்டிருந்து, நீங்கள் செய்கிற விதமாகவே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெறுமனே யூகித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. அதை நிறுத்துங்கள்! அதை நிறுத்தி விடுங்கள்! வார்த்தைக்குத் திரும்புங்கள். நினைவிருக்கட்டும். சீமோன் எழுந்து நின்று, 'ஒரு நிமிடம் பொறுங்கள். ஏசாயா, 'கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம்' என்றாரே. (ஓ, என்னே. அவன் வேதவாக்கியங்களுக்கு திரும்ப அழைக்கின்றதை என்னால் காண முடிகிறது). நாம் எதையுமே யூகிக்கப் போவதில்லை. ஏதோவொன்று சம்பவிக்கும் வரையில் நாம் இங்கேயே காத்துக் கொண்டிருக்கப்போகிறோம்' என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அது உண்மை. 'நல்லது, சகோதரர்களே, நான் உங்களுக்குக் கூறுகிறேன். அவர்கள் சென்று தாங்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதைச் செய்யட்டும். நாம் அப்படியே நம்முடைய சொந்த சிறு குழுவை ஸ்தாபித்துக் கொண்டு, நாம் நம்மை 'இன்னார் இன்னார்' என்று அழைத்துக் கொள்வோம். அவர்கள் மதவெறியர்களாய் இருக்க விரும்பினால், அவர்கள் தரித்திருக்கட்டும்.' அங்கே தான் உங்கள் காரியம் இருக்கிறது. அது உண்மை. வார்த்தையோடு தரித்திருங்கள். பவுல், 'அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள், ஏனென்றால் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை' என்றான். அது உண்மை. ஆம், ஐயா. ஓ, எத்தனை காரியங்களை என்னால் (கூற) முடியும்... நான் அநேக வேதவாக்கியங்களை இங்கே எழுதி வைத்துள்ளேன், அது எனக்கு முழு நாளையும் எடுத்துக் கொள்ளும். என்னால் அதிக நேரம் தரித்திருக்க முடியவில்லை. வெறுமனே யூகித்தல், யூகித்தல் - அவர்கள் செய்வதெல்லாம் அவ்வளவு தான், அதெல்லாம் சரிதான் என்று அவர்கள் நினைக்கின்றனர், அதெல்லாம் சரிதான் என்று அவர்கள் யூகிக்கின்றனர். 70தானியேல், அவர்கள் அங்கே யூகித்தனர்... அதெல்லாம் சரியாக இருக்கும் என்றும், தேவனுடைய பரிசுத்த பாத்திரங்களை எடுத்து, அவைகளில் பருகலாம் என்று அவர்கள் யூகித்தனர். பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிற ஜனங்களைப் பார்த்து நகைத்தால், அது சரிதான் என்று அவர்கள் யூகித்தனர். அவர்களைக் கேலி செய்வது சரியாக இருக்கும் என்று அவர்கள் யூகித்தனர். வேதாகமம், 'இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவனாயிருந்தால், உன்னுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே உன்னை அமிழ்த்துகிறது உனக்கு நலமாயிருக்கும் (மத்தேயு 18:6, மாற்கு 9:42)' என்று கூறுகிறது. சகோதரனே, இந்த ஜனங்கள் தெருக்களினூடாக இவ்வாறு கீழ்த்தரமாக கழுத்தை நெறித்து நடந்து கொண்டு, ஏறக்குறைய இவ்வளவு உயரமான குதிகால் செருப்புகளை அணிந்து கொண்டு, ஸ்திரீகள் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டு, இவ்விதமாக சுற்றி சுற்றி நடக்கிறதை நான் காண்கிறேன். ஏதோவொரு ஸ்திரீ என்னிடம் கூறினாள், (அவள் ஒரு பெந்தெகோஸ்தே ஸ்திரீ!), (அவள் இந்தச் சிறிய சொற்பமான பாவாடைகளை அணிபவள், உங்களுக்குத் தெரியும், அவர்கள் சற்றேறக்குறைய அரைகுறையாக தங்கள் முழங்கால்கள் வரை அதை அணிகிறார்கள்), அவள் என்னிடம், 'ஏன், சகோதரன் பிரன்ஹாமே, அந்தவிதமாக மாத்திரமே அவர்கள் அவைகளைச் செய்கிறார்கள்' என்றாள். அவர்கள் தையல் இயந்திரங்களையும், செய்து, பொருட்களையும் விற்கிறார்களே. பாருங்கள், அந்தப் பழமையான அசுத்த ஆவி உன்னிடத்தில் உள்ளது. ஒரு பெந்தெகோஸ்தே ஸ்திரீ ஏன் அவ்விதமாக நடந்து கொள்ள விரும்புகிறாள்? நான்... அவள் பெந்தெகோஸ்தேயினள் அல்ல; அவள் பெந்தெகோஸ்தேயின் பெயரை தான் வைத்திருக்கிறாள். நான் துரிதமாக அதை விட்டுப் போவது நல்லது, நான் அடுத்த பக்கத்திற்குத் திருப்பி விடுகிறேன். ஓ, என்னே! 71மோசே, அவன் யூகித்திருந்தால் என்னவாகியிருக்கும்? யூகிக்காதீர்கள்; வார்த்தையோடு தரித்திருங்கள். வித்தியாசமான எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எதனோடு தரித்திருக்க வேண்டும் என்று தேவன் கூறினாரோ சரியாக அதிலேயே தரித்திருங்கள். வார்த்தையோடு தரித்திருங்கள். ஆமென். தேவன் கடமைப்பட்டவராயிருக்கிறார். தேவன் தம்முடைய வார்த்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறார். வார்த்தை உங்களில் இருக்குமானால், அவர் தம்முடைய வார்த்தையோடு உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறார். ஆனால் நீங்கள் ஏவாளைப் போன்று செய்யும் போது - அதைக் கொஞ்சம் துளியளவு சந்தேகித்து, அதற்கு பதிலீடாக ஏதோவொன்றைக் கொண்டு போவீர்களானால் - நீங்கள் சரியாக அங்கே வெளியே தான் இருக்கிறீர்கள். வார்த்தையோடே தரித்திருங்கள். நாம் எதையும் யூகித்துப் பார்க்க வேண்டாம். அப்படியே வார்த்தை என்ன கூறுகிறதோ அதையே எடுத்துக் கொண்டு அதை விசுவாசிப்போம். நீங்கள் அதைச் செய்வீர்களா? 72இப்பொழுது, இதோ பார், நண்பனே. அது கடினமாக இருக்கிறது, நான் ஏறக்குறைய ஐந்து அல்லது பத்து நிமிடங்களில், அங்கே அந்தவிடத்தில் இருந்தாக வேண்டும், நான்-நான் போயாக வேண்டும். எனவே நான்-நான்... வழக்கமாக நான் அதிக நேரம் பேசுகிறேன். ஆனால் நான் போயாக வேண்டும். ஆனால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான்-நான் உங்களை நேசிக்கிறேன். நான் அன்பில்லாதவனாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பவில்லை. நான் வெட்டி வீழ்த்த வேண்டும் என்றும், கிழித்தெறிய வேண்டும் என்றும் கருதவில்லை. அநேக நேரங்களில், அது உங்களை வெட்டுவதைக் காட்டிலும் மோசமாக என்னைத் தான் வெட்டுகிறது. ஆனால், சகோதரனே, சகோதரியே, நான் ஏதோவொரு நாளில் உங்களை அங்கே சந்தித்தாக வேண்டும். நான் அங்கே நின்று, அவர் என்னைச் சுற்றிலும் நோக்கிப் பார்த்து, 'வஞ்சகனே! அவர்களுடைய இரத்தம் உன் கரங்களில் உள்ளது!' என்று கூறினால், (பாருங்கள்?), ஏனென்றால் வேறு விதமாக இருக்க எனக்குத் தெரியும். நான் அதைக் கூறாமற்போனால், எனக்கு ஐயோ. இப்பொழுது உங்களால் கூடும்... நீங்கள் என்னோடு கூட வெளியே வராமல், ஆனால் நீங்கள் அப்படியே வார்த்தையை எடுத்துக் கொண்டு, உட்கார்ந்து, அது உண்மை அல்லவா என்று கண்டு கொள்ள வேண்டும் என்று நான்-நான் ஜெபிக்கிறேன். இந்த அமைப்புகளிலும், ஸ்தாபனங்களிலும் தேடிப் பாருங்கள். திரும்பிச் செல்லுங்கள். நீங்கள்-நீங்கள் உங்களுக்கு நீங்களே அதற்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஏன், சரீரபிரகாரமாக உங்களுக்குக் கெடுதிவிளைவிக்கப் போகிற ஏதோவொன்று அங்கே இருந்தால், நீங்கள் உலகத்தில் யாவற்றையும் செய்கிறீர்கள் - உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வழக்கறிஞர்களையும், வழக்குரைஞர்களையும் மற்ற யாவற்றையும் ஏற்பாடு செய்து கொள்கிறீர்கள், உங்களுடைய ஜீவனுக்கு அச்சுறுத்தல் இருக்குமானால், ஒரு மெய்க்காப்பாளனைப் பெற்றுக் கொள்கிறீர்கள் - மற்ற யாவற்றையும் நீங்கள் செய்வீர்கள், பாருங்கள்? உங்களுடைய ஆத்துமாவைக் குறித்து என்ன? உங்களுடைய நித்திய ஜீவன் பாதிக்கப்படுமாயின் என்னவாகும்? 73நீங்கள் திரும்பிச் சென்று, ஸ்தாபனங்களுக்கு என்ன சம்பவித்திருக்கின்றன என்று பார்க்க வேண்டும், எப்போதுமே அவைகளுக்கு என்ன சம்பவிக்கின்றன என்று பார்க்க வேண்டும். நான் ஸ்தாபனங்களுக்கு விரோதமானவன் அல்ல, அங்கேயும் ஜனங்கள் உள்ளனர். நான் கத்தோலிக்கர்களுக்கு விரோதமானவன் அல்ல. நான் பாப்டிஸ்டுகளுக்கு, பிரஸ்பிடேரியன்களுக்கு விரோதமானவன் அல்ல. ஏன், நான் இக்காலையில் இங்கே இச்சபையில் கேட்டுக் கொள்வேனானால்... உலகத்தைச் சுற்றிலும் மில்லியன்கணக்கான (இலட்சக்கணக்கான) நண்பர்களை கர்த்தர் எனக்குக் கொடுத்திருப்பதற்காக நான் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன், அவர்கள் கத்தோலிக்கர்களும், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களுமாய் இருக்கிறார்கள். அது என்ன? இப்போது, நான் சரியாக இப்பொழுதே கிறிஸ்தவ வியாபாரிகளோடு கூட இருக்கிறேன், நான் ஜனங்களாகிய அவர்களோடு உலகம் முழுவதும் போய்க் கொண்டிருக்கிறேன், அது ஏன்? நான் எதையாவது பேசுவது போன்று அதேவிதமாகவே நானும் அவர்களோடு பேசுகிறேன். நான் அன்றொரு நாளில் அதை ஒரு கூட்டத்தில் கூறினேன். தலைவர்களில் ஒருவர் எழுந்து நின்று, 'ஆகையால் தான் நாங்கள் உம்மைக் கொண்டிருக்கிறோம். நீர் வார்த்தையோடு உறுதியாய் நிலைத்திருந்து, எங்களைச் சரிப்படுத்துகிறீர்' என்றார். அது உண்மை. 74நீங்கள் சத்தியத்தைக் கூறுவீர்களானால், ஜனங்கள் உங்களை மெச்சுவார்கள். சிறு பெண் பிள்ளைகளாகிய உங்களில் எத்தனை பேர், பிரம்பினால் தண்டித்து, உங்களைச் சரிப்படுத்தின ஒரு நல்ல வயதான தாயாரை பாராட்டுவீர்கள்? நீங்கள் அவளை பாராட்டுவீர்களா? இங்கே இன்று வெளியே கல்லறைத் தோட்டத்திலிருக்கும் அந்த வயதான தலைநரைத்த அப்பாவைக் குறித்து என்ன? நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? ஏன்? அவர் ஒரு தகப்பனாராக இருந்தார். அது சரியே. ஆனால் உங்களை... அனுமதிக்கிற ஒருவன். நான் அன்றொரு நாள் ஒரு பையனைக் கண்டேன், அவன் திருடி, மற்ற யாவற்றையும் செய்து, தொடர்ந்து அவ்வாறு நடந்து கொண்டிருந்தான். ஏன், அவனுடைய தாய் அதைச் செய்ய அவனை ஊக்கப்படுத்தினாள். அவன், 'அந்தக் காரியங்களை நான் (அவன் சிறைக்குப் போய்க் கொண்டிருந்தான்) செய்யாமலிருக்கும்படி எனது தாய் என்னை ஆக்கியிருந்தால், நான் இன்று இங்கே போய்க் கொண்டிருக்க மாட்டேன்' என்றான். அங்கே தான் உங்கள் காரியம் இருக்கிறது, பாருங்கள்? அதுதான் அது. நீங்கள் உறுதியற்றவர்களாய் இருக்க வேண்டாம். நீங்கள் சத்தியம் எதுவோ அதன் பேரில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆமென்! நாம் சிறிது நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, எனக்குத் தெரியவில்லை. நாங்கள் ஒருக்கால் இவ்விதமாக மீண்டும் ஒருபோதும் சந்திக்காமல் இருக்கலாம். ஒருக்கால் நாங்கள் ஒன்றாகக் கூடியிருப்பது இதுவே கடைசி காலையாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. பிதாவே, நீர் இரக்கமாயிருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இந்த ஜனங்களுக்கு உம்முடைய ஆசீர்வாதங்களை அருளும். மேலும் கர்த்தாவே, சில சமயங்களில், அது வெட்டுகிறது என்பதை நான்-நான் அறிவேன்... ஆனால் அது ஒரு பட்டயமாய் உள்ளது, அது ஒரு கருக்குள்ள... உம்முடைய வேதாகமத்தில், எபிரெயர் புத்தகத்தில், 'தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள ஒரு பட்டயத்தைக் காட்டிலும் கருக்கானதாய் இருக்கிறது' என்று கூறுகிறது. அதை ஆதரித்து, அது தேவன் தான் என்று காண்பிக்கும்படி, இந்தப் பட்டயத்தை அழைப்பில் நிச்சயமுள்ள, அதற்குப் பின்னால் தேவனுடைய ஆவியைக் கொண்டுள்ள, அது சரிதான் என்று நிரூபிக்கக் கூடிய ஆவியைக் கொண்டுள்ள விசுவாச கரத்தினால் மட்டுமே உபயோகிக்க முடியும். ஆனால், தேவனே, ஜனங்கள் அதைக் காண்பார்களாக. 75இங்கேயிருக்கும் என்னுடைய சகோதரனுடைய இச்சிறிய தாழ்மையுள்ள நபர், சகோதரன் மற்றும் சகோதரி லிட்டில்ஃபீல்டு, அவர்கள் இருவரும் ஒருவராய் உள்ளனர். அவருடைய அன்பும், நேசமும்... ஒருசமயம் நீர் ஒரு - ஒரு மனிதனிடம் (போகும்படி) அவர்கள் உம்மை அழைத்ததை நான் நினைவுகூருகிறேன். அவன் ஒரு ரோமனாயிருந்தான். ஆனால் அவர்கள், 'அவன் நமது தேசத்திற்காக மகத்தான காரியங்களைச் செய்திருக்கிறான். அவன் நமக்கு ஒரு ஜெப ஆலயத்தைக் கட்டியிருக்கிறான். அவன் பாத்திரனாயிருக்கிறான்' என்றார்கள். தேவனே, அபிஷேகத்தின் கீழ் அம்மனிதரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கையில், அவருடைய இருதயத்தின் ஆழத்தில் அவர் என்னை நேசிக்கிறார் என்றும், அவர் அதை விசுவாசிக்கிறார் என்றும் நான் அறிவேன். அவரும் அதை அறிவார், நான் அவரை நேசிக்கிறேன். கர்த்தாவே, நீர் அதை அறிவீர். அதிக மணி நேரங்கள் இல்லாமலிருக்கலாம், இரவுகள் அதிக அந்தகாரமாய் இருக்கலாம், அல்லது பெருமழை பெய்யலாம், ஆனால் எந்த நேரமும் அவருடைய சிறிய சபைக்காக ஜெபிக்கும்படி அவரோடு இருதயங்களை என்னால் இணைத்துக் கொள்ள முடியும் என்றும், என்னால் முடிந்த எதையும் செய்வேன் என்றும் நான் அவரிடம் கூறியிருக்கிறேன்... அது உமது வழிநடத்துதலுக்கு முரண்பாடாக இல்லாதிருக்கும் காலம் வரை, நான் அதைச் செய்வேன். நான் கூறின அதையே அவரும் உணருகிறார். இப்பொழுதும், கர்த்தாவே, என்னுடைய ஆசீர்வாதங்கள் அவர் மேல் தங்கியிருப்பதாக. இதை அருளும், கர்த்தாவே. இங்கேயிருக்கும் அவருடைய சிறிய சபை... சிறிது நேரத்திற்கு முன்பு, அந்தப் பையன்களுடன் இங்கே ஹாலில் நின்று, அவர் ... அதைக் குறித்துக் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். ஏதோவொரு நபர், 'அந்த ஏழைகளுடன் நீர் என்ன செய்வீர்?' என்று கேட்ட போது, அவர், 'நான் அவர்களை என்னுடன் அழைத்துச் செல்வேன்' என்றார். அது சரிதான், கர்த்தாவே. மோசே தன்னைத்தானே அந்த இடைவெளியில் போட்டுக் கொண்டு, 'கர்த்தாவே, என்னை எடுத்துக் கொள்ளும். அவர்களை விட்டு விடும்' என்று கூறினது போன்று, அது அவரில் இருக்கிற கிறிஸ்துவின் ஆவியாய் உள்ளது - அது அவரில் இருக்கிற கிறிஸ்துவின் ஆவி தான். சகோதரன் லிட்டில்ஃபீல்டுக்கும் சகோதரி லிட்டில்ஃபீல்டுக்கும் நீர் உதவி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, தேவனுடைய ஆவியின் வல்லமையை அவர்களுக்கு அருளும். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பார்களாக. அவர்களுடைய... கர்த்தாவே, அவர்கள் இந்த ஜனங்களை சரீரபிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் போஷிப்பார்களாக. இதை அருளும், கர்த்தாவே. இந்த சிறு சபையை ஆசீர்வதியும், டீக்கன்மார்களையும், தருமகர்த்தாக்களையும் ஆசீர்வதியும். இந்த சிறு சபை நிமிர்ந்து நிற்பதாக. எடுத்துக்கொள்ளப்படுதல் வரும் போது, இங்கேயிருக்கும் இச்சிறு ஸ்லத்திலிருந்து, உண்மையாகவே டஜன்கணக்கானோர் இங்கிருந்து எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று, தளர்ந்து போன இந்த வயதான மனிதர்களைப் பார்ப்பார்களாக; நரைத்த தலையோடும், முகத்தில் சுருக்கங்களைக் கொண்டும் இருக்கிற இந்த வயதான பெண்மணிகளைக் காண்பார்களாக; திடீரென்று அவர்களைச் சூழ அவர்களுடைய பிள்ளைகளோடும், நின்று கொண்டிருக்கிற தங்கள் பேரப்பிள்ளைகளோடும் இருக்கிற அவளையும் தகப்பனாரையும் காண்பார்களாக. பாட்டனார் திரும்பவும் ஒரு வாலிபனாக மாறுவதைக் காண்பார்களாக; பாட்டி... அப்போது போவார்களாக. ஓ, நாங்கள் இந்த மாம்ச வஸ்திரத்தைக் களைந்து, உயிர்த்தெழுந்து, நித்திய பரிசை பற்றிக் கொள்வோம். ஆகாயத்தினூடாகப் (பறந்து) செல்லும் போது, 'விடைபெறுகிறேன், விடைபெறுகிறேன்' என்று சத்தமிடுவோம். தேவனே, நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 76கர்த்தாவே, நான் ஏதாவது தவறு செய்திருந்தால், நான் யாரையாவது வெட்டியிருந்தாலோ, புண்படுத்தியிருந்தாலோ, நான் - நான் அந்தவிதமாய் அதைச் செய்ய வேண்டும் என்று கருதவில்லை. ஒருக்கால் வெட்டப்பட வேண்டிய தேவையுள்ள ஏதாவது அங்கே இருந்திருக்கலாம். எனவே நான் வெறுமனே அங்கே வார்த்தையை வைத்தேன். அது ஒரு விதையாய் உள்ளது. இப்பொழுது, அது ஒரு மகத்தான விளைச்சலைக் கொண்டு வருவதாக. கர்த்தாவே, இந்த சபையில் அப்படிப்பட்ட ஒரு ஆவியை கொண்டு வருவதாக, தேவனுடைய வல்லமையானது ஏறக்குறைய இதைச் சுற்றியிருக்கிற பகுதிகள் முழுவதும் அறியப்படுவதாக. இங்கிருந்து மிஷனரிகள் புறப்பட்டுச் செல்வார்களாக, பிரபலமான மேய்ப்பர்கள் இங்கிருந்து புறப்பட்டுப் போவார்களாக. இதை அருளும் பிதாவே. கர்த்தாவே, அவர்களுக்கு ஆகாரத்தை, ஆடுகளின் ஆகாரத்தை கொடுப்பீராக. உமது வார்த்தையாகிய ஆடுகளுக்குரிய ஆகாரத்தையே அவர்கள் வாஞ்சிக்கிறார்கள். பிதாவே, இயேசுவின் நாமத்தின் வழியாக எங்கள் மத்தியில் உம்மையே மகிமைப்படுத்துகிறோம். இப்பொழுதும், கர்த்தாவே, உம்மை அறியாதவர்கள் இன்று இங்கே இருப்பார்களானால், அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இப்பொழுதே உம்மை ஏற்றுக் கொள்வார்களாக. 77நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், ஒரு மிக உத்தமமான கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் தேவனுடைய வெளிச்சத்தில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று உணருகிறீர்களா? நீங்கள் அவ்வாறு நடக்கவில்லை என்றால், நான் உங்களிடம் கேட்கப் போவதில்லை; நிச்சயமாகவே நீங்கள் - நீங்கள் இப்பொழுது சற்று யூகித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில், நீங்கள் செய்யும்படியாக இந்த வேதத்தில் உங்களுக்காக காரியங்கள் எழுதப்பட்டுள்ளன என்றும், நீங்கள் அதைச் செய்யவில்லை என்றும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதைச் செய்கிற காலம் வரையில்... நண்பர்களே, யூகித்துக் கொண்டிருக்க வேண்டாம். நாம் சரியாக இருப்போம். நீங்கள் உங்களுடைய கோட்பாடுகளைக் கொண்டு நியாயந்தீர்க்கப்படப் போவதில்லை. நீங்கள் உங்களுடைய உணர்ச்சிகளின் மூலமாக நியாயந்தீர்க்கப்படப் போவதில்லை. நீங்கள் இந்த வார்த்தையைக் கொண்டு தான் நியாயந்தீர்க்கப்படப் போகிறீர்கள். ஒவ்வொரு தலையும் வணங்கி, ஒவ்வொரு கண்ணும் மூடிக் கொண்டிருக்கையில், நீங்கள் தவறாய் இருக்கிறீர்கள் என்று அறிவீர்களானால், நீங்கள் அப்படியே உங்கள் கரங்களை உயர்த்தி, 'சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபிப்பீர்களா? தேவன் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் இப்பொழுது ஜெபிக்கிறேன்' என்று கூறுங்கள். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும், உன்னையும், உன்னையும், உன்னையும். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது அருமை. உத்தமமாயிருங்கள். சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தோத்திரம்! நான் உங்களைக் காண்கிறேன். சரியாக இங்கே அமர்ந்திருக்கும் வியாதிப்பட்டிருந்த ஒரு ஸ்திரீ சரியாக அப்போதே சுகமடைந்ததை நான் கண்டேன், ஏனென்றால் அவள் தன்னுடைய கரத்தை உயர்த்தினாள். அவள் உத்தமமாயிருந்தாள், அவள் சுகமாக்கப்பட்டாள். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, உமக்கு அது எப்படித் தெரியும்?' என்று கேட்கலாம். எனக்கு அது தெரியும். ஆம், ஐயா. தேவன் உம்மோடு இருக்கிறார். அப்படியே உத்தமமாயிருங்கள். நான் அறிவேன், நான்... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னையும், உன்னையும். ஆம். அவர்களில் டஜன்கணக்கானோர். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 78அவர் காண்கிறார்... அவர்... நான் உன்னுடைய கரத்தைக் (காணத்) தவறியிருக்கலாம், ஆனால் அவர் தவறுவதில்லை. அவர் முடிவற்றவராயிருக்கிறார். பூமி உருவானதற்கு முன்பே, பூமியின் மேலிருக்கும் ஒவ்வொரு கொசுவையும் அவர் அறிந்திருந்தார்; அது எத்தனை தடவைகள் தன்னுடைய கண்களை சிமிட்டும் என்றும், அது எவ்வளவு கொழுப்பை உற்பத்தி செய்யும் என்றும் அவர் அறிந்திருந்தார். நிச்சயமாகவே, அது தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாய் உள்ளது, அதில் ஒவ்வொரு சிறு பாகமும் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாய் உள்ளது. அவர் அறிகிறார்... அவர் முடிவற்றவராயிருக்கிறார். என்னவென்று அவர் அறிந்திருந்தார்... அவர் முடிவற்றவர். வார்த்தையானது முடிவற்றதிலிருந்து வருகிறது, பாருங்கள்? அது அப்படியே முடிவற்றதாயுள்ளது. அதற்கு விளக்கம் தேவையில்லை; உங்களால் அதை விளக்கிக்கூற முடியாது. அது நித்தியமாய் உள்ளது. அவர் நித்தியமானவராய் இருக்கிறார். அவர் யாவற்றையும் அறிகிறார், ஒரு நினைவைக் கூட அறிகிறார். நீங்கள் சிந்திக்கும் ஒவ்வொரு நினைவையும், நீங்கள் பிறக்கும் முன்பே அவர் அதை அறிந்திருந்தார். ஆகையால் தான் முன்னறிவின் மூலமாக அவரால் முன்குறிக்க முடிந்தது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது அவருக்குத் தெரியும். அவர் அவை எல்லாவற்றையும் தம்முடைய மகிமைக்கென்றே செய்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் கர்த்தருடைய நாமத்தில் உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில்... நான் களைப்பாயிருக்கிறேன். நான் மிகவும் கடினமாக பிரசங்கித்திருக்கிறேன், ஆனால் அது-அது உண்மையாயுள்ளது. இப்பொழுது, கடந்த இரவில் நமக்கு ஒரு சுகமளிக்கும் ஆராதனை இருந்தது, ஆனால் சரியாக இப்பொழுதே ஏதோவொன்றை செய்ய வழிநடத்தப்படுவதாக நான் உணருகிறேன். ஜனங்கள் இன்னும் இங்கே வியாதியாயும், தேவையுள்ளவர்களாயும் இருப்பதைக் காண்கிறேன். நான் உங்களிடம் சத்தியத்தைக் கூறியிருக்கிறேனா இல்லையா என்று தேவன் பேசுவாராக. தேவன் உங்களிடம் பேசுவாராக. 79பரலோகப் பிதாவே, இப்பொழுது, பேசும். நான் பேசியிருக்கிறேன். இப்பொழுது, நீர் பேசி, அது உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர். இதை அருளும், கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில். இப்பொழுது இங்கே வியாதியாயிருக்கிற யாவரும்... அதை விரும்புகிறேன். நான் இங்கிருந்து சென்று, ஆராதனையை சகோதரன் லிட்டில்ஃபீல்டு அவர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்பாக ஒரு சாட்சிக்காக குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் வர வேண்டுமென்று விரும்புகிறேன். இப்பொழுது, அப்படியே ஜெபத்தில் இருங்கள். இப்பொழுது, நீங்கள், 'கர்த்தராகிய இயேசுவே, எங்களுடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக்கூடிய ஒரு பிரதான ஆசாரியர் எங்களுக்குண்டு என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதே' என்று ஜெபம் பண்ணுங்கள். இப்பொழுது, அந்த பிரதான ஆசாரியர் இயேசு கிறிஸ்துவாக இருந்தால்... 'ஆமென்' என்று கூறுகிற விசுவாசிகள் அனைவரும், நீங்கள் இயேசுவே தேவ குமாரன் என்றும், யேகோவாவின் குமாரன் என்றும் விசுவாசிக்கிறீர்களா? அவர் ஜீவிக்கிறார் என்றும், அவர் இப்பொழுது தேவனுடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார் - வீற்றிருந்து, நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசும்படியாக அவர் என்றும் ஜீவிக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் ஒரு ஜீவிக்கிற பிரதான ஆசாரியராய் இருப்பாரானால், அவர் எவ்வாறு... செய்தார். அவர் இங்கே பூமியின் மேல் ஒரு பிரதான ஆசாரியராய் இருந்த போது, ஒரு நாள் ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், அவர் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்து, அவளுடைய உதிர ஊறல் நின்று போயிற்று என்று அவளிடம் கூறினார். அது பிரதான ஆசாரியரின் செய்கையாக இருந்ததா? அப்படியானால் அவர் ஒரு நித்திய பிரதான ஆசாரியராய் இருக்கிறார். அப்படியானால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். 80இப்பொழுது, அவர் திராட்சச்செடியாய் இருக்கிறார். நான் அப்படியே என்னைத்தானே எடுத்துக் கொள்ளட்டும் - நீங்கள் அதை மன்னித்து, தேவன் என்மேல் இரக்கமாயிருப்பாரானால் - நான் கிளையாயிருப்பேன். அது அதனுடைய கனியைப் பிறப்பிக்கட்டும், நாம் முடிவுகாலத்தில் இருக்கிறோமா இல்லையா என்று பாருங்கள். ஜெபம் பண்ணுங்கள். அது ஒரு - ஒரு வாலிபனில் நிழலிட்டிருப்பதை நான் காண்கிறேன், ஆனால் எனக்கு அந்த மனிதனைத் தெரியும். அந்த வெளிச்சம் ஒரு பையனின் மேல் தொங்கிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன், அவன் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறான், ஆனால் நான் அவனை அறிவேன். அவன் இதற்கு முன்பு சுகமாக்கப்பட்டிருக்கிறான் (நான் போகவில்லை...) அவன் இப்பொழுதே சுகமாக்கப்படப் போகிறான். நான் அதைக் குறித்து ஒரு வார்த்தையும் கூற மாட்டேன். இதோ அது சரியாக இங்கே என் அருகாமையில், ஏறக்குறைய இரண்டு அல்லது மூன்று வரிசைகளுக்கு பின்னால் உள்ளது. அது குழப்பங்களுக்குள்ளான ஒரு பெண்மணியின் மேல் உள்ளது. எனக்கு அவளைத் தெரியாது. அவள் அதைப் புரிந்து கொள்ளுகிறாள் என்று நம்புகிறேன். கர்த்தாவே, அவள் யாரென்று என்னிடம் கூறும். அவள் திருமதி. காக்ஸ் என்று நம்புகிறேன். அப்படித்தானே? நீ வேண்டிக் கொண்டதை உன்னால் பெற்றுக் கொள்ள முடியும். அருகில், சரியாக அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பெண்மணியே, அவள் மூச்சுத் திணறி வார்த்தைகள் வெளிவராமல் இருக்கிறாள். நான் உனக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். நான் உன்னை அறியேன். திருமதி. ஆலவே (Allaway). அது உண்மை நான் அந்த ஸ்திரீயை என்னுடைய ஜீவியத்தில் கண்டதேயில்லை. நீ விசுவாசிக்கிறாயா? ஆமென். விசுவாசம் கொண்டிரு. சந்தேகப்படாதே. இப்பொழுது, நீ அதை விசுவாசிக்கிறாயா? என்ன சம்பவித்தது? அவள் அந்த பிரதான ஆசாரியனை தொட்டாள். உன்னால் புரிந்து கொள்ள முடிகிறதா? குடும்பப் பிரச்சனையினால், அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் சீமாட்டியே, உன்னைக் குறித்து என்ன? திருமதி. மில்லர், அவர் தவறான காரியத்தைச் செய்து விட்டார், அவர் அந்தப் பெண்ணோடு ஓடி விட்டார். நான்-நான் அந்தப் பெண்ணை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. அது உண்மை என்று பரலோகத்திலிருக்கிற தேவன் அறிவார். அவள் என்ன செய்தாள்? அவள் ஒருபோதும் என்னை தொடவில்லை. அவள் என்னிடமிருந்து 30 அடி தூரத்தில் இருக்கிறாள். ஆனால் அவள் அந்த பிரதான ஆசாரியரைத் தொட்டாள். அது என்ன? நான் உங்களிடம் பிரசங்கித்திருக்கிற இந்த சுவிசேஷம் சத்தியமாயுள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் அந்த ஒளியில் நடவுங்கள். சுவிசேஷ ஒளியில் நடவுங்கள். அவரை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். நீங்கள் அவரை ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் - எல்லா கோட்பாடுகளை விட்டும், மற்ற யாவற்றையும் விட்டு விலகி, மேசியாவை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? கிறிஸ்துவுடைய பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்வீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, இங்கே என்ன இருக்கிறது? 81அது எத்தனை பேர்கள்? அது இரண்டு பேரா? எத்தனை பேர்கள்? மூன்று பேரா? மூன்று பேர். அது போதும். அது போதுமானது. அது இங்கே அந்த மூலையில் இருக்கிற ஒரு மனிதனின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். பாருங்கள்? நான் உங்களிடம் என்ன கூறிக் கொண்டிருக்கிறேன்? உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது நானல்ல; இப்பொழுது உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது தேவன் தான். ஒரு மனிதனால் எதையும் கூற முடியும். பகுத்தறிதல் என்று அழைக்கப்படும் அநேக போலியான காரியங்கள் சுற்றிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 'இங்கேயிருக்கும் யாரோ ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு உள்ளது என்று கர்த்தர் என்னிடம் கூறுகிறார். அது யார், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்களைக் குறித்து என்ன?' அது ஆள்மாறாட்டம் செய்வதாகும், அது யூகிப்பதாகும். இக்கடைசி நாளைக் குறித்து வேதவாக்கியம் என்ன கூறுகிறது என்று நீங்கள் உணரவில்லையா? நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிற கடைசி காரியத்தை நீங்கள் நினைக்கவில்லையா... சாயங்கால நிழல்கள் படருவதற்கு சற்று முன்பு என்ன சம்பவிக்கும் என்று மல்கியா 4ல் அது என்ன கூறுகிறது? 'ஓ,' நீங்கள், 'அது யோவானிடத்தில் நிறைவேறி விட்டது' என்று கூறலாம். அது அவ்வாறில்லை. யோவான் வந்த போது, அது மல்கியா 3-யை நிறைவேற்றினது. மல்கியா 4ல், அவர், 'கர்த்தர் பூமியை நியாயந்தீர்த்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பதற்கு சற்று முன்புள்ள நாளில்...' என்றார். பிறகு, யோவான் வந்த போது, தேவன் பூமியை அக்கினியால் சுட்டெரிக்காமல் இருந்ததால், அது அந்த நேரம் அல்ல. அவன் மல்கியா 3ஆக இருந்தான். மல்கியா 4 இப்பொழுதே உடனடியாக சம்பவித்தாக வேண்டும். அது இப்பொழுது தான் சம்பவிக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். 82இப்பொழுது, நாம் எதையும் யூகித்துக் கொண்டிருக்கவில்லை. நாம் அதைக் காண்கிறோம். தேவன் - பரிசுத்த ஆவியானவர் இங்கேயிருக்கிறார் என்பதை நாம் அறிவோம், மகத்தானவர், எலியாவின் தேவன், பரிசுத்த ஆவியானவர், கடைசி நாளின் சாட்சியானவர்- சபைக்குள் அவருடைய ஊழியத்தைக் கொண்டு வருகிறார், நம்முடைய கர்த்தர் செய்த அதே காரியத்தை. பிரதான ஆசாரியர் சிங்காசனத்தை விட்டு சபைக்கு இறங்கி வருகிறார். சபையானது வார்த்தையோடு தன்னைத்தானே முழுமையாக நிரப்பிக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் அவரால் வார்த்தையிடம் மாத்திரமே வர முடியும். அவர் வார்த்தையாய் இருக்கிறார். வார்த்தையானது ஒரு - ஒரு பஞ்சாங்கத்தினிடம் (almanac) வர முடியாது. அது ஏற்றதாக இராது. 83எனவே வார்த்தையானது வார்த்தையிடம் தான் வர வேண்டியுள்ளது. 'நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால்...' மனிதன் தேவனுடைய எல்லா வார்த்தையினாலும் தான் ஜீவிக்க வேண்டும். இதோ அது இருக்கிறது. அப்படியானால் நீங்கள் அதை விசுவாசித்து, அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் ஜெபிப்போம். உமக்கு நன்றி, கர்த்தாவே. இந்த அருமையான சபைக்கு நான் மீண்டும் ஒருபோதும் திரும்பி வராமல் இருந்தால், அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே என்னுடைய கரங்களில் இரத்தம் இருக்காது. நான் வெட்டியிருக்கிறேன், நான் கிழித்தெறிந்திருக்கிறேன், எல்லாவற்றையும் செய்திருக்கிறேன், கர்த்தாவே. ஒரு நபரைக் கொன்று போட அது போதுமானது போன்று தோன்றினது. அவர்கள் தொடர்ந்து அதைச் செய்து, இந்த ஒலிநாடாக்கள் இங்கே இருக்குமானால் - உலக முழுவதிலுமுள்ள அவர்கள் எல்லாரும் - அவர்கள் இதைக் கண்ட பின்பு, அவர்கள் தொடர்ந்து செய்து, ஒரு காந்த ஒலிநாடா இருக்கிறது என்பதை அறிவார்களானால்... இந்தக் காரியங்கள் சம்பவிக்கின்றன, யூகமல்ல, நீங்கள் யூகிக்கிற ஏதோவொன்றல்ல; ஆனால் வார்த்தையிலுள்ள ஆவிக்குரிய வெளிப்பாடான ஏதோவொன்று, மேலும் சம்பவிக்கப்பட வேண்டுமென்று நிரூபிக்கப்பட்ட ஏதோவொன்று. அப்படியானால், அந்நாளில் அங்கே நிற்கப் போகிற அன்பான பரிசுத்த ஆவியானவர் இக்காலையில் நமது மத்தியில் இருந்து, இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறார். தேவனுடைய பெரிய காந்த ஒலிநாடாவானது அந்நாளில் போட்டுக் காண்பிக்கப்படும். தேவனே, இப்பொழுது என்மேல் இரக்கமாயிரும். இந்தச் சபையின் மேல் இரக்கமாயிரும். இக்காலையில் இங்கேயிருக்கிற இந்தச் சபையாரின் மேல் இரக்கமாயிரும். இந்த ஏழை ஜனங்கள் மேல் இரக்கமாயிரும், கர்த்தாவே. அவர்களில் அநேகர் கள்ளத்தீர்க்கதரிசிகளின் மூலமாக எல்லாவிதத்திலும் வழிநடத்தப்பட்டு, வேதத்திற்குப் புறம்பான பொய்யான அற்புதங்களால் வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரத்தம், அக்கினி, புகை, ஓ தேவனே, அவர்கள் வேதத்திற்குப் புறம்பாக வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது அதேவிதமாகவே இருக்கும் என்று வேதம் கூறுகிறது. தேவனே, நீர் ஏதோவொன்றை தடுக்கி விழவைப்பதற்கு முயற்சிக்கிறீர் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். என்னால் என்ன செய்ய முடியும், தேவனே? என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை, தேவனே. ஒருக்கால் நீர் யாவற்றையும் அறியும் உணர்வைக் கொடுப்பவராக இருக்க முயற்சி செய்யலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள், அல்லது... கர்த்தாவே, நீர் அதை அவர்களுடைய இருதயங்களில் நேராக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அது நீர் தான் என்று அவர்கள் அறிவார்களாக. அது தமது வார்த்தையை சரி என்று நிரூபிக்கிற பரிசுத்த ஆவியாயுள்ளது. 84கர்த்தாவே, சிறிது நேரத்துக்கு முன்பு, அங்கே அநேக கரங்கள் மேலே உயர்த்தப்பட்டன, சபை அங்கத்தினர்களும் மற்றும் யாவரும் தங்கள் கரங்களை மேலே உயர்த்தினர். ஒவ்வொரு கரமும் மேலே உயர்த்தப்படுகிற போதும், அங்கே அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறதை நீர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தீர் - அவர்களுடைய நிலையை நீர் காண்கிறீர், அவைகளில் சில அறிக்கை செய்யப்படாத பாவமாக இருக்கின்றன. ஓ தேவனே, இரக்கமாயிரும். தங்கள் கரத்தை மேலே உயர்த்தியுள்ள ஒவ்வொருவரும் அங்கே புறம்பாக தேவனுடைய நியாயத்தீர்ப்பை ஒருபோதும் சந்திக்க வேண்டாம் என்று ஜெபிக்கிறேன். அவர்கள் அந்த நியாயத்தீர்ப்பிற்குத் தப்பித்து, நோவா நியாயத்தீர்ப்பின் மேல் சவாரி செய்தது போன்றும், ஆபிரகாமைப் போன்றும், எடுத்துக்கொள்ளப்படுதலில் சென்று, நியாயத்தீர்ப்பை விட்டு நீங்கியிருப்பார்களாக (இதை அருளும், கர்த்தாவே). இரக்கமாயிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது இந்த ஜனங்களை ஆசீர்வதியும். அவர்களுடைய பாவங்களை மன்னியும். பரிசுத்த ஆவியானவரின் இனிமையும், கனிவும் (mellowness), மென்மையும் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அமருவதாக. கர்த்தாவே, நீர் எங்கள் தேவனாய் இருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன். ஓ, நான் உம்மைத் தொழுது கொள்கிறேன், நீர் ஷாரோனின் ரோஜாவாயிருக்கிறீர், நீர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம். ஓ, என்னால் என்னுடைய கரத்தை நீட்ட முடியுமானால், நான் அதை உம்மைச் சுற்றிலும் போட்டுக் கொள்கிறேன், கர்த்தாவே. நான் பாத்திரவானல்ல... நான் உம்முடைய காலை அல்லது ஏதோவொன்றை தொடட்டும், பிதாவே. நீர் சரியாக இங்கேயே, இங்கே இந்த மேடையிலேயே நின்று கொண்டிருக்கிறீர் என்பதை நான் அறிவேன், அந்த ஆணி கடாவப்பட்ட மகிமையானவராகிய நீர் மிக அருகில் இருக்கிறீர், அவ்வாறு... நீர் வேறொரு உலகத்தில், வேறொரு பரிமாணத்தில் இங்கே நின்று கொண்டிருக்கிறீர். கர்த்தாவே, உம்முடைய அழுத்தமும், உம்முடைய ஆவியின் வல்லமையும் எங்கள் மாம்சத்தின் நடுவில் அசைவாடுகிறதை நாங்கள் காண்கிறோம். ஓ, எங்களைப் போல ஒழுக்கங்கெட்ட ஜனங்கள்! பிறகு, நீர் எங்கள் மத்தியில் அசைவாடி, உம்முடைய வார்த்தையை நிறைவேற்றுவதற்கு உம்முடைய இரத்தத்தினால் எங்களை பரிசுத்தப்படுத்தி, கடந்து போன காரியங்களையும், இனிவரப்போகும் காரியங்களையும், நிகழ்காரியங்களையும் நாங்கள் அறிந்து கொள்ளும்படி செய்வதற்காக உம்முடைய பரிசுத்த ஆவியானவரை எங்களுக்குள் நெருக்குகிறார். 85ஓ தேவனே, நீர் தேவனாயிருக்கிறீர். கர்த்தாவே, நான் உம்மை எவ்வளவாய் நேசிக்கிறேன், நான் உம்மை எவ்வளவாய் தொழுது கொள்கிறேன்! ஓ, எங்களால் உமக்காக ஒரு நாமத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, சமாதானப்பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா; ஓ, பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே, ஷாரோனின் ரோஜாவே; இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவருமாயிருக்கிறவரே; தாவீதின் வேரும் சந்ததியுமாயிருக்கிறவரே; வார்த்தையே, ஜீவனே, சந்தோஷமே, எல்லாமுமாயிருப்பவரே: நீரே தேவன்! கர்த்தாவே, நான் உம்மை எவ்வளவாய் நேசிக்கிறேன். நான் உம்மைத் துதிக்கிறேன், உம்மைத் தொழுது கொள்ளுகிறேன், ஒப்பற்றவரே, மகத்தான நித்தியமானவரே, மாம்சமாகி எங்கள் மத்தியில் வாசம் செய்பவரே, இப்பொழுது இங்கே ஒரு அக்கினிஸ்தம்பத்தில் இருந்து இங்கே அதனூடாக சுற்றிலும் அசைவாடி, முதலாவது குமாரனாகிய, ஒரேபேறான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு என்று அழைக்கப்பட்ட ஒரு சரீரத்தில் இருந்த சமயத்தில் இருந்த அதே அக்கினிஸ்தம்பமாக உம்மைத்தாமே காண்பித்துக் கொண்டிருக்கிறவரே - இப்பொழுது நீர் இன்னும் தேவனாயிருக்கிறீர் என்று தெரிந்து கொள்ளப்பட்ட குமாரர்களின் வழியாக காண்பித்துக் கொண்டிருக்கிறீர். நாங்கள் இழக்கப்படவில்லை. நாங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் விழுந்து போகவில்லை; நாங்கள் ஸ்தாபனங்களில் இல்லை; நாங்கள் கோட்பாடுகளில் இல்லை; ஆனால் நாங்கள் எங்கள் இரட்சகருடைய வல்லமையிலும் உயிர்த்தெழுதலிலும் இருக்கிறறோம். கர்த்தாவே, உமது நன்மைக்காக நாங்கள் உம்மை எவ்வளவாய் துதிக்கிறோம்!..